Jump to ratings and reviews
Rate this book

பதினெட்டாம் பெருக்கு: pathinettam perukku

Rate this book
‘மணிக்கொடி’ எழுத்தாளரான ந.பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘பதினெட்டாம் பெருக்கு’. 1944இல் ஹிமாலயப் பிரசுரம் வெளியிட்ட இத்தொகுப்பு இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் சி.சு. செல்லப்பாவால் இரண்டாம் பதிப்பாக ‘எழுத்து பிரசுரம்’ மூலம் வெளியிடப்பட்டது.
புதுக்கவிதையின் தந்தை என்று போற்றப்படும் ந.பிச்சமூர்த்தியின் சிறுகதைகள் பல தலை முறைகளைக் கடந்தும் வாசகர்களை வசீகரிக்கும் தனித்துவமிக்க படைப்புகளாக நிலைபெற்றுள்ளன. தத்துவ மனநிலை கொண்ட பிச்சமூர்த்தியின் இக்கதைகளில் மனித மனத்தின் சஞ்சலங்களும் சபலங்களும் போராட்டங்களும் கவித்துவமாகப் பதிவாகியுள்ளன.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள முள்ளும் ரோஜாவும் என்னும் சிறுகதை 1933இல் கலைமகள் இதழ் நடதĮ

154 pages, Kindle Edition

First published January 1, 1944

3 people are currently reading
7 people want to read

About the author

Venkata Mahalingam, who wrote under the name of N. Pichamoorthi, was an Indian poet and writer. He is considered father of free verse (Puthu Kavidai) in Tamil.
He wrote more than 127 short stories, 11 stage plays and a couple of novels. He was a lawyer by profession and also worked as editor in magazines.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (20%)
4 stars
5 (33%)
3 stars
4 (26%)
2 stars
2 (13%)
1 star
1 (6%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Balaji M.
221 reviews14 followers
September 2, 2020
பதினெட்டாம் பெருக்கு
***********************
1930-40களில் சுதேசமித்திரன், மணிக்கொடி, கலைமகள் போன்ற பத்திரிக்கைகளில் வெளிவந்த 15 சிறுகதைகளின் தொகுப்பு.
அக்காலத்து எழுத்துக்கள் இப்போது வாசிக்கையிலும் முற்போக்குவாத கருத்துக்களை கொண்டு, வசிகரிக்கவே செய்கிறது நம்மை.

பலவித கலவையான உணர்வுகளை தரவல்லகூடிய கதைகள். அன்பு, காதல், களவு, பயம், வறுமை, மது, தர்மம் என நானாவித விடயங்களையும் பற்றி பேசும் கதைகள்.

போகிற போக்கில் பலவித நல்லொழுக்க கருத்துக்களை ஆங்காங்கே தூவிச் சொல்லும் கதைகளினூடாக, கருப்பு வெள்ளையில் பயணம் செய்வதை நன்கு உணரலாம்.
Profile Image for Desikan Srinivasan.
14 reviews1 follower
December 9, 2021
பள்ளி நாட்களில் மனனம் செய்த கடினமான செய்யுள்களும், கொஞ்சம் போல் பாரதியும், ஊடகங்களின் தாக்கத்தால் கலைஞர், கண்ணதாசன் வாலி வைரமுத்து போன்றோரின் பாடல்களும் மட்டுமே இலக்கியம் என்றிருந்த காலம். வேறு சில இலக்கிய ஆளுமைகளை நான் அறிய நேர்ந்தது. அவர்களில் என்னை வியக்க வைத்த ஒருவர் ந பிச்சமூர்த்தி.

தமிழில் புதுக்கவிதையின் முன்னோடிகளில் ஒருவர். பாரதி காலத்தவர். பாரதியின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டு ஆங்கிலத்தில் எழுதுவதை நிறுத்திவிட்டு தமிழில் எழுதத் துவங்கியவர்.

நவீன சிறுகதைக்கு அழகியல் வடிவம் அமைந்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. இளமையின் இயல்பினால் இன்பம் விழையும் மனமும் காவல்காரனாக தடுக்கும் அறிவும் நடத்தும் போராட்டங்களை தத்துவமும் அழகுணர்வும் கலந்து ஆற்றொழுக்கு போன்ற நடையில் அருமையாக சொல்லியிருக்கிறார்.

கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சிறுகதை பதினெட்டாம் பெருக்கு படிக்கும்போது அந்த காலத்தை உணரும் அதே நேரம், மன அறிவுப் போராட்டங்களை இன்றும் புதிதாக உணரலாம்.

அவனுக்கு அன்று விடுமுறை மனைவி தாயார் வீட்டுக்கு போயிருந்தார் தனிமை தரும் திருட்டுத்தனமும் இன்ப வெறியும் அவனைப் படுத்தும் பாடு வெகு அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது தனிமை அபாயகரமானது. 😃( பதினெட்டாம் பெருக்கு)
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.