திருமண வாழ்வின் வழியாக முதன் முதலாகப் பெண் ருசியைக் கண்டவன் அவள் உள்ளே தொலைந்து போய் பித்தேறி அவளுக்காகத் தன்னையே மாற்றிக் கொள்பவனின் கதை இது.
ஆண் வாழ்வில் திருமணம் என்ற நிகழ்வு நடந்தேறி அவனுக்கென ஒருவள் வந்த பிறகு அவனின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களும் உறவுகளைக் கையாளும் முறையையும் கதைகளமாகக் கொண்டு அவனைச் சுற்றி நடப்பவைகளைக் கொண்டு வெற்றிகரமான தொழிலதிபனாக மாறும் ஜோஷனை பற்றிச் சொல்வது தான் “மயக்குது உன் மதிமுகமே”.
பள்ளி பருவத்தில் கொண்ட ஈர்ப்பை காதலென நினைத்து அவனுடன் ஓடிப்போக முயன்ற ஜென்ஸி தடுத்து நிறுத்தப்பட்டாலும் அந்த அவச்சொல் அவளுடனே தங்கிப்போய் விடுகிறது.
ஜென்ஸி போட்டோவை பார்த்து மகன் ஜோஷன் மயங்கியதால் போராடி அவர்களுக்குத் திருமணத்தை நடத்தி வைக்கும் மரியம் கதை முழுவதும் தன் தாய் அன்பால் நிறைவாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரமாக வருகிறார். கதையில் இவரின் கதாபாத்திர அமைப்பே முக்கிய ஆதாரமாக தாங்கி இருக்கிறது.
ஓடிப்போன பெண்ணா தனக்கு மனைவியாக வரவேண்டும் என்று வேதனைபட்டாலும் காதலுடன் கொண்ட காமம் ஜோஷ்னாவின் மனதை முழுமை கொள்ள செய்கிறது.
திருமணத்துக்குப் பிறகு மனைவியைப் பிரிய விரும்பாமல் ஊரிலே தனக்குத் தெரிந்த தொழிலை தொடங்கியவன் படிப்படியாக அதிலே நிலைப்பெற்று குழந்தை பிறக்கும் வேளையில் நிலைத்து நின்றுவிடுகிறான்.
புதுமாப்பிள்ளையாக ஜோஷனாவை தொடக்கத்திலே காட்டியதால் கட்டிலுடன் ஜென்ஸியை புரட்டிப் போடுவதே கதையின் மையமாக எழுதப்பட்டிருக்கிறது.