திருமாலை முழுமுதல் கடவுளாகக் கொண்டது வைணவ சமயம். திருமாலின் அடியார்களை ஆழ்வார்கள் என்று வழங்குவர். உலக இன்பங்களில் ஈடுபாடு கொள்ளாது, எந்நேரமும் திருமால் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்து கிடப்போர் என்று ஆழ்வார் என்ற சொல்லுக்குப் பொருள் கொள்வர். ஆழ்வார்களின் பக்தியினால் அவர்களின் வாய் மலர்ந்து அருளப்பட்டவை தான், இன்று நாலாயிர திவ்ய பிரபந்தமாக விளங்குகிறது. இவர்கள் எம்பெருமானைப் பற்றி பாடினார்கள் என்பதை விட அணு அணுவாக அனுபவித்தார்கள் என்றால் அது மிகையாகாது. இவர்கள் நம்மால் கற்க முடியாத வேதத்தையும் அதற்காக எழுதப்பட்ட உபநிசத்களையும் எளிய வடிவில் தந்து இறைவனடியினை அடைய வழிவகுத்தார்கள். இத்துடன் நின்று விடாமல் இறைவனிடம் நேரடியாக பேசியு&#