மனிதனின் வாழ்க்கையில் தேடல் இன்றியமையாதது. பணமுள்ளவன் ஆரோக்கியத்தைத் தேடுகிறான். ஆரோக்கியமானவன் பதவியைத் தேடுகிறான். பதவியில் உள்ளவன் பணத்தைத் தேடுகிறான். இவை அனைத்தும் உள்ளவன் நிம்மதியைத் தேடுகிறான். யாத்ரீகன், தன் காதலைத் தொலைத்துவிட்டு தேடி அலையும் ஒரு யாத்ரீகனின் கதை. வழியில் அவன் கற்றுக் கொள்ளும் பாடங்கள், சந்திக்கும் மனிதர்கள், அவர்கள் இவனது வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்கள் அவனது மனிதத்தைப் புனிதமாக்குகின்றன. வாருங்கள், யாத்ரீகனுடன் ஒரு யாத்திரை செல்வோம்.
“யாத்ரீகன்” – “அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ்” ஒவ்வொருவரும் கண்டிப்பாக பயணம் செய்யக்கூடிய வாழ்க்கை வண்டி இது…கதையாசிரியர் நம் பயணத்தை தனக்கே உரிய தனித்துவத்தில் மிக அழகாக வடிவமைத்துள்ளார்…., மிக சுவாரஸ்யமான நிறுத்துங்களுடன், எதிர்பாராத வளைவுகளோடும், வித்தியாசமான பயணிகளுடனும் நாம் பயணம் செய்தாலும், “அன்பு” என்ற பயணச்சீட்டு அனைவரையும் ஒரே பாதையில் எடுத்துச்செல்வது மிக அருமை…தொழில்நுட்பம் நம் உணர்வுகளை நிர்ணயிக்கும் வல்லமையும், உறவு நிலைகளை மாற்றும் ஊடுருவலும் பெற்றுள்ள இந்த நூற்றாண்டில், சின்ன சின்ன சந்தோஷங்களையும், நாம் மறந்த மனித உணர்வுகளையும் நினைவுப்படுத்தியதற்கு மனமார்ந்த நன்றிகள்…!! அதி வேகத்தில் சுழலும் காலக்கடிகாரத்தை “மனிதம்” மற்றும் “அன்பு” என்ற இரு முற்களால் நிறுத்தி அழகாக சுழலும் காலக்கடிரமாய் மாற்றும் சக்தியை , இந்த பயணத்தை மேற்கொள்ளும் ஒவ்வொரு “யாத்ரீகனும்” உணர வைக்கும் கதையாசிரியருக்கு கைத்தட்டல்கள் நிச்சயம்…!! “அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்ற திருக்குறளின் உருவமாய் ஒவ்வொரு கதாப்பாதிரமும் வளம் வந்திருப்பது கதையாசிரியருக்கு, அன்பின் மேல் இருக்கும் அளப்பெரிய நம்பிக்கையைத் தெளிவாக பிரதிபலிக்கிறது…!! “இளைஞர்களின் புதினம்” என்று சொன்னால் அது மிகையாகாது…!! அன்பைக் காதலிக்கும் ஒவ்வொருவரும் இந்த பயணத்தை மேற்கொள்ளுங்கள்..!! அதுவே, கதையாசிரியரை இன்னும் நிறைய “அறம்” போற்றும் மகிழ்ச்சிதரும் “படைப்புகளை” உருவாக்க ஊக்கப்படுத்தும்..!! பயணங்கள் தொடரட்டும்..!! புதுவுலகம் பிறக்கட்டும்..!! இன்னும் பல வெற்றிப்படைப்புகள் சமுதாயத்திற்கு தந்திட என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்…!!