யூ ஆர் இன்ட்ரெஸ்டிங்! உன் இருபதாவது வயதிலிருந்து உன்னைக் கூர்ந்து கவனித்து வருகிறோம். உன் அடிப்படைத் தகவல்கள், உன் பின்னணி, உன் விருப்பு வெறுப்புகள், உன் வீட்டுப் பொருட்கள், என அனைத்தையும் ஆய்வு செய்திருக்கிறோம். பிரைவசியை மீறியதற்கு மன்னிக்கவும். அவற்றின்மூலம் உன் எண்ண ஓட்டம், உளவியல், பாலியல் இச்சைகளின் வலிமை போன்றவற்றை நாங்கள் கணித்து முடித்துவிட்டோம். நீ வீட்டை விட்டு வெளியே வந்ததற்குக் காரணம், டிமோன் இல்லை. இது எங்களுக்குத் தெரியும்; நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புவது, இது உனக்குத் தெரியுமா என்பதையே. அடையாளங்கள் தேவை என்னும் பட்சத்தில், அவை அவரவர் விரும்பியவாரே இருக்கட்டும்.