ஜவுளித்துறையானது, ஏற்றுமதியின் மூலமாக பலகோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி நம் நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கிறது என்பது யாவரும் அறிந்ததே. அந்த துறையில் நாமும் உள்ளோம் என்பதை நினைக்கும்போது பெருமிதம் மேலும் கூடுகிறது.இந்த துறையில் எனக்கு ஏற்பட்ட பா.கே.ப. அதாவது பார்த்தது, கேட்டது, படித்தது மற்றும் அதன்மூலமாக ஏற்பட்ட அனுபவத்தைக் கொண்டு ஒரு புத்தக வடிவமாக கொண்டு வரவேண்டும் என்ற நீண்ட நாள் விருப்ப எண்ணத்தினால் இப்பொழுது உங்களிடத்தில் தவழ்கிறது இந்த புத்தகம்.சில பேர் கார் ஓட்ட கற்றுக்கொள்ள டிரைவிங் ஸ்கூலை நாடுவதுண்டு. சில பேர் சொந்தமாக கார் வாங்கி ஓட்ட கற்றுக் கொள்வார்கள். எனக்கு எதேச்சையாக இரண்டாவது ரகம் வந்தமைந்தது.