Kindle வாசக நெஞ்சங்களுக்கு... உங்கள் விஜயஸ்ரீ பத்மநாபனின் வணக்கங்கள்... என் காதல் ஒரு வேள்வி இந் நாவலில் வேள்வியா நாயகி அனுவுக்கு அவள் காதல்... சினிமா மற்றும் கதைகள் சொல்லும் காதல்கள் ரசிப்போம் பிரியமானதாக இருக்கும் கடந்தும் மறந்தும் சென்றுவிடுவோம் ... ஆனால் நிஜத்தில் காதல் கொண்ட நெஞ்சங்கள் திருமணங்களில் இணையும் பொழுது சந்திக்கும் சிக்கல்கள் வாழ்க்கையின் சீரற்ற ஆற்றுப்போக்கில் சமாளித்து சம்சாரக் கடலில் கலக்கும் நிலை பெறுவது தான் இந்த கதை.. அனுரேகா _ இளமாறன் ஜோடியின் இளைய இனிமையான காதல் பயணமே.. "என் காதல் ஒரு வேள்வி" ரொமான்ஸ் காவியம்... wow இதுதான் உங்க பைனல் கமெண்ட் .... வச்சுக்கவா? Haha நன்றி.... நன்றி.... வணக்கம்.
முதல் காதல் தோல்வியால் அதிலிருந்து வெளிவராமல் அந்த நினைவுகளின் சுழற்சியிலே தத்தளித்து அது முடிவை எட்டிவிட்டது என்று உறுதியாகத் தெரிந்த பிறகு துன்பத்தால் மேலும் மனதை துவண்டு போகச் செய்த நொடியில் அம்முதல் காதல் புதிய காதலாக வந்து சேரும் பொழுது அதில் வன்மையே அதிகம் இடம்பிடித்துப் பல நாள் துன்பத்திற்கு அக்காதலையே வடிகாலாக்கிய பிறகே அடங்கும்.
இளமாறனை பார்த்த நொடியிலே தன்னைப் பெண்ணாக உணரத் தொடங்கிய அனுரேகாவிற்குத் தன் தோழி ஜான்விக்குக் கணவனாக அவனை சிறுவயதிலே பெரியவர்கள் பேசி வைத்ததை அறிந்து காதலை உள்ளுக்குள்ளே புதைத்து அனைவரின் தொடர்பில் இருந்தும் காணாமல் போகிறாள்.
இளமாறனுக்கு ஜான்வியுடனான திருமணம் அவர்களுக்குக் குழந்தை பிறந்தவுடனே முற்றுப்பெறுகிறது.உடல்நிலை பாதிக்கப்பட்ட ஜான்வி இறக்கும்தருவாயில் இளமாறனின் மனதில் அனுரேகாவிற்குத் தனியிடம் இருப்பதைப் புரிந்து கொண்டவள் அவளை மறுமணம் புரிய வேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கிறாள்.
ஆறு வருடங்களுக்குப் பிறகு தெரியவருகிறது அனுரேகாவிற்கு ஜான்வியின் மரணம்.தன் பெயரையே அவளின் குழந்தைக்குச் சூட்டியதுடன் தன்னையே அவளின் அம்மாவாகக் காட்டிய தோழியின் நட்பில் நெகிழ்ந்தவள் விடாப்பிடியாகப் போராடி இளமாறனை மணந்து கொள்கிறாள்.
தன் மகள் அனுவிற்காக என்று அனுரேகாவை மணக்க சம்மதித்த இளமாறனின் மனதில் இருந்த காதலை வெளிக்கொண்டு வந்தவள் அவனுடன் பின்னிப் பிணைந்து திகட்ட திகட்ட திருமண வாழ்வை வாழ்ந்து தன் தோழியே மகளாகப் பிறக்கும் வரை காத்திருந்து அனுவுடன் சேர்ந்து நான்கு குழந்தைகளுக்குத் தாயாகிறாள் அனுரேகா.
அனுரேகாவின் தாயும் ,இளமாறனின் தாயுமான இருகதாபாத்திர அமைப்பு அன்னையின் அன்பு எப்படி போற்றுதலுக்குறிய என்பதை சொல்கிறது.
இளமாறனின் முதல் காதலும் அனுரேகாவின் முதல் காதலும் பல கண்ணீர் தடத்தைத் தாண்டி காலம் கடந்து பாதையை அடைந்தாலும் இழந்த காலத்தைத் தங்களின் காதலாலே சரிக்கட்டுகின்றனர்.
உறவுகளுக்குள் விட்டுக் கொடுத்தலே உறவுகளை மேன்மேலும் இறுக்கும் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது அதற்குக் காதலை துணையாகக் கொண்டு “என் காதல் ஒரு வேள்வி” எனும் கதை.