அகவிழி பேசும் கலைமனத்தின் சொல்லாடல்கள் ஒரு ஒற்றைப்பறவை தன் கதையை தானே சொல்வதுப் போல... அதிசயம் நிறைந்த உலகில் அதிசயிக்கத் தக்க மனிதர்களாய் இருவர் தங்கள் வாழ்வெனும் பயணத்தின் பாடுகளை சித்திரங்களினாலும், எழுத்துக்களினாலும் வடிவமைத்துச் செல்கின்றனர். ஒருவர் வெளிச்சத்தில் கண்டதை இருட்டில் வரையும் ஓவியர் மனோகர் தேவதாஸ், மற்றொருவர் இருட்டில் கழிந்த வாழ்வை வெளிச்சத்தில் எழுதும் தேனி சீருடையான். இருவரும் காலத்தை ஊடுருவிய பிரக்ஞை உடையவர்கள். கலை என்பது ஒரு வெளிப்பாடு, கலைஞன் என்பவன் தனது உள்ளுணர்வை வெளிக்கொணரும் கருவி. தன் மனச் சுதந்திரத்தை, தன் எண்ணத்தை பகிர்ந்து கொள்ளும் யுக்தி, கலைஞன் தன் மனக்கண்ணில் காணும் காட்சியை மற்றவரும் பார்க்க செய்யும் வழி எதுவோ அதுவே கலை எனப்படுகிறது. மனித மனம் இந்த கலையுணர்வை வெளிக்கொணர ஏற்படுத்திக் கொண்ட வகைப்பாடு தான் இசை, ஓவியம், சிற்பம், எழுத்து இன்னபிற. கலையம்சம் இல்லாத மனிதம் இல்லை. பயிற்சியும், சந்தர்ப்பமும் வாய்க்கப்பட்ட கலைஞர்கள் வெளியுலகில் தங்கள் எண்ணங்களை கலக்கின்றனர். புதிர்கள் நிறைந்த நம் மனம் புறக்கண்ணால் பார்க்கக்கூடிய அனைத்தையும் பாதுகாக்கும். உணர்வுகளோடு அழுந்திய காட்சிகளை அது மறப்பதில்லை. கலைஞனின் மனதில் ஏற்படும் உணர்வை நம் மனதில் அவர் உணர வைக்கும் திறனே கலை வடிவம் பெறுகிறது. அதுபோல் ஓவியர் மனோகர் தேவதாஸ் என்ற வண்ணங்களின் தூதுவன் கண்களால் பார்த்தவற்றை அப்படியே தோரணமாய் சித்தரிக்கும் அதிஅற்புத கலைஞன். பள்ளிப்பருவத்து கிறுக்கல்கள் பிற்பாடு ஓவியங்களாக மாறுகின்றன. இவை எல்லாமே அர்த்தமுடையவை. "எனக்கு நினைவு தெரிவதில் இருந்து நான் ஓவியம் வரைகிறேன். முதலில் யானை, புலி, சிங்கம் என்பன போன்ற சித்திரங்களை சிறுவயதில் பாலர் பள்ளிகளில் வரைந்தேன். பின்பு நடுநிலைப்பள்ளியில் ரோடுரோலர், புகைவண்டி, இரண்டாம் உலகப்போர் விமானம் போன்றவற்றை வரைந்தேன். உயர்நிலைப்பள்ளியில் என் ஆர்வம் பெண்களைப்பற்றி வரைவதில் மாறியது. சேலை அணிந்த பெண்கள் மற்றும் உடையணியாத பெண்களின் ஓவியங்களை வரைந்தேன்" என்கிறார் மனோகர் தேவதாஸ். கலைமனத்தின் தன்மை ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றவாறு மாறுபடும் என்பதை விளக்குகிறார் மனோகர். தன் ஓவியங்களுடன் அது வரையப்பட்ட தருணம் பற்றிய சொல்லாடல்களையும் நிகழ்த்தி இருக்கிறார். ஆயினும், இவரது ஓவியங்களின் சிறப்பு என்ன? மனோகர் தேவதாஸ், ஓவியம் வரைய தொடங்கிய காலத்தில் அவருக்கு பார்வை புலப்பட்டது. அவர் கண்ணால் காண்பதை வரைந்தார். காலம் செல்லச்செல்ல அவருக்கு பார்வை குறைபாடு நோய் ஏற்பட்டு, பார்க்கும் திறன் குறைந்தது. வண்ணங்களில் வாழும் கலைஞனுக்கு எது எந்த நிறம் எனக் கண்டுணர முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் தான் வெளிச்சத்தில் கண்டதை, இன்னமும் இருட்டில் வரைந்து கொண்டிருக்கிறார். இதுதான் அவரது ஓவியங்களின் சிறப்பு. வண்ணங்களை எப்படி கையாளுகிறார்? அவரது ஓவியங்களின் உயிர்ப்பு எத்தகையது? புறவிழியில் புரையோடியானலும், அகவிழியால் உலகை காணும் விதத்தை அவரது ஓவியங்களில் காணும் போது நிச்சயம் சிலிர்த்துப் போவீர்கள். நிறங்களின் மொழி என்ற இந்த நூலில் இது மனோகரத்தின் சிறப்பு. இன்னொன்று... தேனி சீருடையானின் சீர்மிகு எழுத்துக்கள். தேனீ சீருடையான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது பார்வை இழக்கிறார். பிறகு பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது பார்வை திரும்புகிறது. பார்வை இழந்த அவர் பார்வையற்றோர் பள்ளியில் மாணவன். அந்த பள்ளியில் சேர அவர் ரயிலில் பயணப்பட்டது முதல் பள்ளி விடுதியில் சக பார்வையற்ற மாணவர்களுடன் சேர்ந்து படித்த, விளையாடிய அனுபவங்களை, துயரங்களை அவர் விவரிக்கிறார் இந்த புத்தகத்தில் நாவல் வடிவில். நிறங்களின் உலகம் என்ற பெயரில் 6 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்த நாவல் தற்போது விகடன் பிரசுரம் மூலம் புத்தம்புதிதாக அச்சேறியிருக்கிறது. நிறங்களின் உலகம் படித்துப் பார்ப்பவர் அத்தனை பேர் கண்களிலும் நீர் அரும்பும். உலக இலக்கியத்திற்கு ஒப்பான நாவல் இது. ரஷ்ய இலக்கியமான கொரலன்காவின் 'கண் தெரியாத இசைஞன்' போன்ற மிகக் தரமான வாழ்வியல் படைப்பு என்பதை நிறங்களின் உலகத்தை வாசிக்கப்போகும் நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள். உன்னத கலைமனத்தின் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட மனோகர் தேவதாசின் ஓவியங்களையும், தேனி சீருடையானின் எழுத்துக்களையும் ஒருங்கே நிறங்களின் மொழியாக வெளியிடுவதில் விகடன் பிரசுரம் பெருமை கொள்கிறது. வாசிக்கத் தொடங்குங்கள். அகவிழி விரியும்.
Manohar Devadoss (10 September 1936 – 7 December 2022) was an Indian artist and a writer from Tamil Nadu. At the age of 83, when completely blind, he was awarded the Padma Shri, India's fourth highest civilian award, for his inspirational work in art and charity.
The two sided print of the book is something new. One side by one author and the other side by another. Both the authors have seen the two worlds - Having vision and being blind. It's something like Milton's Paradise Lost and Paradise Regained. The authors have expressed their experience of people see the world with their eyesight and those who see the world without their eyesight. It brings out the grit and determination people have in spite of their disabilities which in fact weren't disabilities per se for them. Manohar Devadoss an artist who made up to draw all his impressions of life even after losing vision. Theni Seerudaiyan who despite the worst poverty and living condition, however with the help of people made it to get education, his eyesight back and live a self-sufficient life. These two authors are an inspiration for people who get discouraged, demotivated etc. to stand against all odds and prove it to the world that they can achieve.
நிறங்களின் மொழி - மனோகர் தேவதாஸ் அவர் சிறு வயதில் பார்த்த மதுரையின் நினைவுகளையும் தன் மனைவிக்கா அவர் வரைந்த ஓவியங்களையும் இதில் இணத்துள்ளார்.
நிறங்களின் உலகம் - பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது கண்பார்வை மங்க ஆரம்பமாகி சில நாட்களில் முழுவதுமாக பார்வையை இழக்கிறான் பாண்டி. குடும்பம் வறுமையில் தவிக்க மதுரை சென்று அரசு மருத்துவமனயில் கூட மகனை காட்ட முடியாத தாய்(குருவம்மா), தந்தை(நல்லு) கைவைத்தியம் செய்து பார்வை மீட்க முயற்சிக்கிரார்கள் எதுவும் பலனளிக்கவில்லை. மெட்ராஸ்’ல அரசாங்க குருட்டு பசங்க பள்ளில பயல சேத்துவிட்டா அங்கயே தங்க இடம் குடுத்து சோறு போட்டு பாடம் சொல்லிகுடுத்து பயலுக்கு டாக்டர்கிட்ட வைத்தியம் பாத்து கண்ண சரி ஆக்கிடுவாங்க என பாண்டியின் பெற்றேரை நம்பவைத்து அவனை கண் பார்வையற்றேர் பள்ளியில் சேர்க்கிறார் சுப்பு மாமா. பள்ளியில் மூன்று வேலையும் உணவருந்தும் பாண்டி தன் அக்காவும், அம்மாவும் இன்று ஒரு வேலையாவது உண்டிருப்பார்களா என்பதை நினைத்து கலங்குகிறான். கல்வியின் துணை கொண்டு தன் குடும்ப வறுமை ஒழித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் படிக்கிறான். பாண்டிக்கு பத்மநாதன், பாண்டுரங்கன் இருவரும் ஆக சிறந்த நண்பர்களாகின்றனர். பத்து ஆண்டுகள் (1959 - 1969) அந்த பள்ளியில் படிக்கும் பாண்டி பிரைல் எழுத்து வழி கல்வி கற்கிறான். பூந்தமள்ளி பார்வையற்றேர் பள்ளி, ஆவடி கேம்ப், நேருவின் மறைவு, இந்தியா - சீனா போர், இந்தியா- பாக்கிஸ்தான் போர், தமிழ் மொழி பற்றால் வேலை இழக்கும் ஆசிரியர்கள், கம்மியூனிஸ்ட் தோழர்களின் போராட்டம், இந்தி திணிப்பு போராட்டம், கீழ்வெண்மணி நிகழ்வு என அந்த பத்தாண்டுகளில் நிகழந்த சம்பவங்களை நிறங்களின் உலகம் நினைவூட்டுகிறது. -கலைச்செல்வன் செல்வராஜ்.
தேனி சீருடையான் மிகவும் நேர்மையாக எழுதியிருக்கிறார்.60 , 70 களின் வறுமை மிகவும் கொடுமையாக இருக்கிறது. பார்வை பறி போகும் பொழுது நிலைமை இன்னும் மோசமாகிறது. பக்கத்து நகரத்தில் உள்ள அரசாங்க மருத்துவமனையில் சென்று கூட பார்க்க முடியாத வறுமை. உறவினரின் அறிவுறுத்தலால் சென்னையில் உள்ள பார்வையற்றோர் பள்ளிக்கு கிளம்பும் பொழுது அந்தப் பயண அனுபவத்தையும் பள்ளி சென்ற பின்பு பார்வையற்றோர் பள்ளி, அங்கு உள்ள மனிதர்கள் அவர் சென்று வந்த இடங்கள் ஆகிய வற்றை அவருக்கு பார்வை இல்லாத போதும் அருமையாக விவரித்திருக்கிறார். அவர் பார்த்திராத,அவரால் பார்க்க முடியாத பலவற்றை நம் கண் முன்னே நிறுத்துகிறார். அந்த நிலையிலும் அவரின் கல்வியன மீதான தீராத காதலும் தொடர்ச்சியான வாசிப்பு பழக்கமும் அவருக்கு ஒரு ஊன்று கோலாய் இருந்திருக்கின்றன.அந்த கால கட்ட அரசியல் போராட்டங்கள் கதையில் பேசப்படுகின்றது. மனோகர் தேவதாஸின் ஓவியங்கள் மிகவும் அருமையாக இருக்கின்றன. பார்வை பறிபோகிக் கொண்டிருந்த சூழலில் ஒவ்வொன்றையும் அவர் தேடித் தேடி பார்த்து வரைத்திருக்கிறார். அவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையிலான வாழ்க்கை காதல். ஒருவர் தொடு உணர்வினாலும் காதால் கேட்டதாலும் உண்டான அனுபவத்தையும் மற்றொருவர் பார்வை பறிபோகிற கடைசி நேரப் பரவசத்தையும் ஒருங்கே இணைத்திருப்பது நன்றாக இருக்கிறது.