காதல் கஃபே – இந்திய ஃபிரெஞ்சு நேசத்தைப் பேசும் இனிமையான காதல் கதை. புதுச்சேரியை நிகழ்விடமாகக் கொண்டு பெயருக்கு இணங்க காதலைக் கொண்டாடும் இக்கதைக்களனில் ஃபிரெஞ்சு உணவுகள், பாண்டிச்சேரியின் வாழ்விடங்கள், ஃபிரெஞ்சு காலனி ஆதிக்கத்தின் தற்போதைய நீட்சிகள் எனப் பல சுவையான விஷயங்கள் கதையோட்டத்தின் ஊடே சுவாரஸ்யமாகப் பின்னப்பட்டுள்ளன. பிரியத்தின் சொற்களுக்கு இடையே சற்றே மனம் நிறுத்தி சிந்திக்கச் சிறு சிந்தனை இழையும் உள்ளோடும் இந்நாவலை வாசித்து மகிழுங்கள்! Kadhal Cafe -A feel good story with a soft love and romance between a indo -french couple. As the story revolves around Puducherry, the plot is tightly coupled with lot of interesting tid-bits about french food, places of Pondy and french extensions in today's Puducherry. While celebrating the breeze of LOVE, a very minute thought-provoking knot is underlying for a genuine rumination too. Have a good pleasant read!
தாய்மை பெண்ணிற்கு ஒரு புதிய உறவை அளிப்பது தான் என்றாலும் அது மட்டுமே பெண் என்ற அங்கீகாரத்தை வழங்குவது இல்லை.
சூல் கொள்ளப் போகும் உறுப்பை இழந்தவள் அதன் பிறகு தனிப்பட்ட வாழ்வு என்று எதுவுமேயில்லை என்ற பிடிவாதத்துடன் கண்ணைக் கட்டி இருக்கும் திரையை அகற்றாமல் வீம்பான உறுதியில் நிலைத்தவளை அவளுக்கானவன் அசைத்து பார்த்து திசையின் எல்லைகளின் விரிவை காட்டும் போது தான் தன் மனதை முழுமையாக உணருகிறாள்.
உணர்ச்சிகரமாக வேண்டிய இடத்தில் கூடக் கதாபாத்திரங்கள் எதையும் வெளிகாட்டவே இல்லை. வாசிப்பவர்களைச் சுற்றுலா பயணியாக்கிவிட்டார்கள்.
Awesome Hema, kids are blessing but there is life and love beyond kids. Why we always care what others think or say. We need live for the moment and ourself. Well written novel.