‘ஜென்டில்மேன்’ படத்தைப் பார்த்துவிட்டு எடுத்த பேட்டியில் ‘‘நீங்கள் பிரமாணரா… இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பானவரா?’’ என்றெல்லாம் கேட்டேன். மேற்படி கேள்விகளுக்கு ‘இல்லை’ என்று பதில் சொன்னதோடு ‘சில சிறுபத்திரிகைகளில் என்னை இப்படித்தான் விமர்சனம் செய்தாங்க. கல்லூரியில் ‘சீட்’ கிடைக்காதவன் தற்கொலை செஞ்சுக்கிறான். அதே மாதிரி சீட் கிடைக்காமல் போன அவனது நண்பன் எல்லோருக்கும் கல்வி கிடைக்க ராபின்ஹ¨ட் போலபோராடுகிறான். இதுதான் கதை. படத்தில் ஒரு பிராமின் பையனையும், ஒரு நான் பிராமின் பையனையும் காட்டியிருக்கிறேன்... ரெண்டு பேருக்கும் காலேஜில் இடம் கிடைக்கல? அதையேன் விட்றாங்க’’ என்றார். ‘‘ஒருவேளை உங்கள் பெயர் ‘ஷங்கர்’ என்று இருப்பதால் அப்படி நினைத
தமிழ்மகன் (பிறப்பு: டிசம்பர் 24, 1964) தமிழ் எழுத்தாளர் ஆவார். இவரது இயற்பெயர் வெங்கடேசன். வளவன், தேனீ ஆகியவை பிற புனைப் பெயர்கள் ஆகும். இதுவரை ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், சில நாவல்கள் எழுதியுள்ளார். அறிவியல், சமூக சிறுகதைகளை சுவாரசியமான நடையில் எழுதி வருகிறார். திரைப்படம் தொடர்பான கட்டுரைகள், திரைப்படங்களுக்கு உரையாடல்கள் எழுதி உள்ளார். இவர் எழுதிய மானுடப் பண்ணை எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1994 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டிலும் “எட்டாயிரம் தலைமுறை” எனும் நூல் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை வகைப்பாட்டிலும் பரிசு பெற்றிருக்கின்றன.
"பிரம்மாண்ட இயக்குநர்" என்று எல்லோரும் அழைக்கும் இயக்குனர் சங்கரின் மன்னிக்கவும் ஷங்கரின் ஆரம்பகால வாழ்க்கையை அறிமுகம் செய்கிறது இந்த புத்தகம். மிகவும் விரிவான, இயக்குனராக துடிக்கும் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கிடும் புத்தகமாகவெல்லாம் இது இல்லை. அளவில் மிகச் சிறிய புத்தகம். ஒரே சிட்டிங்கில் படித்து விடலாம். அறிவுரை எல்லாம் ஒன்றுமே இல்லை. அப்படி ஒரு தொனி எதிலாவது வெளிப்பட்டாலும் அருகே அடைப்புக் குறிக்குள் அறிவுரை! எனப் போட்டு அதை இயல்பான ஒரு உரையாடல் போல மாற்றி இருக்கிறார்கள்.
ஷங்கர் அவர்கள் "சீதா" என்ற எஸ்.ஏ.சியின் படத்தில் காமெடியனாக நடித்திருப்பார் என்று தெரியும். நடிக்கத் தான் அவர் வந்தார் என்பது கூட பிறகு தான் தெரியும். ஆனால் அவர் சினிமாவுக்கு வந்ததே வழக்கமாக சொல்லப்படுவதைப் போல ஒரு விபத்து போல தான் நடந்திருக்கிறது. கல்லூரி, நண்பர்கள் வட்டம், அக்கம் பக்கத்து வீட்டார்கள் என அனைவரையும் மிமிக்ரி, காமெடி என செய்து சிரிக்க வைத்திட்ட ஷங்கர் சினிமாவைத் தேடி வந்ததில் ஆச்சர்யம் இல்லை. அதுவும் தமிழ் சினிமாவின் மைய நகரமான சென்னையில் இருந்து கொண்டு. விரைவாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக கஞ்சா வியாபாரம் செய்யத் துணிந்தது, ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பாத்ரூமில் பயணம் செய்தது, தொழிற்சாலை போராட்டத்தில் பங்கு கொண்டு 5 நாட்கள் சிறையில் கழிக்க நேர்ந்தது என இதுவரை அறியாத ஷங்கரின் பெர்சனல் பக்கங்களை புத்தகத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.
காமெடியனாக வர வேண்டும் என்ற கனவில் நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஷங்கர் ஒரு நாள் இரவு அமைதியாக வீட்டுக்குள் நுழைந்துவிட முயற்சிக்கும் போது அவரது தந்தை, "ஹக்கும் வந்துட்டாருப்பா கவுண்டமணி" எனக் கலாய்த்ததை பகிர்ந்திருப்பார். இதைப் படித்த போது வாய் விட்டு சிரித்தேன். ஆனால் அதே தந்தை நீதிக்கு தண்டனை படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஷங்கர், விஜயகாந்த் கையால் விருது பெறுகையில் ஷங்கருக்கே தெரியாமல் வந்து அதனை பார்த்துவிட்டு பெருமையோடு அவரிடம் பகிர்ந்து கொண்ட நிகழ்ச்சி நெகிழ்ச்சியாக இருந்தது. துரதிஷ்டவசமாக ஷங்கர் உதவி இயக்குனராக இருக்கும் போதே அவரது தந்தை நுரையீரல் புற்றுநோய் வந்து இறந்துவிட்டார். ஒரு வேளை அவரது தந்தை உயிரோடு இருந்து ஷங்கரின் இப்போதைய பிரம்மாண்ட வளர்ச்சியைப் பார்த்திருந்ததால் எத்தனை பெருமிதம் கொண்டிருப்பார் என எண்ணாமல் இருக்க முடியவில்லை.
ஷங்கர் அவர்கள் பகிர்ந்ததை எழுத்தாக்கிய தமிழ்மகன் அவர்கள் சிறப்பாக எழுதியிருக்கிறார். மிக சுவாரசியமான எழுத்துநடையில் அவரது அனுபவங்களை அளித்திருக்கிறார்.
காலத்திற்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொண்டு 25 வருடங்களுக்கும் மேலாக "பிரம்மாண்ட இயக்குனர்", "உச்ச இயக்குனர்" என்ற அடையாளங்களோடு இருக்கும் ஷங்கர் ஒரு ஆச்சர்யம் தான்.