கதைகள் குறித்து..... உடலமைப்பில் ஆண்களைக் காட்டிலும் மனிதகுலப் பெண்கள் மிகவும் பலவீனமானவர்கள். ஆண்களுக்குக் கட்டுப்பட்டு இவர்கள் வாழ்வதற்கான முக்கிய காரணங்களுள் இதுவும் ஒன்று. ஒப்பீட்டளவில், மன வலிமையும் இவர்களுக்குக்[பெரும்பான்மையினர்] குறைவுதான். நெருக்கடியான சூழ்நிலைகளில், ஆராயும் அறிவைப் புறந்தள்ளி உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள் இவர்கள். பொறுமையின் இருப்பிடமும் இவர்கள்தான். எனினும், அப்பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என்பதை மெய்ப்பிக்கும் வகையில் பொங்கி எழவும் செய்வார்கள். இனி வாழ்ந்து பயனில்லை என்பதான உச்சநிலை வருத்தத்திற்கு உள்ளாகும்போது இவர்கள் மரணத்தைத் தழுவவும் தயங்குவது இல்லை.