Jump to ratings and reviews

தூரிகை சொந்தங்கள்

உறவின் தன்மைகளான விலகல், உணர்தல், பிரிதல், புரிதல் என்ற அனைத்து நிலைகளிலும் வலம் வரும்… ஜீவரிஷியும், கிருஷ்ணவேணியும் இரு மன உறவான, திருமணத்தில் சங்கமிக்கும் கதை.

279 pages, Kindle Edition

Published January 2, 2019

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
10 (52%)
4 stars
7 (36%)
3 stars
2 (10%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Anitha.
Author 15 books41 followers
January 26, 2019
என் பாதுகாப்பாளராக, நிதியாளராக, விந்தணு கொடையாளராக ஒரு ஆண் எனக்கு தேவையில்லை என்கிறாள் இக்கதையின் நாயகி கிருஷ்ணா. வேறு விதத்தில் அதே தான் கூறுகிறாள் கிருஷ்ணாவின் தாயான வசுந்தராவும். வசுந்தரா, தன் முடிவுகளை தானே எடுப்பதும் தன் கணவன், பிள்ளைகள் மேல் அதை திணிப்பதும், தன் சொல் பேச்சு கேட்டு அவர்கள் நடக்க வேண்டுமென்று நினைப்பதும் ஒருவிதத்தில் தன்னை சுயசார்பு உள்ளவளாக அவளை நிலைநிறுத்திக் கொள்ளும் போராட்டமே...கதாபாத்திரங்களின் வாயிலாக அடிக்கடி வெளிப்படும் பாட்டி கிருஷ்ணவேணியின் ஆளுமையும் அதையே தான் வெளிப்படுத்துகிறது. ஆனால் மூன்றாம் தலைமுறையாக மட்டுமில்லாமல் இக்கால தலைமுறையான கிருஷ்ணா அதிலிருந்து மேம்பட்டு என் உறவுகளுக்குள் நீயும் உறவாக என்னோடு கை கோர்த்து நடக்கும் துணையாக இணையாக வருவாய் என்றால் உன்னை நான் வரவேற்கிறேன் என்கிறாள்.

கதையில் வரும் மாமி, சௌமியா, சுபைதா போன்றவர்கள் தன் வாழ்க்கையில் ஒன்றும் செய்ய முடியாத இயலாமையோடு சுயபச்சாபத்தில் அடுத்தவரை சார்ந்து வாழ்கிறார்கள். ஒருவிதத்தில் இவர்களே பாட்டி கிருஷ்ணவேணி, வசுந்தரா, கிருஷ்ணா போன்றவர்களுக்கு விதையாகிறார்கள்.
2,121 reviews1,112 followers
January 11, 2019
தனிமனித முடிவுகளுக்கு எதிரான கருத்துகளின் பாதை ஒருபோதும் மூடிவிடுவதில்லை.
அம்மனிதனின் இறுதிவரை யாரோ ஒருவர் அதை ஞாபகப்படுத்திக் கூர்மையானவற்றை அவர்களின் முன்பு வீசிக்கொண்டே தான் இருப்பர்..நகர்ந்து செல்வதும் இல்லையேல் அதன் மீது பட்டு வலிகளை உண்டாக்கிக் கொள்வதும் அவர்களையே சாரும்.

தன் மனைவியாகயில்லாமல் சகமனுஷியாக மதித்து அவளின் எதிர்பார்ப்புகளைக் கேட்டிருந்தாலே ஜீவரிஷி தன் மகளுடன் தனித்து வாழ வேண்டிய நிலை வந்திருக்காது ஆனால் மற்றவர்களைப் பற்றி நினைக்க எவருக்கு நேரமிருக்கிறது அது தன்னில் சரிபாதியாக இருந்தாலும் அதற்குப் பதிலாக வாழ்க்கை முழுவதும் நினைத்துப் பார்க்கும் படியான வடுக்களை விட்டுச் செல்கின்றனர்.அது அந்தரங்கத்தில் நெருடிக்கொண்டே இருப்பது மாதிரி.

ஓர் உயிரை உருவாக்குவதில் பெருமைக் கொண்டாலும் அதில் மூன்றாம் மனிதர்களின் தலையீடு இருக்கும் பட்சத்தில் அதிகப் பொறுப்புணர்ச்சியில்லாமல் போனால் வேறு எவரோ ஒருவரிடம் அப்பாரத்தை இறக்க வேண்டி வரலாம். அதை ஏற்க அனைவராலும் முடியாது என்று தெரிந்தே முன் வருபவர்களுக்குப் பெருத்த அவமானத்தையும் சந்திக்க வேண்டிவரும். யாரோ ஒருவரின் உயிர் பூ என்றாலும் தன்னிடம் வந்த பிறகு அதற்கான உரிமை கிருஷ்ணாவையே சார்ந்திருக்கிறது.

பெரியவர்களின் விருப்பம், ஆசை, துரோகம், இச்சைகளுக்காகச் சிறியவர்கள் சுவாரசியமில்லா நாட்களைத் தான் கடந்துவர வேண்டுமாயென்ன?

மற்றவர்களுக்காக என்று எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் பின்னே வெளியே சொல்லமுடியாத தனக்கான சுயநல தேவை அங்கே ஒளிந்திருக்கும்.

ஆள ஆட்கள் இருந்தால் மட்டுமே சாம்ராஜ்ஜியம் வலிமைப் பெறும் இல்லையென்றால் அது கீழிறங்கி தான் வந்தாக வேண்டும். தன் பேச்சிற்கு எதிர்ப்பே இருக்ககூடாது என்ற வசுந்திராவிடமிருந்து தப்பிக்க முயல்பவர்கள் வெற்றி பெற்றபின் அவளிடம் மிஞ்சியிருப்பது தான் வாழ்ந்த வாழ்க்கையின் நிழல்.
Profile Image for Sarala.
43 reviews22 followers
February 27, 2019
தனித்தனியாக நிற்கும் பலவித வண்ணங்களை தன்னுள் ஏந்திக் கொண்டு, அதன் தனித்தன்மை மாறாமல் பொருத்தமான கலவைகளில் அழகான ஓவியங்களை உருவாக்கும் இயல்பை தன்னகத்தே கொண்டிருப்பது தூரிகையின் சிறப்பு.

அதைப் போன்றதொரு சிறப்பும் இயல்பும், அன்பென்னும் தூரிகைக்கும் உரித்தானதே. தனித்து நிற்கும் மனித மனங்களை ஒன்று சேர்த்து, அதன் மூலம் வாழ்வின் பொருளை வரைந்து செல்வதே…. இத்தூரிகை சொந்தங்கள்.

ஜீவரிஷி... மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறான். தாய் மற்றும் ஆறு வயது மகள் அதிதியுடன் வசிக்கிறான். ஜீவாவிற்கு போட்டோகிராபியில் இருந்த ஆர்வத்தினால், மனைவியின் மனநிலையை உணர்ந்து கொள்ள தவறிவிட.. அதன் விளைவு, அவனது மனைவி கணவனையும் மகளையும் விட்டுவிட்டு தனிப்பாதையில் தன் வாழ்க்கைப் பயணத்தை வகுத்து கொள்கிறாள். ஆகவே, மகளுடன் தனித்து நின்றவனை, அவனது தாய் அரவணைத்துக் கொள்கிறார். தொடர்ந்த நாட்கள் வெற்றுத் தாள்களாக பறக்க.. பணியின் நிமித்தம் அவனது அலுவலகத்திற்கு வருகிறாள் கிருஷ்ணவேணி.

கிருஷ்ணவேணி… மூன்று வயது மகன் கிரணுடனும் சமையல் செய்யும் மாமியோடும் ஜீவாவின் வீடு இருக்கும் அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவள். அவனது அலுவலகத்திலேயே பணியிலும் இருக்கிறாள். குழந்தையுடன் தனியாக இருக்கும் பெண். சந்திக்கும் சமூகத்தின் அனைத்து வகைக் கணைகளையும் உறுதியுடன் எதிர்கொள்கிறாள். அவளுடைய இத்தகைய பரிமாணமே ஜீவாவை அவள் பால் நட்பின் கயிறாக இழுக்க, அவனது தனிமை அறிந்த கிருஷ்ணாவும் அவனுக்கு தோழமையாக தோள் கொடுக்கிறாள்.

இருவரும் பரஸ்பரம் நட்பாகப் பழகுவதையும், இருவரது தனித்த நிலையையும் வைத்து, இருவருக்குள்ளான உறவை காதலின் கரங்களாக வரையறை செய்ய முயற்சிக்கும் விக்ரமினால், கிருஷ்ணாவிடமிருந்து விலகி நிற்கிறான் ஜீவா. விக்ரம் ஜீவாவின் நண்பன்.

ஜீவாவின் விலகலுக்கான காரணம் புரிந்தாலும், அவளுக்குள்ளும் அதன் காரணமான சிந்தனைகள் எழுந்து அவளைக் குழம்ப வைக்கிறது. ஏனெனில், தனது தாய், சகோதரி போன்ற பெண்களின் இல்லற வாழ்க்கை அவளுக்குள், திருமணத்தைப் பற்றிய எதிர்மறை உணர்வுகளை பதிய வைத்திருப்பதே காரணம். நாளடைவில் தன்னைத்தானே அறிந்து கொள்ளும் ஜீவா, கிருஷ்ணாவின் தடுமாற்றத்தையும் உணர்ந்து, அவளையும் தன் குடும்பத்தினரையும் பிரிந்து வெளிநாடு செல்கிறான், ஒரு உறுதியான இறுதி முடிவிற்காக..

உறவின் தன்மைகளான விலகல், உணர்தல், பிரிதல், புரிதல் என்ற அனைத்து நிலைகளிலும் வலம் வரும்… ஜீவரிஷியும் கிருஷ்ணவேணியும் இரு மண உறவான, திருமணத்தில் சங்கமிக்க, அன்பான உறவுகளும் அவர்களுடன் இணைந்து கொள்ள, அங்கே ஆனந்தம் இழைகிறது..

அழகான, எளிய மொழியிலான எழுத்து நடையில் கதை நகர்ந்து செல்கிறது.

எதிர்மறை கருத்துக்களையும் எண்ணங்களையும் நேர்மறையில் எதிர்கொள்ளும் பாங்கு ஆசிரியரின் தனிச்சிறப்பு. இக்கதையிலும் அது வெகு சிறப்பு.

வாழ்வின் பயணங்களில், உடன் பயணிக்க தோழமையான துணை தான் வேண்டுமே தவிர, ஆளுமையோ, அடிமையோ தேவையில்லை, எனும் நோக்கில் கதை பயணிக்கிறது.

Displaying 1 - 3 of 3 reviews