Jump to ratings and reviews
Rate this book

மண்ணாசை [Mannasai]

Rate this book
சங்கரராமின் 'மண்ணாசை'யுடன் தமிழ் நாவல் இலக்கிய அந்தஸ்தும் கனமும் பெற்றது. சங்கரராம் பின்னர் பல நாவல்களை எழுதினார் என்றாலும், அவை மண்ணாசையின் இடத்தை எட்டியும் தொடவில்லை. - க. நா. சு.

283 pages, Kindle Edition

First published January 1, 1938

7 people are currently reading
42 people want to read

About the author

Sankararam

2 books
T. L. Natesan

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
9 (47%)
4 stars
6 (31%)
3 stars
2 (10%)
2 stars
2 (10%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Kalaiselvan selvaraj .
135 reviews18 followers
November 17, 2018
மண்மணம் கமழும் நாவல் படைத்தவர்களுள் முன்னோடி சங்கரராம் என்ற டி.எல்.நடேசன். இவர் இரு நாவல்களை ஆங்கிலத்தில் எழுதினார் (The Children of the Kaveri (1926) The Love of Dust (1938)). அதில் The Love of Dust நாவலை பின்னர் அவரே மண்ணாசை என்ற பெயரில் 1941ல் மொழிபெயர்த்தார். மண்ணாசை நாவல் இவரது முதல் முழு கிராமிய நாவல். - இது Chennailibrary.com என்ற தளத்தில் ஆசிரியர் குறித்து எழுதப்பட்டடிருந்த தகவல்.

வேலன்,வெங்கடாசலம்,மதுரை,வீரப்பன், அய்யாவு,வள்ளி, அலமேலு,லட்சுமி,தேவானை,மல்லன்,மாயாண்டி,சோழன்,சுப்பையா பிள்ளை,தாயாம்மாள்,ஆறுமுகம்,.... இன்னும் பல கிராமத்தின் மனிதர்களும் அவர்களை சுற்றி எழுதப்பட்ட புதினம் மண்ணாசை.

இதுவரை இவ்வளவு வேகமாகவும் பரபரப்புடன் கதை நகர்வு கொண்ட புத்தகத்தை நான் வாசித்தில்லை. ஆசிரியர் இந்த புதினத்தில் பயன்படுத்திய உவகை மெய்சிலிர்கவைத்தது .

மண்ணாசை புத்தகத்தில் என்னை கவர்ந்த வரிகள் பல அதில் ஒரு சில வரிகள் :

1. இளம்பயிரில் நீருக்குத் தவித்து வண்டுக்கு இரையாகிச் சாவாமலும் பிழைக்காமலும் நாளோட்டும் தென்னங் கன்றுபோல் தோன்றினான். இக்குறையெல்லாம் நிறைவேறினாற் போல், அவன் தலை மட்டும் ஒரே வீக்கமாக வீங்கி, அவன் மெலிந்த கழுத்தின்மேல், குருவித் தலையில் பனங்காயை வைத் தாற்போல் காணப்பட்டது.

2. வெடி குண்டினால் நன்றாகக் காயப் படுத்தப்பட்ட ஒரு வேங்கை, போராடச் சக்தியுமற்றுத் தோல்வியை அங்கீகரிக்கவும் சம்மதியாமல் உறுமித் தவிப்பது போல், அவனும் தவித்தான்.

3.ஒருமுறை, அந்தத் தீனமான பார்வை அவன் மனத்தை உருக்கிற்று; மற்றொருமுறை, அதன் அளவற்ற சக்தி அவனை அடக்குவதுபோல் இருந்தது. அன்பும் ஆத்மத் தியாகமும் பொங்கி யோடும் அப்பார்வையில், அவன் இரண்டொரு நிமிஷம் ஈடுபட்டு, மதிமயங்கி நின்றான். அப்பொழுது, அது இல்வாழ்க்கையின் கருத்தை ஒருவாறு விளக்குவதுபோல் அவனுக்குப் புலப்பட்டது

1938ல் வீரமங்கலம், காவேரிக்கரையோரமுள்ள ஒரு சிறு கிராம மக்களின் வாழ்க்கை எத்தகையது என இந்த மண்ணாசையில் நாம் தெரிந்துகொள்ளலாம்.

-கலைச்செல்வன் செல்வராஜ்
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.