வாழ்க்கை எனும் மகாநதி, பொங்கிப் பிரவகித்து, மூர்க்கமும் மூர்த்தன்யமும் பொருந்த, திகிலேற்றுகிற மோகினிக் கவர்ச்சியுடன் நடந்து செல்லும் பேரழகை நீங்கள் என்றேனும், ஓர் கணமேனும் தரிசித்ததுண்டா? நான் அதை அனுபவித்திருக்கிறேன். குலைநடுங்க, மேனிபுளகம் உற, அச்சத்தால் உலர்ந்து, சந்தோஷத்தால் கிளர்ந்து, பெருவிருப்போடு உயிர் தோய்ந்து நான் அனுபவித்திருக்கிறேன். இடையறாது ஓடிக்கொண்டிருக்கும் மகாநதி, ஒரு கணம் சட்டென்று உறைந்து நின்று, பின்னர் பெருக்கெடுத்தால் எப்படி இருக்கும்? அதி அற்புத அனுபவம் அது! அந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளவே இந்த நாவல். - பிரபஞ்சன்
Prapanchan (Tamil: பிரபஞ்சன்), is the pseudonym of S. Vaidyalingam (Tamil: சாரங்கபாணி வைத்தியலிங்கம்) a Tamil, writer and critic from Puducherry, India.
He started his career as a Tamil teacher in Thanjavur. He also worked as a journalist in Kumudam, Ananda Vikatan and Kungumam. In 1961, he published his first short story Enna ulagamada in the magazine Bharani. He was influenced by the Self-Respect Movement. He had published 46 books. In 1995, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his historical novel Vaanam Vasappadum (lit. The Sky will be ours) set in the times of Ananda Ranga Pillai. His works have been translated into Hindi, Telugu, Kannada, German, French, English and Swedish. His play Muttai is part of the curriculum in Delhi University and his short story collection Netrru Manidhargal is a textbook in many colleges.
"அந்த காலத்தில் அரசியல் என்பது எல்லாம் தேச பக்தியாகத்தான் இருந்தது". என்று ஒரு வரி இந்த நாவலில் வருகிறது. கொள்கை கோட்பாடுகள் லட்சியங்கள் தேச பக்தி என்று செல்பவர்களை அவர்களின் தியாகம் உண்மையிலேயே பயன் உள்ளது தானா என்ற கேள்வியை கேட்கிறது இந்த நாவல். கோவிந்தன் மாமாவும் , குப்பு முதலியார், ராமையா செட்டியாரும், வாஞ்சிநாதன் , பகத்சிங் போன்ற மனிதர்கள் செய்த தியாகங்கள் உண்மையில் இந்த நாட்டாலோ அல்லது மக்களாலும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கப்படுகிறதா ? அல்லது இவர்களின் தியாகத்தால் அடைந்த வீழ்ச்சியின் போது தங்களை எதற்காக பலியிட்டுக் கொண்டார்களோ அதன் காரணமாக இவர்கள் போற்றப்படுகிறார்களா ? என்ற கேள்வியை எழுப்புகிறது. அரசியல் சூதாட்டமாகவும் பணம் கொழிக்கும் இடமாகவும் புகழுக்கான வழியாகவும் அதிகாரத்தின் ஆட்டத்திற்காகவும் பயன்படுத்தப்படும் இந்த காலத்தில் நின்று கொண்டிருக்கும் நாம் இந்த நாட்டின் விடுதலைக்காக எண்ணற்ற தியாகங்கள் செய்தவர்களை இன்று எப்படி நாம் ஒரு வேடிக்கை மனிதராக அல்லது வாழத் தெரியாத மனிதன் பார்க்கிறோம். காந்தி போல விமர்சனங்களை சந்தித்த ஒரு அரசியல் தலைவர் இந்த உலகில் இருக்க முடியாது.
கோவிந்து மாமா கள்ளு கடை நடத்தி மிகப்பெரிய செல்வந்தராக வாழ்கிறார். ஒரு கட்டத்தில் காந்தியின் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தால் நாம் ஏன் இனியும் இந்த கடையை நடத்த வேண்டும் என்று நினைத்து அந்தத் தொழிலை விடுகிறார். பிறகு வாழ்வு அவரை தனது கொடிய கரங்களால் வறுமையை நோக்கி இழுத்துச் செல்கிறது. அவர் வாழும் போது வாரி வாரி கொடுத்த எந்த நபரும் அவர் விழும் போது திரும்பி கூட பார்க்கவில்லை என்ற வாழ்வின் எதார்த்தம் அவர் முன் நிற்கும்போது கூட அவர் இருக்கும்போது கொடுத்தோம் இப்போது நம்மிடம் இல்லை என்று திருப்திப்பட்டுக் கொள்கிறார். உத்ரா , வேதம் மட்டும் உதவுகிறார்கள்..
அந்தக் காலத்து சுதந்திர போராட்டத்தில் மக்கள் மன ஓட்டம். பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கம்( சும்மா இருந்தவரை அழைத்து படுக்கைக்கு பெண் ஏற்பாடு செய்ய சொல்வது), நாடக கலைஞர்கள், பாரதியார் பாடல்கள் என்று ஒரு நீண்ட வரலாற்று சித்திரத்தையும் இந்த நாவல் அளிக்கிறது. கோவிந்தன் மாமா நாத்திகர் போல் பேசினாலும் அருள் பெறும் ஜோதி தனிப்பெரும் கருணை என்ற வள்ளலாரின் வரியை ஏற்றுக்கொண்டு சைவமாக மாறுகிறார். முற்போக்கு சிந்தனை கொண்ட கோவிந்தன் இருக்கும்போது வாரி வாரி கொடுத்தார் இல்லாதபோது மாற்று துணிக்கு கூட வழி இல்லாமல் வாழ நேர்கிறது. கோகலா தான் அவரை புரிந்து கொள்ளவில்லை. மாமி (கோவிந்தன் மனைவி) போன்ற பெண் இருக்க வாய்ப்பு குறைகிறது, மாமியை நினைக்கும் போது தான் கொஞ்சம் செயற்கை தன்மை இருக்கிறதே என்று தோன்றுகிறது. உண்மையில் நாட்டுப்பற்று கொள்கை கோட்பாடு என்று இருந்தவர்களை இந்த நாடு கைவிட்டு தான் இருக்கிறது என்பதை நாம் வரலாற்றில் இருந்து காண முடிகிறது. கோவிந்தன் வேலைக்கு சேர்த்து விட்ட ஒருவன் வெறும் ஏழு வருடத்தில் அரசியல் லாபி செய்து எம் .பி ஆகி விடுவான்.
"அண்ட சராசரத்தில் ஆயிரம் கோடி நட்சத்திரத்தில் ஒரு தூசியே ஆன உலகில், அணுவினும் குறைந்த ஆகிருதியாய் மனிதன் என்ற பெயர் பெற்று இந்த உலகையே வெல்லப் போகிறேன் என்று சவால் விட்டு, ஆயிரம் ஆண்டுகள் வாழப்போவதாய் மலைச்சரிவில் மணல் வீடு கட்டி அகங்காரத்தின் மொத்த வடிவாய் ஆணவத்தின் திருவுருவாய் மமதையின் நிலைக்கள்ளாய். வாழும் இந்த வாழ்வு குறித்து கைத்துப்போன சிரிப்பே அவருக்குள் தோன்றும்."
பிரபஞ்சனின் புத்தகங்களில் நான் படிக்கும் முதல் புத்தகம் இது. வேத நாராயணன் என்ற சிறுவனின் கண்களின் வழியே கோவிந்து மாமாவின் வாழ்க்கையை வரைந்திருக்கிறார் ஆசிரியர். புதுச்சேரி பிரெஞ்சு காரர்கள் ஆட்சியில் இருக்கும்போது நடைபெறும் கதை இது. கோவிந்து மாமாவும் சரி அவரது முன்னோர்களும் சரி, காந்தியின் கொள்கைகளை ஆதரிப்பவர்களாய் இருந்தும்கூட, குல தொழில் என்று சொல்லி கள்ளுக்கடை வைத்துத்திருக்கின்றனர். உயர்ந்த உண்மை விளங்குகையில் அது எப்படி ஒரு மனிதனை மாற்றுமோ, அப்படித்தான் கோவிந்து மாமாவையும் மாற்றுகிறது. இதற்கிடையில் அவர் இல்லத்திலேயே ஓர் எதிர்பாராத சம்பவம் நிகழ்கிறது. அவரது வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது.
வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் கதையே மையச்சரடு. ஊடாக, மனித உறவுகளின் இயல்பு, நிலையாமை, கீழ்மை முக்கியமாக இவற்றால் பாதிக்கப்படாத சான்றோரின் மேன்மை என தத்துவ விசாரணைகள், தரிசனங்கள் கொட்டிக் கிடக்கின்றன இந்த புத்தகத்தில்....must read. பிரபஞ்சன்❤