அன்று இரவு சுந்தரலிங்கம் வந்தான். சொர்ணம்தான் முதலில் பார்த்தாளாயினும் அவன் ராஜா சாருடன் பேசவேண்டுமென்றதால், வாசல் திண்ணையில் இரண்டு நாற்காலிகள் போட்டு, ராஜாவும் அவனும் பேச உட்காரந்தார்கள். ராஜா, சுந்தரலிங்கமே பேசட்டுமென்று வாயே திறக்க வில்லை. சுந்தரலிங்கம், ” இன்னிக்கு கேஸ் நடக்கல்லை, ஜட்ஜ் லீவ்ல போயிருக்கார். இந்த கேஸேல்லாம் அப்படித்தான், சமான்னியத்துக்கு முடியாது. ” எதற்கு இதை சொல்ல வந்தானென்று ராஜா யோசித்தாலும் ஒன்றும் பேசவில்லை. ” ஜட்ஜ் லாங் லீவ்ல போகப்போறதா பேசிக்கறாங்க, அப்ப பல மாசங்க கேஸ் நடக்காது. தள்ளி போய்டும், ஆறு மாசம் ஒரு வருஷம்கூட ஆகலாம். ” ராஜா இன்னும் மௌனவிரதமே காத்தவன்போல் பேசவில்லை. ” வேறே ஜட்ஜையும் உடனே நியமிக்கறதில்லை.