காதல் எல்லோருக்கும் அமைவதில்லை! தனக்கொரு காதல் அமையவில்லையே என்ற மனக்குறையுடன், பெற்றோர் பார்த்து நிச்சயிக்கும் மணமகனை அரைமனதாகக் கரம் பிடிக்கும் ஷைலஜா... மிக இயல்பாய் தனது குண வசீகரத்தால் அவளைக் கவரும் விசு... இவர்களது வாழ்வில் அன்பு, சிறு தூறலாய்த் துவங்கி அடைமழையாய்ப் பிரவகிக்கும் அழகிய தருணங்கள்... பெற்றோர் பார்த்து நிச்சயித்த மணமகனைக் கரம் பிடிக்கும் ஷமீம்... அவளுக்கு நேரும் துயரங்கள்... அத்துயரங்களை அவள் மனோவலிமையுடனும் இறைப்பற்றுடணும் எவ்வாறு கடக்கிறாள்? அன்பின் அடைமழை அவளுக்கு வாய்த்ததா? வாசித்து அறியுங்கள்... அன்பின் அடைமழைக் காலம்!