சூழ்நிலைகளும் நடக்கும் சம்பவங்களுமே அதன் தொடர்புடைய மனிதர்களின் மனநிலையை முடிவு செய்கிறது.
காதலித்தவளே மனைவியாக வந்தாலும் அவளைக் கைப்பிடித்த நொடியை வெறுப்பவனுக்குள் இருக்கும் வன்மத்திற்கு அவளைப் பலி கொடுக்கத் துணிந்தவனைச் சாந்தப்படுத்தியது எது என்று சொல்வது தான் “நிலவே உந்தன் நிழல் நானே”.
எதற்கெடுத்தாலும் மிதுலாவை உதாரணமாக்கி தந்தை திட்டுவதைப் பொறுக்க முடியாமல் அவளுக்குக் கெட்ட பெயர் வர வேண்டும் என்று வினோத் செய்த சூழ்ச்சியால் மிதுலாவின் கழுத்தில் வசீகரன் தாலி கட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இவ்வளவு வருடமாகத் தான் உருவாக்கிய வைத்திருந்த நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி மிதுலா தன்னை மணந்தால் என்பதால் அவளை வார்த்தைகளால் குத்திக்கொண்டே இருந்தாலும் அவளிடம் இருந்து வரும் காதலால் திக்குமுக்காடி போகிறான் வசீகரன்.
மனைவியைக் காயப்படுத்த வேண்டும் என்று வசீகரன் உதித்த சொல்லால் உண்டான பிரிவு அவனுள் இருக்கும் காதலை வெளிப்படுத்த வைக்கிறது.
மிதுலாவை பள்ளியில் படிக்கும் வயதிலே காதலிக்கத் தொடங்கிய வசீகரன் முறையாக அவளை மணமுடிக்க வரும் நேரத்தில் வினோத் உண்டாக்கிய குழப்பத்தால் மற்றவர்களுக்குத் தான் காட்சி பொருளாக மாறி கோபத்தை அடக்கத் தெரியாமல் தடுமாறியவன் அடுத்தவர்களின் பக்கத்து நியாயத்தைக் கேட்ட பிறகே தன்னை மட்டுப்படுத்திக் கொண்டு மனைவியின் மீதான காதலை எடுத்துரைக்கிறான்.
மிதுலா தன் மனசாட்சியுடன் பேசுவதாக வரும் இடங்கள் எல்லாம் எரிச்சலை உண்டாக்குகிறது என்று சொன்னால் மிகையல்ல.