ஒரு எழுத்தாளராக பாஸ்கர் சக்தி எனக்கு தெரிவதற்கு முன் அவரை திரைக்கதை எழுத்தாளரும் , வசனகர்த்தவாகவும் எனக்கு அறிமுகம் ஆனார் (மெட்டி ஒலி சீரியல் , இயக்குனர் திருமுருகன் மற்றும் சுசீந்தரன் உடன் பணியாற்றினர் ). பின்னர் ஆனந்த விகடனில் அவரது சிறு கதைகள் படிக்கும் போது அவரது எழுத்தின் மேல் இருந்த ஈர்ப்பு அவரது நாவலை தேட துவகினேன். அவ்வாறு என் கண்ணில் தென்ப்பட தொகுப்பு இந்த கனகதுர்கா. இன்று வரை பாஸ்கர் சக்தியின் ஒரே படைப்பு இந்த நாவல் (சிறுக்கதை தொகுப்பு). இந்நாவலின் தனி சிறப்பு பாஸ்கர் சக்தியின் எழுத்தின் நடை, கரணம் அவர் இந்நாவல் முழவதும் Dark Humor முறையில் எழுதி உள்ளார் அகவே இந்நாவல் படிக்கும்போது அலுப்பு இல்லமேல் படிக்க முடிகிறது. ஆரம்பத்தில் சில கதைகள் சுவாரசியம் குறைவாக இருந்தாலும் பின்னர் அதன் வேகம் பல மடக்கு கூடுகிறது. கனக துர்காவை முடித்தபின் அவரது அடுத்த நாவலை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.