நமது சமூகத்தின் உயிர்த்துடிப்புள்ள அம்சங்களில் ஒன்றான மகாபாரத இதிகாசத்தின் சாரத்தையும், ஜீவனையும் உள்வாங்கி அதை உகந்த முறையில் மீள்சிருஷ்டி செய்து, சுருள்வில்லைப் போன்ற விசைமிகு மொழிநடையுடன் மறுவாசிப்புச் செய்யும் முயற்சி இது.
பொதுவாக மறுவாசிப்பு என்றால் ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு எழுதுவது தான் வழக்கம். முழு பாரதத்தையும் மறுவாசிப்பாக 152 பக்கத்தில் எழுதியிருப்பது பிரமிக்க வைக்கிறது.