செய்த தவறை மறைக்க முயலும் போதே அடுத்தடுத்துக் குற்றங்களைச் செய்யும் சூழலை உருவாக்கி கொள்கிறோம்.
தன் மருத்துவமனைக்கு எதிரில் போன் பூத் வைத்து இருக்கும் பூமாவுடன் நெருங்கி பழகிய டாக்டர் விஜயசாரதி அவள் கர்ப்பம் என்று சொல்லியவுடன் விபத்து மாதிரி தோரணையில் தீர்த்துகட்டுவதற்குள் கிரைம் பிரான்ச் அதிகாரி விவேக்கை தொடர்பு கொண்ட பூமாவால் அது கொலை என்றே நம்பப்படுகிறது.
அடுத்தடுத்து மேலும் இரு கொலைகள் நடந்தேறுகிறது, முதலில் தனக்குப் பெண் தருகிறேன் என்று சொன்ன டாக்டர் கேள்விபட்ட விஷயத்தால் பிறகு மறுத்துவிட அந்த வன்மத்தை மனதில் கொண்டு அவரையும் கொலை செய்கிறான் விஜயசாரதி.
இயற்கை மரணங்கள் என்று காட்ட விஜயசாரதி செய்த அனைத்தும் வீணாகி சாட்சிகளுடன் அவனைக் குற்றவாளி என்ற வட்டத்தில் அடைக்கிறான் விவேக்.