மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிரும் வாழ்க்கைப் போராட்டம் என்பதில் தேர்ந்தெடுக்கும் வழிகளையும், வாழும் முறைகளையும் வைத்துத்தான் இவர்கள் மனிதப் பிறவிகளாகவோ, தெய்வப் பிறவிகளாகவோ மற்றவர்களால் அடையாளம் காட்டப்படுகின்றனர் அவ்வாறு இக்கதையில் வரும் அரவிந்தன்‚ சூர்யா இருவரின் நட்பில் ஏற்பட்ட சோதனைகளையும் அதை அவர்கள் எதிர்கொண்ட முறையும் நட்பிற்கும், காதலுக்கும்‚ மனித உணர்வுகளுக்கும் மரியாதை தந்து தனித்து சிறந்து விளங்கும் கோபுர கலசங்களாக நம் மனதில் பதியும் அவர்களின் வாழ்க்கையை நாமும் அவர்களோடு சேர்ந்து வாழலாமா...
சூர்யா–அரவிந்தன் இருவரின் நட்பை மையமாகக் கொண்டு நகரும் கதை ‘கோபுர கலசங்கள்’. சிறுவயது முதல் ஒன்றாக வளர்ந்து, ஒருவருக்கொருவர் துணையாக இருக்கும் இரு நண்பர்களின் வாழ்க்கையில் ஒரு திருமணம் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்துகிறது. அரவிந்தனுக்காகக் காத்திருந்த பெண்ணைச் சூழ்நிலையின் கட்டாயத்தால் சூர்யா திருமணம் செய்ய நேரிடுகிறது. அதன்பிறகு அவர்களின் நட்பும், காதலும், உறவுகளும் எப்படிப் புதிய வடிவம் பெறுகின்றன என்பதே கதை.
இந்தக் கதையில் என்னை மிகவும் கவர்ந்தது சூர்யா–அரவிந்தன் நட்பு. வாழ்க்கை அவர்களை மிகவும் சிக்கலான சூழலில் நிறுத்தினாலும், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் விதமும், தங்களுடைய உணர்வுகளைத் தாண்டி மற்றவரின் வாழ்க்கையையும் மகிழ்ச்சியையும் மதிக்கும் பக்குவமும் மனதைத் தொடுகின்றன. சில உறவுகளை உரிமையால் அல்ல, புரிதலால் மட்டுமே அழகாகத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதை இவர்களின் நட்பு உணர்த்துகிறது.
‘கோபுர கலசங்கள்’ என்ற தலைப்பே கதைக்கு மேலும் அழகு சேர்க்கிறது. கோபுரத்தின் உச்சியில் இருக்கும் கலசங்கள் அதன் உயரத்திற்கும் அழகிற்கும் நிறைவு சேர்ப்பதைப் போல, நம் வாழ்க்கையில் சந்திக்கும் சில மனிதர்களும் நம்மைச் செதுக்கி, நம் வாழ்விற்கு ஒரு புதிய அர்த்தத்தை கொடுத்து விட்டுப் போகிறார்கள். இத்தகைய மனிதர்கள் எப்போதும் நம்முடன் பயணிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. கோபுரக் கலசங்களைப் போல எவ்வளவு தொலைவில் இருந்தாலும், அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த பாடங்களும், விட்டுச் சென்ற நினைவுகளும் நம் வாழ்வின் ஓர் அங்கமாக என்றும் நிலைத்திருக்கும். அந்த வகையில், கதையைப் படித்து முடித்த பின்னரும், இக்கதையின் ‘கோபுர கலசங்களான’ அரவிந்தனும் சூர்யாவும் நம் நினைவில் நீங்காத இடத்தைப் பிடித்துவிடுகிறார்கள்👍🏻
நட்பு, காதல், பிரிவு, புரிதல் என மனித உறவுகளின் பல நுண்ணிய உணர்வுகளை இயல்பாகத் தொட்டுச் செல்லும் கதை இது. மேலும், சமூகம் கட்டமைத்துள்ள சாஸ்திர சம்பிரதாயங்கள் குறித்தும் இக்கதை கேள்வி எழுப்புகிறது. நம்மை யோசிக்கத் தூண்டும் படைப்பு👍🏻
Aravindhan, Surya and Anandhi grew up together and their families are very close. Aravindhan and Surya are thick friends, whereas Aravindhan and Anandhi are deeply in love with each other. On the day she was born, Anandhi's mother playfully asks young Aravindhan, if she gave him Anandhi, will he keep her safe and take care of her. Since then, he has never wavered in his promise. But on the day they were to be married, Aravindhan is missing. To save face and in a fit of anger, Anandhi's father decides to get her married to someone else. Surya steps in at the last minute and ties the knot. What happens is the rest of the story.
This story is NOT just a romantic comedy. This book shows conflicting beliefs about marriage and commitment, trust between people, friendship, different shades of love, societal norms and family values.
My thoughts
Well, I like the concept. Society loves to talk, and it is not best to bend to their will. No matter what you do, there will always be something to say anyway. Anyway, it is nice to see a different take.
This entire review has been hidden because of spoilers.
Amazing story plot. The first 200 pages are amazing. But the ending is awful. There are lots of logical loopholes in this novel. Especially the ending is rushed. Very convenient ending. Mixed bag feeling about the characters and ends from first half and second half . I should've avoided this story. It's not about tradition. But I really didn't like the ending.
Initially, I thought this story is a 'dead rubber' to be read, since this was my story on the line, from the Author...!! Assumed to be dragging and lengthy, this book still made me to read more and more, kept me engaging... especially the last 2 chapters were, like an unexpected end😎 Characters of 'Mama', Surya, Aravindhan stole the show 👑
Very good book. Lots of love and values are taught in this book. A must read for anyone who believes in truth and wisdom. The value of friendship, love, respect, etc , every relationship and emotion is clearly depicted.
#447 Book 48 of 2026- கோபுர கலசங்கள் Author- வித்யா சுப்ரமணியம்
நான் வாசித்த “வித்யா சுப்ரமணியம்” புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் இது தான். சூர்யா,அரவிந்தன் என்னும் இரு நண்பர்கள் பற்றிய கதை. சிறு வயதில் இருந்தே ஒன்றாக வளர்கிறார்கள், கல்லூரி படிப்பிற்காக இருவரும் சென்னையில் சொந்தக்காரர் வீட்டில் தங்கி படிக்கிறார்கள். அரவிந்தனின் கல்யாண ஏற்பாட்டில் ஆரம்பமாகிறது கதை. முகூர்த்த நேரம் கடந்தும் மாப்பிள்ளை வரவில்லை. அவன் சிறுவயதில் இருந்தே காதலித்த அத்தை பெண் தான் மணப்பெண். இருந்தும் வரவில்லை. பெண்ணின் அப்பா அவசரம் தாங்காமல், வேறு ஒருவருக்கு மணம் முடிக்க சம்மதிக்கிறார். அந்த கல்யாணத்தை அரவிந்தனின் நண்பனான சூர்யாவே அவளுக்கு தாலி கட்டுகிறான். சூர்யாவிற்கு சென்னையில் ஒரு காதல் இருக்கிறது. இந்த கல்யாண விஷயம் அரவிந்தனுக்கு தெரியவரும்போது என்ன ஆகிறது என்பது தான் கதை.
இதில் பல சுவாரஸ்யமான திருப்பங்கள், சமுதாயத்தை கேள்வி கேட்கும் விதமாக நிறைய உண்டு. அவற்றை எல்லாம் சொன்னால் spoiler ஆகும் என்பதால் அவற்றை தவிர்க்கிறேன். இதில் வரும் நட்பு பேரழகு. சூர்யாவின் காதலியின் தந்தை தான் இதில் பெரிய பலம். அவருடைய தெளிவு, தன்னம்பிக்கை, பேச்சு எல்லாம் நமக்கும் பரவி விடும். இதில் வரும் முக்கிய கருவே..சமூகம் இது தான் சரி என்று சொல்லும் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை என்பது தான். ஒரு சாதாரண கதையாகத் தொடங்கி, நமக்குள் ஒரு தெளிவை உருவாக்கும் படைப்பு இது.