முப்பத்து மூன்று அத்தியாயம் கொண்ட இந்த புத்தகம் பண்டைய கால அறிவியலில் இருந்து நவின கால ஆராய்ச்சி வரை உங்களை அழைத்துச் செல்லும், சோழ மன்னரான ராஜேந்திர சோழன் அவர் மறைத்து வைத்த ரகசியமான மர்ம முக்கோணங்களை பற்றிய கதையே இந்த புத்தகம்! இதில் வரலாற்றை மட்டும் நோக்கமாகக் கொண்டு போகாமல் அறிவியல், தொல்பொருள், அட்வெஞ்சர், காதல், மரணம் என அனைத்தையும் வைத்து பிரம்மிக்க செய்துள்ளார்
இந்த நாவலை எழுதிய விதம் தான் என்னை மிகவும் கவர்ந்தது! ஒரு
ஹைப்பர் லிங்க் சினிமா போலவே பல கதைகளை பல்வேறு இடத்தில் தொடங்கி ஒரு இடத்தில் முடிப்பது போலவே நாவலை எழுதியுள்ளார்! இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் கச்சிதமாக சிறப்பாக வடிவமைத்துள்ளார், முக்கியமாக ரகு என்ற கதாபாத்திரம் உங்களை நெகிழ வைத்துவிடும்!
எந்தவொரு இடத்திலும் தொய்வு இல்லாமல் பல ஆச்சரியங்களையும், சோழர் ஆண்ட காலத்தில் அவர்கள் வைத்த பல மர்ம ரகசியமான விஷயங்களையும் ஆசிரியர் அவரது கற்பனையில் வடிவமைத்துள்ளார்! உலகின் முதல் வரலாற்று அறிவியல் புனை நாவல் ஆனா இந்த புத்தகத்தை நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் வெளியிட்டார்! இந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியர் ப்ரியன் அவர்களுக்கும், அவரது குழுவினருக்கும் என்னுடைய நன்றிகளும், பாராட்டுகளும்!