நாம் மேலோட்டமாக பார்க்கும் உலகம் அமைதியானது. இவ்வுலகின் மறுபக்கம் என்ற ஒன்று உண்டு. அதை அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் கோர முகம்...நமது நாயகி எதிர்பாராமல் மறுபக்கத்தில் சிக்கி நாயகனிடம் அடைக்கலாமாகிறாள். அவன் அவளையும் காத்து தீயவற்றை எப்படி வேட்டையாடுகிறான் என்பது தான் இக்கதை....
சதுரங்க வேட்டைக்கும் இந்த Tanglish கதைக்கும் சம்பந்தம் இருப்பதாக தோன்றவில்லை. ஆறு படம் மாதிரி ஒரு பெண் மீனவ குப்பத்தை சேர்ந்த, சில இடங்களில் மீனவ குப்பத்து தமிழ் பேசும், துறைமுகத்திலிருந்து சரக்குகளை சட்டத்திற்கு புறம்பாக வெளிகொண்டு வரும் ஒருவனை விரும்புகிறாள். அவன் முரடன் (ரௌடி, gangster) என்பதையும், நல்லவன் என்பதையும் அழுத்தமாக சொல்லும் நிகழ்வுகள் இல்லை. 1. ஒரு அத்தியாயத்தில் "மேகாவும், கயலும் ஒரே குழுவில் இருந்தனர். அவர்களின் கைடாக ஆசிரியர் காஞ்சனா", அடுத்த அத்தியாயத்தில் "மாணவர்கள் அவர்களே தனித்தனி குழுவாக பிரித்துக் கொள்ளலாம்"? 2. கடத்தப்பட்ட கதாநாயகி எதிர்ப்பு தெரிவித்ததும் அந்த கும்பலில் திருநங்கை ஒருவர் உதவி செய்கிறார், அப்ப கதாநாயகிக்கு முன் கடத்தப்பட்ட எந்த பெண்ணும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லையா? 3. இங்கு எல்லா இடங்ளிலும் காமிரா இருக்கிறது, குளியலறையில் பேசலாம் என்று அங்கு பேசுகிறார்கள், பின் அதே அறைக்கு திரும்ப வந்து கயல் உடை மாற்றிக்கொள்கிறாள், காமிரா ஞாபகமில்லை? 4. கயல் அடியாட்களோடு தங்கும் விடுதியிலிருந்து வெளியேறும் போது (ஒரு மந்திரி போகும் போதும்), CCTV காமிராவில் அவள் மட்டும் தனியாக போனது போல் இருக்குமா? 5. ஆறு மணியளவில் அந்த கல்லூரி முன்பும், சேதுராமன், ரத்னகுமார் வீட்டின் முன்பும், தொழிற்சாலைகள் முன்பும் கூடி இருந்தனர் - யாரு கூடியிருந்தனர்? 6. "ஏற்கனவே அந்த ப்ராஜெக்ட்ல் பாதி ஆரம்பிச்சிட்டோம்" - பாதியை எப்படி ஆரம்பிப்பார்கள்? 7. சிறையிலிருந்து தப்பினான் - எப்படி? கடத்தப்பட்டான் - எப்படி?
சரவணனுக்கு என்பதை சரவணன்க்கு என்று அரைகுறை தமிழ் தெரிந்தவர்கள் போல பல இடங்களில் தமிழை இரக்கமில்லாமல் கொலை செய்துள்ளார்கள்.