மனதிற்கு மிகநெருக்கமானதை இழந்துவிட்டால் அனைத்தும் முற்றுப் பெற்றுவிட்டது என்பதில்லை.
காமம் அனைத்தையும் மீறவல்லது.அதற்கு உறவுகள் ,பாசம் ,கட்டுப்பாடு என்ற எல்லைகுட்பட்டு வாழ தெரியாது.
முறைதவறி வேலைக்காரிக்குப் பிறந்த பெண் என்றாலும் அனாதையாகும் போது பண்ணையார் மனைவி கற்பகத்தினால் தன் சொந்த மகள் போல் வளர்க்கப்படும் இந்துமதி அனைவர் மீதும் பாசத்தைப் பொழிபவள். விபத்தில் படுத்த படுக்கையாக இருக்கும் கற்பகத்தால் தன் கணவனை கட்டுப்படுத்த முடியாமல் போகிறது பல பெண்களுடன் சுற்றுவதை. தவறான போதனையால் இவ்வளவு ஆண்டுகள் மகள் போல் வளர்த்த இந்துமதியை திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்றவரின் முடிவை கற்பகம் ஏற்காமல் அவளைக் கொஞ்சம் பணம் கொடுத்து சென்னைக்கு அனுப்பிவைக்கிறாள்.
பள்ளியில் படிக்கும் சிறுபெண்ணான இந்து யாருமில்லாத சென்னையில் மாட்டிக்கொண்டு முழிபிதுங்கி மயங்கியவளை ஆனந்த் தன் வீட்டிற்கு அழைத்து வருகிறான். கண்விழிப்பவள் தன்னை ஏதோ செய்வதற்காகக் கொண்டுவந்தான் என்று கத்தி கூச்சல் போட்டு அவனைப் பெற்றவர்கள் முன்பு அவமானபடுத்த கோபம் கொள்கிறான்.
ஆனந்த் காதலித்த மாமன் மகளை வெள்ளம் ஐந்தாண்டுக்கு முன்பு கொண்டுபோனதால் தனிமை துயரில் இருப்பவனுக்கு மாமன்மகள் போல இருக்கும் இந்து மீது பிடிப்பு ஏற்பட ஆனால் தன்னைத் தவறாக நினைத்து அவமானபடுத்தினால் என்று எப்பொழுதும் திட்டி கொண்டே இருக்கிறான்.
மெல்ல தன் மனதை மாற்றிக்கொள்ளும் ஆனந்த் பிறகு காதலிக்கத் துவங்குகிறான். இருவர் மனதையும் அறிந்த ஆனந்த்தின் பெற்றோர் திருமணத்தில் இணைகின்றனர். ஏகப்பட்ட வர்ணனை சலிப்படைய வைக்கிறது.