உதிர்க்கும் வார்த்தைக்குக் கட்டுபாடு அவசியம்.யாரோ ஒருவர் எவரோ ஒருவரின் வார்த்தைகளில் காயப்பட்டுத் தான் போவார்கள் என்றாலும் வார்த்தைகள் விடுவதற்கு முன்பு அதன் பின்புலத்தை முழுமையாக ஆராய வேண்டும்.
இந்தக் கதையிலும் பள்ளி மாணவியைப் பார்த்தவுடனே காதலில் விழுகிறார் கதாநாயகன்.
பௌர்ணமியின் பிறப்பு இரகசியத்தை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் காதில் விழுந்த சங்கதிகளை வைத்து தவறாகப் பேசி தன் காதல் மலர்ந்த கொஞ்ச நேரத்திலே அதைக் கசக்கி போடும் பார்த்திபன் உண்மை தெரிந்த பிறகு தவித்தாலும் நான்கு வருட இடைவெளி தவிர்க்க முடியவில்லை.
தன் முதல் தங்கையின் புகுந்த வீட்டு பெண்ணான பௌர்ணமி இரண்டாவது தங்கையின் திருமணத்திற்கு வரும் போது பார்த்திபன் கட்டாயத் தாலி கட்டி மனைவியாக்கி கொள்கிறான். மஞ்சள் கயிறு அதன் வேலையைச் செவ்வன செய்கிறது.