பதின் வயதில் சொல்லப்படாமல் தொலையும் காதல்..இருந்தும் அவளின் நினைவுகளில் கரையும் அவன் வாழ்வின் 18 வருடங்கள்.விதியின் விளையாட்டால் திக்கற்ற நிலையில் மீண்டும் அவன் முன் வருகிறாள்.சொல்லாத காதலை சொல்லி கரை சேர்ந்தனரா அதற்கு நாயகனின் குடும்பமும் நட்பும் உதவினரா!?நெல்லை தமிழின் அழகோடு இந்த காதல் கள்வன் உங்கள் இதயங்களை களவாட காத்திருக்கிறான்.
தன்னைக் காப்பாற்றிய மனிதர்களின் மீது குவியும் அதீத கவனமே பார்வைகளின் திசையை மாற்றியமைக்கும்.
பள்ளி பருவத்தில் தன் உயிரை காப்பாற்றிய பொழிலரசியின் மீது பிடித்தம் ஏற்பட்டு அது காதல் என்ற நிலையை எல்லாம் தாண்டி தனக்கான முடிவாகவே அவளைப் பற்றி எண்ணும் எழிலமுதனுக்கு அவளுக்கு ஏற்கனவே திருமணம் ஆனது பற்றிக் கவலையில்லை.
தன்னை மீறி நடந்த கடந்த காலத்திற்காக நிகழ்காலத்தை இழக்க தயாரில்லாத பொழிலரசியின் தெளிவு அவளை உறவுகளின் மத்தியில் எழிலமுதனின் ராணியாக உலாவ விடுகிறது.
கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் பலதரப்பட்ட மனிதர்களும் சம்பவங்களும் சொல்லாடலில் மட்டுமே காண்பிக்கப்படுவது எவ்வகைச் சுவாரசியத்தையும் தரவில்லை.கல்யாணம் பண்ணி குழந்தை பெறுவதற்காகவா இவ்ளோ பக்கங்கள் வெறும் உரையாடல்கள் மூலம் நகர்ந்தது என்ற யோசனையும் எழாமல் இல்லை.
காட்சிபடுத்துதல் இல்லாமலும் கதாபாத்திரங்கள் உணர்வுபூர்வமாகச் சொல்ல வேண்டியது சொல்லப்படாமலும் அதன் போக்கிலே போய் முடிகிறது.
Good story .Iam very impressed. Thanks for writter .Sri படிக்க படிக்க ரசனை பொங்கி வெளிப்பட்ட தருணம் உங்கள் நூலில். சந்தோஷமாக feel போன்றன. Once again . Thankyou