Jump to ratings and reviews

இரும்பு பட்டாம் பூச்சிகள் (க்ரைம் நாவல்)

Thriller Based Fiction Written By Rajeshkumar

316 pages, Kindle Edition

Published February 22, 2018

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (20%)
4 stars
2 (40%)
3 stars
2 (40%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 1 of 1 review
Profile Image for Saranya Dhandapani.
Author 2 books183 followers
August 29, 2026
#441
Book 42 of 2026- இரும்பு பட்டாம்பூச்சிகள்
Author- ராஜேஷ்குமார்

ராஜேஷ்குமார் புத்தகம் என்றாலே வேகமான கதைக்களம், அடுத்தது என்ன நடக்கப்போகுது என்ற curiosity, கடைசி வரை சுவாரஸ்யமாக வாசிக்க தோன்றும் கதைக்களம். இந்த புத்தகமும் அப்படித்தான். வாசிக்கத் தொடங்கி ஒரே நாளில் படித்து முடித்த கதை.

கதையின் முக்கிய கதாபாத்திரம் லயா. ஒரு வார இதழுக்காக சாதனை படைத்த இளைஞர்களைப் பற்றிய கட்டுரை எழுதும் பத்திரிகையாளராக இருக்கும் அவள், மருந்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான பிரேம்குமாரை நேர்காணல் செய்யச் செல்கிறாள்.பிரேம்குமார் தனது வாழ்க்கையில் சந்தித்த மிகப்பெரிய இழப்பான தன் தாயின் மரணத்தைப் பற்றியும், விலை உயர்ந்த மருந்துகளை வாங்க முடியாததால் தன் தாயை இழந்ததையும் லயாவிடம் பகிர்ந்து கொள்கிறான். இதன் பின்னணியில் மருந்துத் துறையைச் சுற்றியுள்ள ஒரு முக்கியமான பிரச்சினையும் கதைக்குள் வருகிறது.

ஆனால், பிரேம்குமாரின் வீட்டிற்குச் செல்லும் லயா அங்கு எதிர்பாராத ஒரு சம்பவத்தை எதிர்கொள்கிறாள். அதன்பிறகு அவள் சிக்கிக் கொள்ளும் மர்மங்களும், அவற்றின் பின்னால் இருக்கும் உண்மையைத் தேடும் முயற்சியும் தான் கதை.

ராஜேஷ்குமாரின் வழக்கமான எளிமையான மொழிநடையும் வேகமான கதையோட்டமும் இதிலும் உள்ளது.மொத்தத்தில், பரபரப்பான திருப்பங்களுடன் சமூக அக்கறையையும் இணைத்துச் சொல்லப்பட்ட ஒரு சுவாரஸ்யமான படைப்பு.
Displaying 1 - 1 of 1 review