Jump to ratings and reviews

அரிதாரம்

ஒரு கவிஞன் கதை எழுதினால் அவன் சமைக்கும் படைப்பின் ருசி எப்படி தனிசுவையைத் தோற்றுவிக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று.
பத்தொன்பது சிறுகதைகளும் ரகசியமாய் வந்து மனதில் இடம்பிடித்து, மொத்தமாய் சிறப்புத்தன்மை பெற்றாலும்; ஒரு சில கதைகளை இங்கே சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
'தலைமாணாக்கன்' ஒரு குருவிற்கும், சிஷ்யனுக்கும் உள் பற்று என்ன என்பதை சிஷ்யன் தன் கை கட்டை விரலை குருவிற்கு காணிக்கையாய் அளிக்கும் விசித்திரம், உலகிற்கு கூறும் நற்சிந்தனை யாகவே படுகிறது.
'மாயைகள்' ரயில் வண்டியில் செல்லும்போது ஏற்படும் அனுபவங்கள், கண்முன் நேரடிக் காட்சிகளாகவே பதிவாகி விரிகிறது.
‘மயானம்' ஒரு பெரியவரின் கேள்விகளால் ஏற்பட்டது என்ன? நெஞ்சை நெக்குருக வைக்கின்றது.
‘பலவீனம்' எனும்போது; கணவன் மனைவிக்கிடையே உள்ள உறவுமுறைகளை ஒரு ‘ஸ்நோபால்' என்கின்ற நாய் மூலம் உணர்த்தும் பாங்கு நூலிற்கு இன்னும் மெருகேற்றுகின்றது. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்நூல் பிரபலமான பத்திரிகைகளில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பே என்றாலும், அத்தனையும் முத்துக்களே. வாசக நெஞ்சங் களுக்கு இந்நூல் ஒரு தனி சுவையைத் தரும் என்ற நம்பிக்கையில், இந்நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

143 pages, Paperback

Published June 1, 2005

Loading...
Loading...

About the author

V. Irai Anbu

56 books125 followers
V. Irai Anbu (Tamil: வெ. இறையன்பு) is an IAS Officer, writer, educator, social activist and motivational speaker. He is the current Chief Secretary of Tamil Nadu Government .

Irai Anbu has been a motivational speaker and hosted a show named Kalloori Kaalangal ( Tamil: கல்லூரி காலங்கள் ) in DD Pothigai in which he shared his experiences about his college life. He has written more than 150 books.

Wikipedia: English | தமிழ்

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (30%)
4 stars
6 (30%)
3 stars
6 (30%)
2 stars
1 (5%)
1 star
1 (5%)
Displaying 1 - 3 of 3 reviews
255 reviews37 followers
November 17, 2022
புத்தகம் : அரிதாரம்
எழுத்தாளர் : வெ.இறையன்பு இ.ஆ.ப
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பக்கங்கள் : 143

🔆புத்தகம் படிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே, இறையன்பு அவர்களின் புத்தகங்களை வாசிக்க தொடங்கினேன். பொதிவாக அனைத்தும் சுய முன்னேற்றம் சார்ந்த புத்தகங்களாக இருக்கும்.

🔆பின்னர் அவர் எழுதிய “10000 மைல் பயணம் “ , பயணக் கட்டுரை புத்தகத்தை படித்தேன் . மிகவும் அருமையான புத்தகம் . அனைவருக்கும் நான் பரிந்துரைக்கும் புத்தகம் .

🔆இப்போது தான் அவர் எழுதிய சிறுகதை தொகுப்புகளை வாசிக்கிறேன் . 19 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது . மனதிற்கு மிகவும் பிடித்த 2 கதைகளைப் பற்றி சில வார்த்தைகள் .

🔆“மனிதப்பிறவியும் வேண்டுவதே” கணபதி பிள்ளை , விவரம் தெரிந்ததில் இருந்தே தஞ்சை பெரிய கோவிலில் தான் வளர்கிறார். வளர்ந்த பிறகு , கோவிலில் “Guide” ஆக பணிபுரிகிறார். ஒவ்வொரு நாளும் கோவிலுக்கு வருவோரிடம் , ராஜராஜன் கோவில் கட்டியிருக்கும் அழகை சிலாகித்து கூறுவார். அவருடைய ஒரே மகன், வெளிநாட்டில் வசிக்கிறான். தன்னுடைய அப்பாவை உடன் அழைக்கிறான் . அவர் என்ன செய்தார் ?????

🔆“ஸ்தபதி” மிகவும் ரம்மியமான , அழகான , சிற்பங்களை செதிக்கிய சிற்பி. அந்த கலை கூடத்தில் நிற்கும் சிற்பம் , அவரின் திறமைக்குச் சான்று. ஊரில் இருந்து ஒதுங்கி வாழும் சிற்பி அவர். அவரை சந்திக்க ஒருவர் ஆசைபடுகிறார் . பிறகு என்ன ஆனது ???

அனைத்து கதைகளும் அருமையாக இருந்தது .


புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி

சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி
வாசிப்பை நேசிப்போம்
12 reviews
March 11, 2024
மொத்தம் 19 கதைகள் உள்ளன.ஒவ்வொரு கதையும் மனதில் தாக்கம் ஏற்ப்படுத்துபவையை.ஆனால் சில கதைகளின் மொழி நடை கஷ்டமாக உள்ளது புரிந்து கொள்வதற்கு.மற்றபடி நல்ல புத்தகம்.சில கதைகள் தொடர்ந்து படிக்க வைத்தது.சில கதைகளின் எழுத்து நடையால் படிப்பில் கடினம் ஏற்பட்டது.மாயை,மயானம்,வைக்கோல் கன்றுகள்,அரிதாரம் எனக்கு பிடித்த கதைகள்.
Displaying 1 - 3 of 3 reviews