உதயசங்கர் ( 1960 ) சொந்த ஊர் கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம், 1980 – களிலிருந்து சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம், கட்டுரை, ஆகிய துறைகளில் இயங்கி வருகிறார். இதுவரை எட்டு சிறுகதை நூல்கள், ஒரு குறுநாவல் தொகுப்பு, ஐந்து கவிதை நூல்கள், ஒரு சிறார் பாடல்கள் நூல், மூன்று சிறார் கதைகள் நூல்கள், ஒரு சிறார் நாவல், மலையாளத்திலிருந்து பதினைந்து நூல்கள், ஆங்கிலத்திலிருந்து ஒரு நூல், மூன்று கட்டுரை நூல்கள், மலையாளத்திலிருந்து குழந்தைகளுக்கான படக்கதை நூல்கள் நாற்பது, ஒரு மருத்துவ நூல், ஆகிய நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. தமிழ் இலக்கிய விமரிசகர் க.நா.சு., கரிசல் இலக்கியப்பிதாமகர் கி.ராஜநாராயணன், ஆகியோரின் பாராட்டுகளைப் பெற்றவர்.