காமதேனுவில் தொடராக வந்த இந்தப் பயணக்கட்டுரைகள் வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் எஸ்.ரா மேற்கொண்ட பயண அனுபவத்திலிருந்து எழுதப்பட்டிருக்கின்றன. பயணியின் கண்கள் உலகின் உன்னதங்களை மட்டுமில்லை இருட்டுக்குள் வாழும் மனிதர்களையும் அடையாளம் காட்டவே செய்கின்றன. உலகத்தை அறிந்து கொள்வதற்கான தேடுதலே இந்தப் பயணத்திற்கான தூண்டுதல். ஒவ்வொரு பயணமும் ஒரு பாடமே.
S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
100 பக்க புத்தகம்தானே என்று, அடுத்த பெருநாவல் எடுப்பதற்கு முன், ஒரு எளிய வாசிப்பாக ஓரிரவில் வாசித்து முடிக்கவே இப்புத்தகத்தை தேர்வு செய்தேன். ஆனால், பக்கத்தின் எண்ணிக்கையில் அடங்கியதல்ல ஒரு புத்தகத்தின் தரம்/தன்மை, பகிர்ந்த நேர்த்தியில் அடங்கியது என்று உணர வைத்தது. ஆசிரியரின் பயணக் கட்டுரைதானே, அப்படியே எளிதில் வாசித்து கடந்தவிடலாம் என்று நினைத்த என்னை, அவர் எழுத்தில் கடத்திவிட்டார் என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு பக்கத்திலும், அவர் பகிரும் அனுபவத்திற்கு சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு குறிப்பினை அவர் கோர்த்து கொடுத்துள்ள விதமும், அவர் தேடி தேடி பயணப்பட்ட இடமும், என்னை ஈர்த்தன. எனக்கு மிகவும் பழக்கப்பட்ட, சம்பந்தப்பட்ட இடங்களிலேயே எனக்குத் தெரியாத பல விடயங்களை போகிற போக்கில் புகுத்தி சென்றிருக்கிறார் எஸ்.ரா. பயணக் கட்டுரையின் முக்கியத்துவத்தை அறிய செய்தமைக்கு, அவருக்கு என் நன்றிகள்.
இந்த புத்தகத்தில் தன் பயண அனுபவங்களையும்,நிறைய வரலாற்று தகவல்களையும் தன் எழுத்தின் மூலம் மிகவும் அழகாகவும்,சுருக்கமாகவும் விளக்கியுள்ளார்.
சுற்றுலா என்றால் வழக்கமாக ஊட்டி,கொடைக்கானல் என்று தன் குடும்பத்துடன் செல்லும் நபர்களுக்கு இந்த நூலை படித்த பிறகு நிறைய மாற்றம் வரும்.நம் தமிழ்நாட்டில்,இந்தியாவில் இவ்வளவு வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இருப்பதே நமக்கு தெரியவில்லையே என்று.ஒரு இடத்துக்கு செல்லும் முன்பு அந்த இடத்தை பற்றி தெரிந்து கொண்டு சென்றால் சிறப்பாக இருக்கும்.
நிறைய இடங்களுக்கு தன் எழுத்தின் மூலம் நம்மை அழைத்து செல்கிறார்.ஏற்கனவே இவரின் நூலான இலக்கற்ற பயணி,தேசாந்திரி போன்ற நூல்களை படித்து இருக்கிறேன்.அறியாத பல இடங்களையும்,வரலாறுகளையும் தேடி தேடி நமக்கு அழகாக எடுத்து கூறுவதே தனி சிறப்பு.
நாம் வெளிநாடு,வேறு மாநிலம் செல்லும் போது அங்கு நம் தமிழ் பேசும் நபர்களை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று இந்த நூலில் ஒரு இடத்தில் கூறி இருப்பார்.இது உண்மை தான் நிறைய பேருக்கும் இந்த அனுபவம் இருக்கும்.
காந்தியை பற்றி ஒரு இடத்தில் இவ்வாறு குறிப்பிட்டு இருப்பார் எஸ் ரா.இந்தியாவை அடிமைப்படுத்திய வெள்ளையர்களைக் கூட அவர் மரியாதையாகவே விமர்சனம் செய்தார். ஒரு முறை கூட அவர்களை இழிவாக பேசியதில்லை என்று.
தமிழகத்தை ஆண்ட சேர சோழ பாண்டிய மன்னர்கள் என்ன உடை அணிந்திருந்தார்கள்? மேல்சட்டை அணியும் பழக்கம் இருந்ததா? வேஷ்டி கட்டியிருந்தார்களா? சினிமாவில் காட்டப்படும் ராஜா வேஷம் வெறும் ஒப்பனை தானே. சிற்பங்களில் காணப்படும் மன்னர் உருவம் எதிலும் மேல்சட்டை அணிந்த தோற்றம் கிடையாது. சுவரோவியங்களிலும் அப்படியே.
தையல் இயந்திரம் 1790 ஆம் ஆண்டு தாமஸ் செயின்ட் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. விலங்குகளின் தோல்களைத் தைப்பதற்காக இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டது. அதன் முன்பு வரை கையால் ஊசி கொண்டு தைப்பதே வழக்கம். விதவிதமான ஊசி வகைகள் நம்மிடம் இருந்திருக்கின்றன. சீனாவிலிருந்தும் கிரேக்கத்திலிருந்தும் நுண்ணிய ஊசிகள் தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டதாக தகவல். அதைக் கொண்டு தையல் கலைஞர்கள் ஆடைகள் தைத்துத் தந்திருக்கக் கூடும். தமிழக மன்னர்கள் அணிந்த ஆடைகள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.
இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஆடைகளே நமக்கு கிடைத்துள்ள சாட்சியம். நெசவுத்தொழிலில் நாம் மேலோங்கி இருந்ததற்கான ஆதாரங்கள் நிறையவுள்ளன.
கல்வி நிலையங்களை உருவாக்கியதில் சமணர்கள் முன்னோடிகள். மலைக்குகைகளில் சமண பள்ளிகளை நிறுவினார்கள். சாதி சமய வேறுபாடற்ற சமத்துவக் கல்வி அவர்களாலே முதன்முறையாக வழங்கப்பட்டது.
சிறந்த புத்தகம் நேரம் கிடைக்கும் போது படித்து பாருங்கள். நன்றி.. - யாழினியன் ❤️
இந்த புத்தகம் என்னை மிகவும் கவர்ந்ததற்கு சில காரணங்கள் உண்டு. நான் இதுவரை வாசித்த பயண கட்டுரைகளில் பயணம் சென்ற அனுபவம், காட்சி விவரணை மற்றும் அந்த இடத்தின் வரலாறு இவை அனைத்தும் அடங்கியதாக இருக்கும்.
ஸ்.ரா அவர்கள் ஒவ்வொரு இடத்திற்கு போகும் பொழுது மேற்கண்ட அனைத்தையும் நமக்கு கடத்துவதோடு மட்டுமல்லாமல், காணச் சென்ற அந்த இடமானது தனக்கு மற்ற இடங்களை நினைவுபடுத்தியவை அனைத்தும் பகிர்கிறார். வெறும் உணர்வு சார்ந்த நினைவலைகள் இல்லாது அறிவார்ந்த ஒப்பீட்டு ஆய்வையையும் நம்மோடு பகிர்கிறார்.
மைசூர் பற்றிய இவரது நினைவலைகள் உணர்வுகள் சார்ந்தது. மைசூர் என்ற இடத்தை கேட்கும் போதெல்லாம் என் நினைவுக்கு வருவது "குடும்பத்துடன் எல்லோரும் சென்று கண்டு களித்த அந்த தருணங்களை மீள்பார்வை செய்வதற்கு ஒரு ஒளிப்படம் கூட இல்லையே " என்ற ஏக்கம் தான்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பழமையான கட்டிடங்களுக்கு முன் நம் தமிழ்நாட்டு பழமை வாய்ந்த கட்டிடங்கள் ஒன்றுமே கிடையாது என்ற இவரது அவதானிப்பு சற்று திகைப்பூட்டினாலும் , அறிவார்ந்த ஒரு கருத்தாகப் பார்க்கிறேன்.
இந்த இடத்திற்கு போக வேண்டும் என்ற ஆசையை ஒரு கட்டுரை அளித்திருக்கிறது. அந்த இடம் தான் ஒடிஷா மாநிலம்.அங்குள்ள அரிசியின் விளைச்சலைப் பற்றி இவர் சொல்லும் தகவல்கள் நான் அறியாதது.
இந்த புத்தகத்துடன் சேர்த்து எஸ்.ரா அவர்களின் 4 புத்தகங்களை வாசித்துவிட்டேன். ஒன்று கூட சலிப்பு தட்டவில்லை. அவரின் படைப்புகளை மேலும் வாசிக்க ஆவலோடு இருக்கிறேன்.
காமதேனுல தொடரா வந்த 18 பயணக்கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. வெளிநாடுகள்ல அப்புறம் வட இந்தியால travel பண்ணப்போ கிடைச்ச அனுபவத்தை கட்டுரைகளா எழுதி இருக்காரு ஆசிரியர்.
இதுல நெறைய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து இருக்காரு எஸ். இரா.
ஒவ்வொரு கட்டுரையும் அருமையா இருந்துச்சு. போன இடத்தை மட்டும் பாக்காம அதை சுத்தி என்ன நடக்குது, அங்க இருக்க மக்கள் என்ன பண்றாங்கனு எல்லாத்தையும் note பண்ணி எழுதி இருக்காரு. இது இல்லாம ஒவ்வொரு chapter endலயும் அந்த chapterகு relatableஆன படத்தையோ இல்லை புத்தகத்தையோ recommend பண்ணி இருக்காரு.
எனக்கு பிடிச்ச கட்டுரைகள் - நயாகராவின் சாரல், கம்பனின் நினைவிடம், அரண்மனையின் உள்ளே, ரணக்பூரின் காலவிருட்சம், நியூயார்க்கில் ஒரு இரவு, பிகாஸோவின் முன்னால், கும்பல்கர் கோட்டை, காந்தியெனும் நெருப்பு.
என் மனதைக் கவர்ந்த சில இடங்களையும், என் ஆர்வத்தைத் தூண்டிய சில புத்தகங்களையும் note பண்ணி வச்சிருக்கேன். சின்ன book தான். பயணக்கட்டுரைகள் படிக்கணும்னு நினைக்கிறவங்க இந்த புத்தகத்திலிருந்து ஆரம்பிக்கலாம்.
இந்த வருடம் வாசித்து முடித்த முதல் புத்தகம். எஸ். ரா வுடன் இரண்டாம் புத்தக பயணம்.
ரயில் பயணங்களை பற்றிய புத்தகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் வாசிக்க தொடங்கினேன். ஆனால் 18 அத்தியாயங்களும் வெவ்வேறு பயண குறிப்புகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.
பயணங்களில் நாம் அதிக கண்டிராத காண வேண்டிய இடங்களின் தொகுப்பு.
பொதுவாக புத்தகங்கள் மூலம் ஊர்களையும், மக்களையும், அவர்களின் வாழ்வியல் முறைகளையும் அறிந்து கொள்ள முடியும் என்பது என் நம்பிக்கை.
நம் நாட்டில் நாம் அறிந்து கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்று இந்த புத்தகம் மூலம் எஸ்.ரா காட்டி உள்ளார். அவற்றை நோரில் காண வேண்டும் என்ற ஆவலுடன் புத்தகத்தை நிறைவு செய்கிறேன்.
"திரும்பி பார்க்கையில் காலம் ஓர் இடமாக காட்சி அளிக்கிறது" என்ற மிக அழகான நகுலனின் கவிதையுடன் ஆரம்பிக்கிறது இந்த புத்தகம். பயணங்களின் அழகையும், பெரிதும் அறியப்படாத, ஆனால் அருமையும் பெருமையும் வாய்ந்த இடங்களை காணும் போது வரும் மகிழ்ச்சியையும் அழகாய் விவரிக்கிறது இந்த புத்தகம். ஒரு புதிய ஊரில், மேல் தட்டு விடுதிகளில் தங்கி, அங்கேயும் அந்த ஊரின் சுவை அறியாமல் நம் அன்றாடம் உண்பதையே உண்டு, எல்லோரும் செல்லும் இடங்களுக்கே சென்று வருவதை விட, அந்த ஊரின் அடித்தட்டு இடங்களில் தங்கி, அவ்வூரின் பிரத்யேக உணவுகளையும், கலைகளையும் அனுபவிப்பதே ஒரு நிறைந்த பயணம். இப்புத்தகத்தின் அருமையை பறைசாற்ற பின் வரும் வரிகளே போதும்.
- "நிறைய பயணம் செய்தவன் ஒரு போதும் இயற்கையை சீரழிக்க மாட்டான். உணவை வீணடிக்க மாட்டான். சக மனிதர்களை வெறுக்க மாட்டான். ஒவ்வொரு பயணமும் ஒரு பாடமே."
- "பறவையைப் போலத் தன் பசிக்கு மட்டும் உணவு தேடுங்கள். நிச்சயம் நிறையத் தூரம் பறந்து போகலாம்"
- "கலையின் வழியாகவே மனிதன் கடவுளுடன் உறவு கொள்கிறான். கடவுளைக் கொண்டாடுகிறான். கலையே மனிதனின் மகத்தான வெளிப்பாடு. அதைத் ரசிக்கவும் கொண்டாடவும் பயணமே தூண்டுதலாகிறது"
பயணத்தை விரும்புவோர் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.
I was under the impression that the essays would all be related to trains and train journeys. But after reading a few pages, I understood that they were short essays about his travel experiences. As every other review of this book says, it will definitely make think twice about how you've been traveling all this while and how you should be doing it hereafter. The book's core message is that every journey should change/impact your inner self. As you travel to places, the experiences make you travel inside your heart/soul.
The author listed experiences within & outside India. But in every essay, I found that it all comes down to the small things in life like sitting on the floor to eat, resting under the shade of a tree instead of AC, enjoying the view instead of clicking photos, enjoying the bumpy rides, trying the roadside food, understanding the people there, etc.
Below are some points in the essays that made me read twice: 1. Gandhi's memorial makes you question your conscience. 2. Picasso's answer to what art is - a depiction of your emotion and not a copy of objects. 3. How the internet and photography have reduced the interest in seeing actual art. 4. How Pudhumai Pithan should be honored with a memorial like N.K.Narayanan and Kuvempu. 5. Good info on John Sullivan who discovered Ooty. 6. How people enjoy the nightlife in Times Square and how we are spending them in front of a TV! 7. How trips feel different during different ages and to travel more while young. 8. How a poet should be honored. Kamban's memorial with one security guard and no one to answer questions does ache your heart. 9. Last but not least - Train Journeys! Waiting on the platform for long hours, reading in a passenger train without any disturbance, etc. Every journey is a lesson. One who goes on long journeys will realize not to spoil nature and not to waste food and that he is dependent on his fellow traveler. Out of interest, I did google some of the destinations mentioned after reading. They were stunning!
The author has explained his journeys in pure and simple Tamil which makes the reading peaceful and pleasurable (I'm tired of reading colloquial Tamil like that of Jeyamohan's). I think his books are a good way to transition towards Non-fiction in an easier way. Looking forward to reading more of S.Ra's works! :)
எஸ்.ரா எழுதியிருக்கும் பயண நூல்கள் பல. அவற்றில் முக்கியம் வாய்ந்தது தேசாந்திரி. அதற்கு அடுத்தாற் போல் ரயில் நிலையங்களின் தோழமை.
இந்த புத்தகத்தில் 18 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவைகள் அனைத்தும், எஸ் ரா மேற்கொண்ட பயணங்களின் அனுபவக் கட்டுரைகளாகும்.பல உலக நாடுகள், இந்தியாவின் பல மாநிலங்கள் என வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைக் காண்பதற்கு பல்வேறு பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
லட்சமாண்டுகள் பழமையான ஆதிமனிதர்கள் வாழ்ந்த குகையிலிருந்து கட்டுரை துவங்குகிறது.
பின்பு, நயாகரா நீர்வீழ்ச்சியிற்குச் சென்று கண்டுகளித்தது, குதிரைச் சந்தைக்குச் சென்று பார்வையிட்டது, ஹத்தி கும்பா, திப்பு சுல்தானின் கோடை மாளிகைக்குச் சென்றது என பல்வேறு இடங்களுக்குச் சென்ற பயணங்களை சுவைபட விவரிக்கிறார்.
கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவிடம் கேட்பாரற்றுக் கிடப்பதை எண்ணி மனம் வருந்துகிறார்.
பின்பு, உலகின் மிக உயரமான கட்டடத்தில் உள்ள உணவகத்திற்குச் சென்றது, மைசூர் அரண்மனைக்குப் பள்ளி நாட்களில் சென்றது என பல அனுபவங்கள் எழுத்துகளின் ஊடே நம்மை வருடச் செய்கிறது.
ஆண்டுதோறும், கோடை விடுமுறையில் ஊட்டிச் செல்லும் நாம், அதிகமாக செல்வது படகு இல்லம், தொட்டபெட்டா காட்சி முனை, ஏரி, தாவரவியல் பூங்கா ஆகியவை தான். ஆனால் இந்த ஊட்டியை உருவாக்கிய ஆங்கியேலரைப் பற்றி நமக்கு ஏதும் தெரியவில்லை. சல்லிவன் எனும் பெயருடைய ஆங்கில ஆட்சியாளரின் முயற்சியாலேயே ஊட்டி மலை அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
இப்படி பயணக் கட்டுரைகளின் வழியாக நாம் அறிந்திடாத, பல வரலாற்று உண்மைகளைக் கூறியுள்ளார்.பல முறை ரயில் நிலையங்களே இவருக்கு தோழமையாக இருந்திருக்கின்றன.
பயணங்களை நேசிப்பவர்கள் வாசிக்க வேண்டிய நூல் இது.
புத்தகத்தில் இருந்து சில...
"அருவி , வீழ்ந்த இடத்தில் தேங்கி விடுவதில்லை! தன் அடுத்தப் பயணத்தைத் துவங்கி விடுகிறது!"
"பயணம் என்பது வெறும் புகைப்படம் எடுப்பதற்கான தல்ல. ஒவ்வொன்றையும் நிதானமாக நின்று ரசித்து அனுபவித்துக் கொண்டாட வேண்டும் என்பதே பயணத்தின் அடிப்படை"
🚂பயணங்கள் மேற்கொள்வோர் தங்களது பயண அனுபவங்களை, தாங்கள் ரசித்துப் பா���்த்த இடங்களை புகைப்படங்களாகவும், ஒளிப்பதிவுகளாகவும் இணைய உலகில் பதிவேற்றி வருகின்றனர். காட்சிகள் மூலம் உலகைச் சுற்றிப் பார்த்தது போன்ற உணர்வையும், ‘நம்ம எல்லாம் எப்போ இந்த மாதிரி எடத்துக்குப் போறது’ என்ற ஒருவிதமான ஏக்கத்தையும் அவை ஏற்படுத்திவிடுகின்றன. அப்படியானதொரு உணர்வைப் பயணக் கட்டுரைகளைத் தாங்கியுள்ள எழுத்துக்களும் தவறாமல் உருவாக்குகின்றன. எஸ்.ரா அவர்கள் தனது பயணங்கள் பற்றிக் கூறும் 18 கட்டுரைகளைக் கொண்ட இந்நூலும் அதற்கு விதிவிலக்கானது அல்ல.
🚂இப்புத்தகம் மூலம் அருவியில் நனையலாம். குகைக்குள் எட்டிப் பார்க்கலாம். அரண்மனையைச் சுற்றி வரலாம். ஓவியக் கண்காட்சிக்குப் போகலாம். கோட்டையின் உயரம் வரை சென்று வரலாம். மேற்கோள் காட்டப்பட்டுள்ள படைப்புகள் பற்றிய அறிமுகத்தைப் பெறலாம்.
🚂ஒடிசா மாநிலம் சிறப்புமிக்க இடங்கள், தொல்லியல் களங்கள், இயற்கை வாழிடங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய கல்ச்சுரல் அட்லஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்களாம். அதேபோல ஒன்று தமிழகத்திற்கும் தேவை என ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார். என்னதான் கல்ச்சுரல் அட்லஸ் என ஒன்று கொண்டு வந்தாலும் பயணம் போக காசு தேவை என்ற ரியாலிட்டி முகத்தில் அறையாமல் இல்லை. ஆனாலும் எப்படியாவது காசு சேர்த்து இப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள ஒடிசா மாநிலத்தின் சில்கா ஏரியைப் போய்ப் பார்த்து விட வேண்டும் என்ற ஆசை துளிர்த்துள்ளது. அந்த ஏரியில் டால்பின்கள் இருக்கிறதாம். வேறென்ன வேண்டும்?
🚂 நான் வாசிக்கும் எஸ்.ரா. அவர்களின் நான்காவது புத்தகம். எஸ்.ரா. அவர்களின் மற்றொரு பயணக்கட்டுரை.
🚂 ஆதி மனிதர்கள் வாழ்ந்த குடியம் குகை, நயாகரா நீர்வீழ்ச்சி, அந்தியூர் குதிரை சந்தை, ஆவுடையார் கோவில் குதிரை சிற்பங்கள், ஒடிசா பயணம், ஶ்ரீரங்கபட்டினம் திப்பு சுல்தானின் மாளிகை, ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் பாஷோ, நாட்டரசன் கோட்டை கம்பர் நினைவிடம், சி.என். டவர் உணவகம், ஜெய்விலாஸ் அரண்மனை வெள்ளி ரயில், பள்ளி சுற்றுலா, ரணக்பூர் சமண கோவில், மேடை நாடகம், ஊட்டியின் ஜான் சல்லிவன், குவெம்புவின் நினைவில்லம், பாப்லோ பிகாசோவின் ஓவியக்கண்காட்சி, ஷேக் சையத் கிராண்ட் மசூதி, கும்பல்கர் கோட்டை, சில்கா ஏரி, மகாத்மா சமாதி.
🚂 இத்தனை விஷயங்களை பற்றி வெறும் நூறு பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் சொல்ல எஸ்.ரா. அவர்களால் மட்டுமே சாத்தியம். இத்தனை இடங்களை பற்றி அவர் நேரில் கண்ட அனுபவங்களை எழுதியுள்ளதால் வாசிக்கும்போது நமக்கு சலிப்பு தோன்றாது.
🚂 பள்ளி சுற்றுலாவில் அவர் வகுப்பு மாணவன் ஜெயபால் பற்றிய கதை மனதிற்கு வருத்தமாக இருந்தது. மனிதன் உருவாக்கிய பணம் தான் இந்த பிரபஞ்சம் உருவாக்கிய பூமியை ஆள்கிறது.
🚂 ரயில் நிலையங்கள் பற்றிய நூல் என்று நினைத்து தான் நான் இந்த புத்தகத்தை வாசிக்க துவங்கினேன். ஆனால் ரயில் நிலையங்களின் தோழமை என்பது ஒரே ஒரு கட்டுரை தான் என்பது மட்டுமே என் ஏமாற்றம். மற்றபடி, பயணக்கட்டுரைகள் வாசிக்க நினைக்கும் எல்லா வாசகர்களுக்கும் எஸ்.ரா. அவர்களின் இந்த புத்தகம் ஒரு நல்ல தொடக்கம்.
This entire review has been hidden because of spoilers.
பொதுவாகவே அட்டை முதல் அட்டை வரை ஒரு புத்தகத்தை படித்துவிடுபவன் நான்.
‘திரும்பிப் பார்க்கையில் காலம் ஒரு இடமாகக் காட்சியளிக்கிறது' என்ற கவிதையில் தொடங்கும் முன்னுரையிலேயே இது வாசித்து விட வேண்டிய புத்தகம் என நினைத்துக் கொண்டேன்.
அதற்கேற்றபடியே புத்தகம் முழுவதும் பயணக் குறிப்புகளை அள்ளித் தெளித்திருக்கிறார் எஸ்.ரா.
மனித நாகரீக வளர்ச்சியின் முதல் அடியே பயணத்தில் தான் துவங்குகிறதாக நம்புகிறேன்.
பயணத்தைத் பற்றி, தான் பயணித்த இடங்களைக் குறித்தான தெளிவான ஒரு நூல்.
வயது வரம்பின்றி விருப்பு வெறுப்பின்றி எல்லோராலும் வாசிக்கப்பட வேண்டிய ஒரு புத்தகம் ‘ரயில் நிலையங்களின் தோழமை'
A Book with complete a complete travel experience of an author, which changes your perspective about travel and makes you to visualise the purpose of travel.
My Thoughts about this Book-- "Travel can even be stressful, but what you accept and learn from that becomes the essence of Travelling."
The reason why i cherish S. Ramakrishnan Sir as a writer and speaker is his simple yet powerful content. This book is his travelog essays and such a interesting read. Small book, yet a good one. Recommend for beginners