‘நிகழ்ந்தவையும் புனைந்தவையும் ஊடுகலந்த ஒரு யதார்த்தம். கூரிய அங்கதமே நாவல் முழுக்க சிலுவைராஜை நமக்கு அணுக்கமாக ஆக்குகிறது. தமிழிலக்கியத்தின் முதன்மையான இலக்கியப் படைப்புகள் சிலவற்றில் சிலுவைராஜ் சரித்திரமும் ஒன்று.’
ராஜ் கௌதமன் (ஆகஸ்ட் 25, 1950), தமிழ் சங்க இலக்கியங்களின் ஊடாக தமிழ் பண்பாட்டு வளர்ச்சியை ஆய்வு செய்தவர். மார்க்ஸிய, பின்நவீனத்துவ, தலித்திய பார்வை கொண்டவர். பேராசிரியர், நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர். இலக்கியமும், அழகியலும் எவ்வாறு அதிகார வர்க்கத்தின் கருத்தியலை நிறுவிக்கொள்ள உதவின என்பதை தன் ஆய்வுகள் மூலம் விளக்கியவர்.
விருதுநகர் மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலை அருகில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் பிற்படுத்த பட்ட சாதியினர் வாழும் ஒரு தெருவில் பிறந்து வளரும் சிலுவைராஜ் எனும் சிறுவனின் வாழ்கையை எப்படி, குடும்ப , பொருளாதார,சாதி ,மற்றும் மதம் சார்ந்த சமூக கட்டமைப்பு வடிவமைக்கிறது என்பதை சொல்லும் ஒரு அற்புதமான சுயசரிதை நாளாகமம்.
எங்க மாவட்டக்காரர் ராஜ் கவுதமன்னின் வடிகட்டி இல்லாத ஒரு யதார்த்தவாத சுயசரிதை .சிலுவைராஜின் இளமை மற்றும் வாலிபப்பருவதை மிக நுணுக்கமாகவும் , விரிவாகவும் தணிக்கை இல்லாமல் விருதுநகர் மாவட்ட மொழி நடை மற்றும் வட்டார வழக்கில் சொல்லி இருப்பது இந்நூலின் சிறப்பு. இதில் கூறப்பட்டிருக்கும் பல விடயங்களை என்னால் மனதுக்கு நெருக்கமாக தொடர்புபடுத்தி பார்க்க முடிந்தது ஒரு சிறப்பு. சிலுவைராஜின் W.புதுப்பட்டி என் தந்தையர் பிறந்து வளர்ந்த ஒரு விருதுநகர் மாவட்ட சிறுகிராமத்தை அதிகமாக நினைவு படுத்தி என் நெஞ்சுக்கு மிக நெருக்கமாகிவிட்டது.
நம்மில் பலருக்கு பரிச்சயம் இல்லாத தாழ்த்தப்பட்ட ஏழை மக்களின் வாழ்க்கைக்குள் நம்மை கையை பிடித்து கூட்டிச்செல்கிறார் ராஜ் கவுதமன் . ஒரு திரைப்படத்தை போல் எப்படி சிலுவைராஜின் நாட்கள் சிரிப்பும் , அழுகையும் , பயமும் , கனவுகளும் , ஏமாற்றங்களும் , வலியும் , சாதனைகளும் , காதலும் , சேட்டைகளும் , கொள்கை பரிணாமங்களும் நிறைந்ததாக இருப்பதை துல்லியமாக இந்த நூலில் விவரிக்கிறார் ஆசிரியர் .
சிலுவைராஜின் தகப்பனாரின் மூர்க்கத்தனமான கண்டிப்பும் ஒழுங்குபடுத்தும் முறையும் இந்த காலத்தில் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது . ஆனால் அப்பிடிப்பட்ட சூழ் நிலையில் தான் நம் அப்பாக்களும் , அம்மாக்களும் வளர்ந்தார்கள் என்று நினைக்கும் பொழுதும் , எவ்வளவு தூரம் அவர்களின் மனம் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை நினைக்கும் பொழுது மனம் சங்கடப்படுகிறது. பெண்களுக்கு எப்படி நம் சமூகம் அவர்களுக்கு தகுதியான அங்கீகாரத்தையோ , அடையாளத்தையே தர மறுத்து அவர்களை இழிவு மட்டுமே செய்கிறது என்பதை கதை படிக்கையில் நீங்கள் அறியலாம்.
மதம் மற்றும் சாதிய அமைப்புகளை பற்றி நுண்ணறிவு மிக்க எண்ணங்களும் விவாதங்களும் நிறைந்த நூல். ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் உள் கட்டமைப்பும் , எப்படி அதனுள்ளேயும் சாதிய பாகுபாடுகள் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறார் ஆசிரியர். பாமாவின் கறுக்கும் இதைப்பற்றி பேசுகிறது. பாமா அவர்கள் ராஜ் கவுதமன்னின் சகோதரி என்று அறிந்து ஆச்சரியப்பட்டேன். கம்யுனிசத்தையும் , திராவிட இயக்கத்தையும் , மத நம்பிக்கையும் , நாத்திகவாதத்தையும் ஆதரித்தும் சில இடங்களில் விமர்சித்தும் நம் சிந்தனையை தூண்டுகிறார் ராஜ் கவுதமன்.
மொத்தத்தில் , ஆரம்பித்தது முதல் முடியும் வரை கீழே வைக்கமுடியாமல் வாசித்த சில நூல்களில் இந்நூலும் ஒன்று. சிலுவைராஜுடன் ஒரு நெருங்கிய பயணம் இந்த சிலுவைராஜ் சரித்திரம்.
இதை வாசித்தவுடன் நாமும் நம் சரித்திரம் எழுதலாமா என்ற விபரீதம் எண்ணம் தோன்றியது சரி அது ஒருபுறம் இருக்கட்டும். ராஜ் கௌதமன் ஆய்வாளர் மற்றும் புனைவு எழுத்தாளர் பல முக்கிய விருதுகளை பெற்றவர். கிட்டத்தட்ட அவரின் சுய சரிதை என்று இதை சொல்லலாம். 1950 ல் கிராமங்களில் வளர்ந்த சிறுவர்கள் வரலாற்று பதிவு என்று இதை சொல்லலாம் ஏனென்றால் இன்று குழந்தைகள் வளரும் விதம் முற்றிலும் மாறிவிட்டது. குழந்தைகள் இன்று வீட்டைவிட்டு வெளியே வருவது இல்லை ஆனால் அன்று எல்லாம் வீட்டீர்கே வரம்ட்டார்கள் அப்படி ஊர் சுற்றுவார்கள். சிலுவையும் இப்படி சகட்டுமேனிக்கு ஊரு சுற்றும் சிறுவன் அப்பாவிடம் உதை படும் சிறுவன். இராணுவத்தில் இருக்கும் அவன் அப்பா ஊருக்கு வரும்போதெல்லாம் அடி அடி அடி . ( ஆசிரியர் ஒரு உரையில் அவர் அப்பா அடித்து அடித்து ஒரு காது சரியாக கேட்காமல் ஆகிவிட்டது என்று சொல்கிறார்) சிலுவை தன் அப்பாவை அப்பா என்றே அழைப்பது இல்லை. (தீவிரமாக ஒடுக்குமுறைக்கு ஆளான நானும் என் அப்பாவை அப்பா என்று அழைத்தது இல்லை இன்று அப்படி தான்) . சிறுவர்கள் சேட்டை விளையாட்டுகளை இவ்வளவு அழகாக அங்கதோடு வெளிப்டுத்தியதே இதன் சிறப்பு... அவ்வளவு பகடி கையில் எடுத்தால் ஒரே சிரிப்பு தான். சிலுவை வளர வளர பகடி குறைந்து கொண்டே வருகிறது. சிலுவை சமுகத்தோடும் மரபோடும் தொடர்பு வரும்போது தனது சந்தேகங்களால் சமுக எதார்த்ததை கேள்விக்குள்ளாக்குகிறான். கிருத்துவம் பரவலாக்க பட்டபோது அது அனைத்து சடங்குகளையும் இந்து மதத்தை அடிப்படையாகவே கொண்டு இருக்கிறது. உண்மையில் மக்கள் சாதிய ஒடுக்கு முறையில் இருந்து தங்களை காத்துக் கொள்ளவே கிருத்துவம் போகிறார்கள் அதே நேரத்தில் இந்து மதத்தையும் கைவிட மணம் இல்லை ... சாதிய ஒடுக்கு முறை இங்கு நாயக்கர்கள் வந்த பிறகே கடுமையாகி இருக்கிறது. இதில் சாதிய தீண்டாமையை கடைபிடிப்பவர்களாக நாயக்கர்கள் தான் வருகிறார்கள். சிலுவை வளர வளர அவனது இலட்சிய விளையாட்டுகள், திருவிழாக்கள் , திருட்டு விளையாட்டு, அவனுக்கு அன்னியமாகி விலகும் வேலையில் பெண் காதல் என்று வேறோரு உலகம் வருகிறது. பிறகு மார்க்ஸ் புரட்சி என்று வேறு உலகம் பிறக்கிறது.... படித்து முடித்து வேலை கிடைக்மல் அலைந்து...... இந்து மதம் மாறி ..... முடிகிறது.... இவ்வளவு பெரிய நூல் பாடிச்சும் சிலுவை சரித்திரம் முடியலை அடுத்த இலண்டனில் சிலுவை ராஜ் இரண்டாம் பாகம் இருக்கிறது போல.... இதை முடிக்கவே எனக்கு பொருமை பத்தல... ஆக இலண்டனில் சிலுவை ராஜ் படிக்கும் எண்ணம் இல்லை... ஆனால் இது சிறந்த நூல் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை...
ஒரு ஊர்ல சிலுவைராஜ்னு ஒருத்தன் இருந்தாம்னு ஆரம்பிச்சு அவன் குடும்பம், அவனது நண்பர்கள், அவன் பிறந்து வளர்ந்த ஆர்.சி தெரு, அவனின் சேட்டைகள், விளையாட்டுகள், அவனது பள்ளி பருவம், மேல்நிலை பள்ளி விடுதி வாழ்க்கை, இளங்கலை, முதுகலை படிப்பின் அனுபவங்கள், அங்கு சந்தித்த மனிதர்கள், காதல் போல் தோற்றம் உருவாக்கிய உறவுகள், கிருத்துவ மதம் சார்ந்த அவனது எண்ணங்களின் பரிணாம வளர்ச்சி, மார்க்சியம் போனற அரசியல் தத்துவங்களின் அவனது நிலைப்பாடு, இவற்றுடன்.. அவனை விட்டு விலகாது அவனோடு ஒட்டி உறவாடிக்கொண்டு வரும் சாதி என மொத்த சரித்திரத்தையும் தோளில் கை போட்டு கதை சொல்கிறார் ராஜ் கௌதமன்.
கண்மணி குணசேகரனின் "நெடுஞ்சாலைக்கு" பின் எளிமையாகவும் நம்முள் ஒரு விவாதத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்து ஒரு நாவலை வாசிப்பது சொகமாக இருப்பதும் இந்த புத்தகத்தில் தான்.
மற்றபடி அண்ணாவை ஒரு சிறந்த பேச்சாளர் என்று மட்டும் அடையாளப்படுத்தி திராவிட இயக்கங்களின் சமூக விடுதலை பங்கினை குறைத்து மதிப்பிட்டு எம்ஜிஆரை விதந்தோந்தும் அந்த ரசிக மனப்பான்மை.. சிலுவைராஜ் என்ற கதாப்பாத்திரம் தான் ராஜ் கௌதமன் என்ற வரலாற்றை புரிந்தவர் அல்ல என்று நினைத்து ஆசுவாசிக்கிறேன்.
This semiautobiographical novel by Raja Gowthaman is about the life of Siluvairaj, a Roman Catholic Christian belonging to Pariah caste. We travel through right from the early childhood of Siluvai to his troubled adult life. The novel is written in a language which is light-hearted and satirical. Although Siluvai faces multiple injustices right through his life owing to the caste background, his education which makes him isolated from within his community also to the outsider, we see the narrator use satire to face the harshness of reality. Siluvai life is a microcosm on which various other changes that are happening in the society get reflected. Right after independence, we see Siluvai's father who has escaped the harshness of the caste reality by joining the military. This opening that the modern life provides makes Siluvai's family little different to the traditional Paraiah household whose men are daily wage laborers in farmland. Siluvai's father treats him with a level of high handedness whenever he comes home on leave. Siluvai finds his father oppressing and feels relieved when he is not around. We see Siluvai's early life which is characterized by a high degree of naughtiness and independence and fun that is the hallmark of any small village. He is repeatedly treated badly owing to the caste but many times he is not able to understand it clearly as it is not out in the open. Even men belonging to his same caste sometimes treat him badly owing to difference within the same caste belonging to different subcastes. This is seen throughout the novel where the caste factor is always lurking closer ready to pounce on him and hurt him.
Siluvai is taken to education as he truly realizes that through education he would be able to overcome the barrier of caste. We see extraordinary detailing in each stage of his life, the life in the village school, the disciplined Christian schools with its routine of prayers and the impact religion has on Siluvai. He goes on to study in boarding schools in Madurai where he stays in a hostel. This face of Siluvai more and more separated from the native village in a way isolates him from his father. Because of his education, he could not go back to his friends who typically stop schooling to work as laborers.
In each stage of his life, we see that society changes are also getting reflected on his life. Like the rise of the Dravidian movements, the Shivaji vs MGR debate. The coming to power of DMK unsettling the traditional Congress rule each of this has various impacts in his life. Like Congress was much more supportive of the Dalits it seems as we see when DMK comes to power the middle caste-like Saliyar try to take advantage and wrest control of power over the Pariahs belonging to Roman Catholic religion. In a similar vein, we see the growing atheistic tendency to which Siluvai gets influenced into due to the rise of Dravidian and communist movements.
After college life, we see growing corruption and favoritism affecting meritorious students like Siluvairaj. With the split in the Dravidian movement we see Siluvai himself moving towards a more sympathetic attitude towards the communist movement. He goes on to study MA in Tamil and works as a tutor in Tamil in Palayankottai for sometime before losing the job due to favoritism and caste bias even within the Christian fold. This leaves Siluvai disillusioned and being jobless had to face the ire of his family and the village community. He is repeatedly made fun of due to the fact that in spite of his higher education he could not win his own bread which a daily wage laborer could earn. This stage of life we see Siluvai completely disillusioned and you feel the suppressed anger and resentment coming out of him. The novel ends in a stage where Siluvairaj seems to have lost faith in all that he has believed and he converting back to Hinduism to get reservation benefits back.