Jump to ratings and reviews
Rate this book

சுபிட்ச முருகன்

Rate this book
இந்நாவலின் மையமெனத் திரண்டுள்ள அன்றாடமின்மை. அன்றாடம் நம்மைச் சூழ்ந்து எப்போதுமுள்ளது. ஏதோ ஒருவகையில் அன்றாடத்தின் மீதான சலிப்பிலிருந்தே புனைவு என்னும் செயல்பாடு தொடங்கியிருக்கிறது, அன்றாடத்தைச் சொல்லும்போதுகூட அன்றாடமல்லாததாக அதை ஆக்குதே புனைவின் கலை, இது வாழ்க்கையின் முடிச்சுகளைப் பேசும் படைப்பு. மட்டுமல்ல, அப்பால் சென்று ஒட்டுமொத்த வினாவில் தலையை ஓங்கி அறைந்துகொள்வதும்கூட எப்போதும் நான் புனைவில் எதிர்பார்க்கும் கூறு இது,

"எப்பிடிப் பொத்தி வச்சாலும் அவ வந்து கொத்திருவா" என்ற வரியிலிருந்து இந்தாவலை நான் மறுதொகுப்பு செய்யத் தொடங்கினேன், ஒரு தொடுகை கருவிலிருக்கும் குழந்தையை வந்து தொடும் புறவுலகு போல. அது ஓர் அழைப்பு, ஏவாளை லூசிஃபர் என, தாந்தேயை ஃபியாட்ரிஸ் என. இருண்டபாதைகளினூடாக அழைத்துச் செல்கிறது விழுந்து எழுந்து புண்பட்டு சீழ் கொண்டு கண்ணீரும் கதறலுமாக ஒரு நீண்ட பயணம். 'வட்டத்தின் ஓரமாகத் தவழ்வதைத் தவிர வேறு எதுவும் அப்போது எனக்கு விதிக்கப்படவில்லை" என்னும் பெருந்தவிப்பு.

128 pages, Paperback

Published October 1, 2018

7 people are currently reading
21 people want to read

About the author

Saravanan Chandran

23 books33 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
5 (9%)
4 stars
25 (45%)
3 stars
19 (34%)
2 stars
3 (5%)
1 star
3 (5%)
Displaying 1 - 8 of 8 reviews
Profile Image for Satheeshwaran.
73 reviews222 followers
May 12, 2019
சுபிட்ச முருகன் - சரவணன் சந்திரன்

தமிழில் ஒரு மேஜிக்கல் ரியாலிச நாவல் (Magical Realism).

பெண் சாபத்தால் காமம் சார்ந்த மனச்சிக்கலுக்கு ஆளாகிச் சின்னாபின்னமாகும் ஒரு மனிதன் சுபிட்ச முருகனைக் கண்டடைந்து கரையேறும் கதை.

சரவணன் சந்திரனின் மற்ற நான்கு நாவல்களையும் வாசித்தவனென்கிற முறையில் 'சுபிட்ச முருகன்' அவரது மற்ற நாவல்களை விட மனித மனத்தின் உளவியலை மிக ஆழமாக அலசும் நாவல். சரவணன் சந்திரன் அவரளவில் எழுத்துமுறையில் அடுத்த பரிணாமத்தை அடைந்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

என்னைப்போன்ற அவரின் தீவிர வாசகர்களையும், அடுத்த பரிணாமத்தை அடையவைக்கத் திசை காட்டியிருக்கிறார். திசை புரிந்தவர்கள் சுபிட்ச முருகனைக் கண்டடைந்து மனதாரத் தரிசிக்கலாம்.

அவரின் மற்ற நாவல்கள் தரும் மனதைத் தொடும் தருணங்கள் இதில் அதிகம் தென்படவில்லை. பிடித்திருப்பதற்கும் பிடிக்கவில்லையென்பதற்கும் இடைப்பட்ட ஒருமனநிலை.

சுபிட்ச முருகன் இருக்கும் திசை எனக்கு இன்னும் புலப்படவில்லை.

Waiting for 'லகுடு'.
Profile Image for Manikandan Jayakumar.
94 reviews20 followers
December 2, 2019
சரவண சந்திரன் அவரின் மற்ற நாவல்களைப் போலவே ஒரு புது(ஆண்மை இழந்த ஒரு கூட்டத்தின்) உலகை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். சர்ப்பம் ஆசை, மறுபிறப்பின் குறியீடாக நாவல் முழுவதும் வருவது ஒரு சிறப்பு.

முதல் பாதி புரிந்தார் போல இரண்டாவது பாதி புலப்படவில்லை. திருப்பதி தேவஸ்தானத்தில் பெருமாளைப் பார்க்க விடாமல் விரட்டுவது போல அல்லாமல் நிதானமாகப் பார்த்து ரசிக்கும் படியாக இருந்திருக்கலாம். சுபிட்ச முருகனின் தரிசனத்தை இன்னும் கொஞ்சம் விரித்து எழுதியிருக்கலாம் என்ற ஆதங்கம் தான்.

சுபிட்ச முருகனின் தரிசனம் கிட்டாமல் போனதற்கு எனது வாசிப்பின் போதாமையோ அல்லது இடைவெளி விடாமல் வாசிக்க வாய்ப்பு கிட்டாத புறச்சூழலோ காரணமாக இருக்கலாம்.

நாவலை வேறு கோணத்தில் புரிந்துகொள்ள லஷ்மி சரவணகுமார் மற்றும் டி.தருமராஜ் ஆகியோரின் கட்டுரைகள் உதவும்.

நமது நாவல்கள் ஏன் உச்சம் பெறுவது இல்லை? - http://tdharumaraj.blogspot.com/2018/...

லஷ்மி சரவணகுமார் - https://minnambalam.com/k/2018/10/27/14

திரிபுகளின் பாதை - https://www.jeyamohan.in/113638#.XeUW...

Profile Image for Satheeshwaran.
73 reviews222 followers
May 12, 2019
சுபிட்ச முருகன் - சரவணன் சந்திரன்

தமிழில் ஒரு மேஜிக்கல் ரியாலிச நாவல் (Magical Realism).

பெண் சாபத்தால் காமம் சார்ந்த மனச்சிக்கலுக்கு ஆளாகிச் சின்னாபின்னமாகும் ஒரு மனிதன் சுபிட்ச முருகனைக் கண்டடைந்து கரையேறும் கதை.

சரவணன் சந்திரனின் மற்ற நான்கு நாவல்களையும் வாசித்தவனென்கிற முறையில் 'சுபிட்ச முருகன்' அவரது மற்ற நாவல்களை விட மனித மனத்தின் உளவியலை மிக ஆழமாக அலசும் நாவல். சரவணன் சந்திரன் அவரளவில் எழுத்துமுறையில் அடுத்த பரிணாமத்தை அடைந்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

என்னைப்போன்ற அவரின் தீவிர வாசகர்களையும், அடுத்த பரிணாமத்தை அடையவைக்கத் திசை காட்டியிருக்கிறார். திசை புரிந்தவர்கள் சுபிட்ச முருகனைக் கண்டடைந்து மனதாரத் தரிசிக்கலாம்.

அவரின் மற்ற நாவல்கள் தரும் மனதைத் தொடும் தருணங்கள் இதில் அதிகம் தென்படவில்லை. பிடித்திருப்பதற்கும் பிடிக்கவில்லையென்பதற்கும் இடைப்பட்ட ஒருமனநிலை.

சுபிட்ச முருகன் இருக்கும் திசை எனக்கு இன்னும் புலப்படவில்லை.

Waiting for 'லகுடு'.

38 reviews
August 4, 2020

சுபிட்ச முருகன்: 'நான்' அழியும் வழியும், அழிவதற்கான வலிகளும்! A book of symbolisms.

கையிலிருக்கும் வெண்ணையை அலட்சியப்படுத்திவிட்டு ஆசைகளுக்குத்தீனி போட ஆரம்பித்து அழிவை நோக்கி நகர்வோம் என்ற புத்தரின் வாக்கை காட்சிப்படுத்தி, பின் அதிலிருந்து விடுபட்டு, கைவிட்ட வெண்ணையைக் கைகொள்ள ஊனை உருக்கி, தன்னை உணர்ந்து, மெய்யை அறிந்து உருக வேண்டிய அவசியத்தை நிதர்சனமாக, நிர்வாணமாக பதிகிறது. பல இடங்களில் “Alchemist” புத்தகத்தை நினைவு கூர்ந்தேன்.

கதை நெடுக அடையாளங்கள். Although the first part is presented through அருவருக்கத்தக்க mortal sexual desires, it could also symbolize ANY HUMAN desire- power, greed, wealth and the so many, so many ugly ways man takes to satisfy these desires. நான்கு மதங்களின் அடையாளங்கள் கண்டேன் - ஆட்டுக்குட்டியை கையிலேந்தி நிற்கும் ஆடை கிழிந்த அவன், முருகனை தரிசிக்க மலை நோக்கி நடக்கும் பாதயாத்திரிகள், தர்காவில் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் போக சொல்லல், மற்றும் கதை நெடுக கூடவே பயணிக்கும் புத்தர். எல்லாம் ஒன்றே பரம்பொருளே என! பாவத்தின் நீட்சிகளாக பாம்பும், நாயும். இன்னும் பல.

எழுத்தாளன் சரவணன் சந்திரனை புத்தகம் முழுக்க எங்கும் காணவில்லை. இதற்கு முன்பு, நான் அவருடைய வாழ்வியல் கதைகளையே வாசித்துள்ளேன். தூக்கம் இழந்துள்ளேன். இந்த புத்தகம் ஆரம்பிக்கும் தளத்தைக் கொண்டு மீண்டும் தூக்கம் இழக்க நேரிடும் என நினைத்தேன். அனால், இறுதியில் பேரமைதி – எதுவாகவோ, அதுவாகவே! This is what all meditation techniques preach – to accept life as is! எதுவாகவோ, அதுவாகவே!

பெருங்கதைக்குள் கிளைக்கதைகளைக் கோர்க்கும் கைவண்ணம் கூடி வந்திருக்கிறது – வேர்க்கதையின் ரசம் குறையாமல். போகிறபோக்கில் கோவில்களில் பெண்களைத் தொந்தரவு செய்பவர்களின் தந்திர யுக்திகளும், சிறுவயதில் காணும் காட்சிகளின் சுவடுகளும், வார்த்தைகள் ஏற்படுத்தும் ரணங்களும், தீண்டாமையின் தாக்கமும் கிளைக்கதைகளின் வாயிலாக தீண்டபட்டுள்ளன.

Personally, for me, it has come at a right time – when I am quieting my’self’ after a hiatus of anxiety and stress. And the book did make me cry – esp., to know the cost of losing “myself”. But, no success is worth its salt without the arduous journey, and its comforting to know every cow has its own. உழுகிற மாட்டுக்கு ஒரு வலின்னா, கரவமாட்டுக்கு வேற வலி.
Author 2 books16 followers
April 19, 2024
இன்னும் சில ஆண்டுகளில் தமிழ் மொழியின் கல்ட் நாவல் இந்த சுபிட்ச முருகன் . சாபம் பெற்று , சாபத்தின் நரக வாயில் திளைத்து மீண்டெழ முயற்சித்து என்று பல பரிமாணங்களில் இந்த கதை பயணிப்பதால் ஆசிரியரின் மற்ற நாவல்களை விட கொஞ்சம் மெதுவாகவும் , தொடர்ச்சி விடுபட்டது போல் தெரிந்தாலும் படிக்க படிக்க புது அனுபவங்களை கொடுக்கும் நாவல் இது . தமிழில் ஒரு தமிழ் சமூகத்தை ஒரு தமிழ் சமூகத்தை சேர்ந்த கதாபாத்திரத்தை முன்னிறுத்தி எழுதப்பட்ட முறையான மேஜிக்கல் ரியலிசம் நாவல் இதுவென்றே சொல்லலாம் . நாவலின் முதல் பகுதியில் இருந்த சமரசமற்ற எழுத்து பிற்பாதியில் தேய்ந்து முடிவில் ஒரு cliche வாக முடிந்தது மட்டும் கொஞ்சம் நெருடலாக இருந்தது . கதை சொல்லலின் வரம்புகள் பல இடங்களில் அடித்து நொறுக்கப்பட்டிருந்தாலும் (அது தான் இந்த நாவலின் மிக பெரிய பலம் ) சில இடங்களில் ஆசிரியர் இன்னும் கொஞ்சம் மென்மையாக கையாண்டிருந்தால் எல்லாரும் படிக்கும் புத்தகமாக இருந்திருக்கும் . கண்டிப்பாக இந்த புத்தகம் ஒரு மற்ற புத்தங்கள் போல் சாதராண வாசிப்பு அனுபவத்தை கொடுக்காது அதே நேரம் இலக்கிய ரசிகர்களை ஏமாற்றவும் செய்யாது என்பதற்கு நான் உறுதியளிக்கிறேன் . இந்த நாவலை எல்லாருக்கும் பரிந்துரைக்க முடியாது , இந்த நாவலை பரிந்துரைக்கும் அளவு நம்முடைய நட்பு வட்டம் இருக்கிறதா இந்த மாதிரியான நாவலை படிக்கும் நபர் நம்முடன் நட்பாக இருக்கிறாரா என்கிற தேடலை இந்த நாவல் நமக்களிப்பதாலே சமகால இலக்கிய படைப்புகளில் இந்த நாவல் முக்கிய இடம் பெறுகிறது .
21 reviews2 followers
March 24, 2023
எப்போதுமே அதிதீவிரத்தின் ஒரு முனை சூன்யத்தின் வாசலாய் இருக்கும். காமத்தில் ஆழத்தில் உழன்று Nymphpmaniac ஆகக் இருக்கும் ஒருவன் எவ்வாறு துறவின் கோவிலை அடைந்து சுபிட்ச முருகனின் தரிசனம் காண்கிறான் என்பதே இக்கதை.

சரவணன் சந்திரன் அவர்களின் பிற நாவல்களிலுமே ஒரு spirituality root இருக்கும். ஆன்ம தேடுதலின் ஆரம்பத்தில் இருப்பவர்களுக்கு ஒரு gentle push தேவைப்படும்.. protganist க்கு தானாய் வரும் துன்பமொன்று அத்தகைய நிலையில் தேடுதலை நோக்கித் துரத்துகிறது.

அத்தேடலின் முடிவில் பெருங்கருணை இருந்தாலும் அதற்கு முன்பு முற்றும் கடத்தல் என்பது எளிதாக இருப்பதில்லை. அதிசீக்கிரத்தில் அந்த உன்னத நிலையை அடைய முடியுமானால் உலகமே இன்று ஞானிகளின் இருப்பிடமாக இருந்திருக்கும்.

நாய் பட்ட பாடு என்று சொல்வார்கள். உண்மையாகவே அத்தகைய கஷ்டங்களைத் தாங்கித்தான் மனவெளியைக் கடக்க வேண்டியிருக்கிறது. அந்த வெளியைத் தாண்டிவிட்டால் பின்பு திரும்பி வர முடிவதில்லை. அதற்கான தேவையுமில்லை. அதற்கான பாதை வரைபடம்தான் இக்கதை.
Profile Image for Meenakshisankar M.
275 reviews10 followers
May 26, 2023
Even considering that this novel belongs to magical realism genre, it was exceptionally difficult for me to read and comprehend. Some portions, especially those featuring the echchil saami, were really good, but other sections were quite hard to follow. Overall, this novel, in the current reading, was not for me.
Profile Image for Parthasarathy Rengaraj.
72 reviews1 follower
August 12, 2025
இப்படி எழுத ஒரு தைரியம் வேண்டும் , இது ஒரு முயற்சி , மனப்பிறழ்வுள்ள ஒருவன் மனதை அருகிருந்து நோக்குவதென்பது மிகக்கடினமான விஷயம். புரியவைக்கும் சில முயற்சிகளை தவிர்த்திருந்தால் இது ஒரு மஹா அற்புதமான படைப்பென்பேன் 
Displaying 1 - 8 of 8 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.