மூன்று கொலைகள் நடந்தேற அதன் விசாரணையில் போலீஸுக்கு கிட்டும் ஒரே தடயம் காற்றின் நிறம் கறுப்பு என்ற வாசகமே,கொலைகள் நடைபெற்ற பகுதியில் இருக்கும் கார்பைட் கம்பெனியின் மேல் சந்தேகம் எழ அதை விசாரிக்கச் சென்ற இரு போலீஸ் அதிகாரிகளும் கொல்லப்பட்டு மறைக்கப்பட்டதால் அதில் மேலும் மர்மம் நீடிக்கிறது.
அந்நிய நாட்டிற்குத் துணைபுரிய பணத்தை வாங்கிக் கொண்டு மெதில் ஐஸோ சயனைட் என்ற விஷவாயுவை காற்றில் கலந்து அந்நகரத்து மக்களைக் கொல்வதுடன் அல்லாமல் வாயுவின் தரத்தை பரிசோதிக்கவும் கார்பைட் கம்பெனியில் இருக்கும் அதிகாரிகள் காற்றில் கலக்க போகிறார்கள் என்பதை அங்கே வேலை செய்பவனுக்குத் தெரியவந்ததால் அவன் காதலியுடன் கொல்லப்பட்டிருக்கிறான் என்பதை விவேக் கண்டறிந்ததுடன் அவர்களின் முயற்சிகளையும் தடுத்துவிடுகிறான்.