மற்றவர்களின் கஷ்டத்தைப் போக்குகிறேன் என்று கிளம்புவர்கள் தன் நடவடிக்கையால் தன்னைச் சார்ந்தவர்களைக் கஷ்டப்படுத்தியே தீருவர்.
பொதுவெளியில் தன் குணம் இது தான் என்று முதலில் காட்டிய பிம்பம் எக்காலத்திலும் அழிவதில்லை.
காதல் மன்னன் என்று பெயரெடுத்த முகந்தனை காதலிக்கும் நிகிதா அவனின் காதலை சந்தேகப்பட்டுச் சொன்ன வார்த்தையால் கோபம் கொண்டவன் அவளை முற்றாக ஒதுக்கிவிட்டதால் நாடகம் போட்டு அவனை மணந்து கொண்டு திட்டுகளையும் உதாசீனங்களையும் பரிசுகளாக பெறுகிறாள்.
தன் நண்பன் சதீஷின் அக்காவின் கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் இருக்கும் தொடர்பை தடைசெய்த அந்தப் பெண் சாந்தினியை தானே காதலிப்பது போல் தோற்றத்தை உண்டாக்கி அவளின் மனதை மாற்றி வேறு ஒரு நண்பன் கிஷோருக்கு அவளை மணமுடித்துக் கொடுக்கிறான் முகுந்தன்.
சாந்தினியுடனான நாடகம் நடைபெறும் வேளையில் தான் எங்கே தன்னை மறந்துவிடுவானோ முகுந்தன் என்று நிகிதா மற்றொரு நாடகத்தைப் போட்டு அவனை மணந்து கொண்டது.
சாந்தினிக்குத் திருமணம் நடைபெறும் நாளில் அனைத்து குழப்பங்களும் ஒரு முடிவை எட்டி “மறத்தல்,மன்னித்தல்” என்ற கருத்தில் முற்றுபெறுகிறது.