பெண்ணின் கற்போடு விளையாடியவன் கதாநாயகனாக இருந்தால் அவனை மன்னித்து வாழ்க்கையை அளிக்கலாம் என்ற குடும்ப நாவல்களின் வகையில் சேர்ந்த மற்றொரு கதை இது.
தான் யாரால் பலாத்காரம் செய்யப்பட்டோம் என்று தெரியாமலே இருக்கும் அர்ச்சனாவிற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அதற்கான பதில் தெரிய வருகிறது.
தன்னை விமர்சனம் செய்த மாமன் மகளைப் பழிவாங்க அர்ஜுன் விரித்த வலையில் தெரியாமல் அர்ச்சனா நுழைந்ததை அவளின் மகன் முகம் பார்த்த பிறகே உணர்பவன் தன் தவறுக்கான பிராயசித்தமாக அவளை மணந்து கொள்ளும் முடிவை எடுத்தாலும் அடிமனதில் அவளின் மீதான ஈர்ப்பே முக்கியக் காரணமாகிறது.
அக்காவின் மீது பாசம் வைத்திருக்கும் தம்பியான விஷ்ணு அவளுக்கு அரணாகத் தன்னை வடிவமைத்துக் கொள்கிறான்.