பாரதி வழியிலே குட்டி பதினாறடியாக பாய்ந்து தமிழ் இலக்கியத்தைத் தானும் வளப்படுத்தி ஒரு படைதிரட்டி வலுப்படுத்தச் செய்ததுக்காகவே வ.ரா. 'பெரிய எழுத்தாளன்'. பாரதியின் சீடன் மணிக்கொடித் தலைவன் ஆனான். அவர் பேனாவிலே வளர்ந்த மணிக்கொடி ஒரு பத்திரிகையாக மட்டும் இல்லை. ஸ்தாபனமாக மட்டும் இல்லை. ஒரு இயக்கமாகவே இருந்தது. தமிழ் இலக்கியம் அதுவரை காணாத சில இலக்கிய உருவங்கள் பிறக்க, வளர பின்னாலும் உண்டாக ஏற்பட வகை செய்த ஒரு இலக்கியத் தலைவன் வ.ரா. 'தமிழ்நாட்டில் ஆழ்ந்த கருத்துக்களோடு எழுதுகிற முதல் தரமான எழுத்தாளர் வ.ரா.' என்பது அவரது தோழர் டி. எஸ். சொக்கலிங்கம் கருத்து. ந. பிச்சமூர்த்தி 'கொள்கைகளுடன் பழகியவர் வ.ரா.' என்று கூறி இருக்கிறார். எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்றĬ