சாதாரண கண்களால் பார்க்கும் போதே நம் உலகம் பேரழகானதுதான். ஆனால் மாயங்களை விலக்கி, நுண்ணோக்கி பார்க்கும் அதிசயக் கண்ணாடி வழியே பார்த்தால், இந்த உலகமும் அதில் வாழும் நாமும் மிக வித்தியாசமாய்த் தென்படுவோம்! இந்தப் புதிய கோணம் உங்கள் வாழ்வை முழுமையானதாக மாற்றிவிடும். சாதாரணம் என்று நீங்கள் இதுவரை நினைத்தது சுவாரசியமாகும். மரபு என்று நீங்கள் நினைத்தது முட்டாள்தனமாய்த் தென்படும். உங்கள் வாழ்வின் அர்த்தம் தெள்ளத் தெளிவாய்த் தெரிய ஆரம்பிக்கும். விட்டு விடுதலையாகி வியனுலகம் காண்பீர்!
Dr. Shalini is a psychiatrist who is also an influencer. She puts forth atheistic, rational arguments based in science to challenge oppressive notions such as caste, misogynistic practises. She widely speaks of Periyar and his progressive notions of upliftment of the oppressed.
கார்டூனிஸ்ட் மதன் புத்தகங்கள் புடிக்குமா ? அறிவியல் பார்வை ? நக்கலான எழுத்து ? கண்டிப்பாக வசிக்க வேண்டிய புத்தகம் !!! படித்துவிட்டு பிறர்க்கு பரிசாக கொடுங்கள்!!!
உலகின் உயிரினங்களிலேயே உன்னதமாகப் பரிணாம வளர்ச்சியின் சிகரமாக் கருதப்படுவது மனித இனம்... மனித இனம் அடைந்துள்ள மேன்மைகளுக்கெல்லாம் காரணமானது மனித மனம் (Mind). எல்லா உயிரினங்களும் சூழலுக்கு தக்கவாறு தம்மைத் தகவமைத்துக் கொள்கின்றன... ஆனால் மனித இனம் மட்டும் தான் தன்னுடைய வசதிகளுக்காகச் சூழலையே மாற்ற வல்லது... ஆயினும் எந்த ஒரு உயிரினத்துக்கும் மேன்மைகளுக்குக் காரணமாக எது இருக்கிறதோ அதுவே தீமைகளுக்கும் காரணமாக இருப்பது பொதுவான முரண்பாடே... அது போன்றே சிந்திக்கும் திறனே அவனுக்குப் பிரச்சினைகளையும் உருவாக்கத் தொடங்கியது... RNA முதல் DNA ஒரு செல் உயிரினத்திலிருந்து தகவல்களை சேமித்து அடுத்த தலைமுறைக்கு கடத்தும் ஜீன் என்று பரிணாம வளர்ச்சியில் 30000 ஜோடி ஜீன் கொண்ட மனிதனாக வளர்ச்சி அடைந்ததன் சுருக்கம்... 'பொருந்தி போவதே பிழைக்கும்-Survival of the Fittest' எனும் கருத்தாக்கம் எப்படி தவறாக 'வலியது பிழைக்கும்'என்று புரிந்து கொள்ளப்பட்டது என Charles Darwin னின் Theory of Evolution க்கு ஒரு அறிமுகமும் மனித மனம் எப்படி வெகுவேகமாக மற்ற விலங்குகளை போல் அல்லாமல் இவ்வளவு வேகமாக வளர்ந்தது என்பதற்கு மரபணு மூலம் கடத்தப்படும் தகவல்கள் மட்டுமல்லாமல் (Communication)ஆதி மனிதர்கள் தமக்கு தெரிந்த விடயங்களை மற்றவர்களுக்கு பகிர்ந்தும் தெரியாததை மற்றவர்களிடமிருந்து தெரிந்தும் சூழல்களுக்கு தக்கவாறு தம்மைத் தகவமைத்துக் கொண்டு வேகமாக வளர்ந்தது பற்றியும் அது கோடுகளாகவோ, எழுத்துருவாகவோ ,சிமிஞ்க்கைகளாகவோ, மொழியாகவோ இருப்பதற்கு Richard Dawkinsன் மீம் எனும் கருத்தாக்கத்தையும்... எல்லா விலங்குகளின் அதிகபட்ச இலட்சியம் இனவிருத்தியே (Reproduction) என்பதையும்... உணவு, உடைகள், திருமணம் எனும் மீம்களையும் தெளிவாக எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய நடையில் எழுதியுள்ளார்.. அறிவுலகின் கதவுகளை அகலத்திறந்து பார்க்க இந்த புத்தகம் ஒரு திறவுகோலாக இருக்குமென நினைக்கிறேன்... மனிதன் ஒரு சமூக விலங்கு (Social Animal) அவ்வளவே...