புதினத்திலிருந்து சில வரிகள்: அலைப்பேசியை அணைத்த சரயுவின் காதில் அன்றொரு நாள் ஜிஷ்ணு சொன்னது காதில் எதிரொலித்தது. “அட்யு ஜிஷ்ணு”. “நா பங்காரம்... நோ ‘அட்யு’ ஜஸ்ட் ‘ஆ ரெய்வோர்’ நீ உலகத்தோட எந்த மூலைக்குப் போனாலும் உன்னை விடமாட்டேன். தேடி வருவேன்” ‘திருடன்... ஏதோ உணர்ச்சி வேகத்துல சொன்னான்னு நெனச்சேன். இவ்வளவு சீரியஸா இருந்திருப்பான்னு கற்பனை கூட பண்ணலையே’ வரவேற்பரையில் மாட்டியிருந்த சித்ராங்கதா ஓவியத்தின் மேல் சாய்ந்து நின்றவள் முகம் வேதனையால் தவித்தது. “காத்திருந்தேனே விஷ்ணு... நீ வந்துடுவேன்னு பைத்தியம் மாதிரி காத்திருந்தேனே... அப்பல்லாம் வராம... உன்னைப் பாக்கவே கூடாதுன்னு சங்கல்பம் எடுத்துட்டு வாழுறப்ப வந்துத் தொல்லை பண்ணுறியே...”
I don't know what to say about this story. It's one of the best I ever read. It's an emotional roller coaster. Especially the lead characters are exceptional. Writing is out of the world from tamil madhura. Must read.