மற்றவர்களால் உண்டாக்கும் ஏளனங்களே குழந்தையின் மீதான வன்முறையாக உருமாறி அதன் குணங்களைச் சிறுக சிறுக சிதைத்துவிடும்.
சொத்துக்காகத் தம்பியே தனக்கு விஷம் வைத்ததால் தன் மனைவியையும் விட்டு வைக்காமல் அவளிடம் அத்துமீறுவான் என்பதைத் தெரிந்து கொண்டவர் இறப்பதற்கு முன் தன் நண்பனிடம் மனைவியை ஒப்படைக்கிறார்.தந்தை இறந்த பிறகு தாய் வேறு ஒருவனை மணந்து கொண்டதை புரிந்து கொள்ள முடியாத வயதில் இருக்கும் பிரம்மாவின் மனதை தன் துர்போதனைகளால் தாயிடம் இருந்து அவனை விலக வைத்த சித்தப்பாவினால் பெண்கள் பற்றிய தவறான அணுகுமுறையிலே வளர்ந்து போலீஸ் அதிகாரியாக மாறினாலும் தனிப்பட்ட வாழ்வில் அரக்க குணத்தையே அதிகம் வைத்திருக்கிறான் பிரம்மா.
பணத்தைக் காட்டி கல்லூரி மாணவிகளைத் தவறான வழியில் அழைத்துப் போன காமேஷை என்கவுண்டரில் பிரம்மா கொன்றுவிடுவதால் அவனைப் பழிவாங்குவேன் என்று துடிக்கும் காயத்ரி அண்ணன் காமேஷை பற்றி எதுவும் தெரிந்து வைத்திருக்காமல் இருப்பது அவளுக்கு நன்மையும் தீமையையும் சேர்த்தே வரவைக்கிறது.
தலையில் அடிப்பட்டுக் கடந்த கால நினைவுகளை மறக்கும் பிரம்மாவிற்கு காயத்ரியின் முகம் மட்டும் முதலில் லேசாக வந்து போவதால் அவளைத் தேடி மிரட்டி தன்னை மணந்து கொண்டு தனிமையின் பிடியில் இருந்து வெளியேறுகிறான்.
தாயை பற்றி சித்தப்பா சொன்ன வார்த்தைகளுக்காகவே தாயிடம் இருந்து பதினைந்து ஆண்டுகள் விலகி இருந்தவன் தவறை உணர்ந்த நொடியில் அவனுக்கான குடும்பம் விரிவடைகிறது.
கடந்த கால நினைவுகள் வந்தால் எங்கே தன் அண்ணனை காரணம் காட்டி விட்டு விடுவானோ என்று பயந்து கொண்டு நாட்களைக் கடத்தும் காயத்ரியை தேற்றி மூன்று வருடங்களாக யாருக்கும் தெரியாமல் தன் மனதிலே பிரம்மாவின் மீது அவள் வைத்திருக்கும் காதலை வெளிப்படுத்த வைத்தவன் அவளின் பயம் தேவையற்றது என்பதையும் புரிய வைத்துவிடுகிறான்.
ஹீரோவின் புகழ்பாடி அவன் அப்படி இப்படி என்று இவ்வளவு பக்கங்களைத் தேவையில்லாமல் இழுத்தது படிக்கும் போது சலிப்பையே உண்டாக்குகிறது.
பக்கங்கள் குறைவாகச் சொல்ல வந்ததை வார்த்தைகளில் கட்டுப்படுத்தி இருந்தால் பிரம்மா கொண்டாடப்பட்டிருக்கலாம்.
Forgetting one's own identity how a cop manages to move on with stress, anger management and grudge of female lead is what this plot is all about. A good romcom. If you like strong, brave male leads then this plot is a piece of cake on your plate.