கதவை திறந்தவள், அவளாகத்தான் இருக்கவேண்டும், உள்ளே வரச்சொல்லி அழைத்தாள். நுழைந்து உட்கார்ந்தவுடன், அனந்து கேட்டார், ”ராகவன் இல்லையா?” ”அத்திம்பேர் தானே நீங்க?” கேள்வி அவ்வளவு ரசமாக இல்லை, விசாரணையாகவும் இல்லாமல், அறிமுகமாகவும் இல்லாமல் ஏளனமாக கேட்கப் பட்டது. அனந்து அவளை ஒரு பார்வை பார்த்தார். நைட் டிரஸ்ஸாக இருக்க வேண்டும், ஒரு லேஸ் ஸ்ராப் வைத்த சட்டையை அணிந்திருந்தாள். அது முழங்காலுக்கு கொஞ்சம் கீழே வந்து நின்று விட்டது. அழகிதான், ஆனால் இது ஒரு வகை அழகு, இளம் வயசு ஆண்களை ஆக்ரஷிக்கிர அழகு. பெரியவர்கள் தலை குனிந்து கொள்ள வைக்கும் அழகு. தன் அழகை பரை சாற்றி பலர் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் அவளுக்கு இருந்தது தெரிந்தது. ”நான் அனந்தபத்மனாபன் அட்வகேட், இவ தா