நவீனத் தமிழ் இலக்கியத்தின் மகத்தான படைப்பு சக்தியான, கு.அழகிரிசாமியின் ஒரு விஸ்தாரமான நாவல், ‘புது வீடு புது உலகம்’.. சிறுகதைப் பரப்பில் மனித உறவுகளையும் மன உணர்வுகளையும் ஒரு குறிப்பிட்ட கால, இடச் சூழலின் பின்புலத்தில் அபாரமாகவும் நுட்பமாகவும் வசப்படுத்திய படைப்பு மேதை, கு.அழகிரிசாமி. இந்நாவலில் கு.அழகிரிசமி, மிக விஸ்தாரமான தளத்தில், தன் காலத்திய புது உலகின் விசித்திரக் கோலங்களை விரிந்து, பரந்த பின்புலங்களில் மனவெளிப் பயணமாகக் கைப்பற்றியிருக்கிறார். காலத்தின் அசுர நிழல் கவிந்து, சிதைவுறும் மூன்று பெண்களின் உலகமிது. நாவல் தொடங்கும்போது, ஒளியும் இருளும் சரிநிகர் சமானமாகப் படரும் ஓர் உலகம், நாவலின் வளர்ச்சியில் இருள் அடர்ந்த பிரதேசமாகிறது.