மழையோடு வெயில் சேரும் வானிலை அழகாக, இதமாக, மனதிற்கு சுகமான ஒன்றாக தான் இருக்கும், அதே போன்று இந்த கதையின் நாயகி வருணா, நாயகன் ஆதவன் பார்க்க மழை, வெயில் தன்மையோடு தெரிந்தாலும், அந்த மழையும் வெயிலும் இணைந்து அவர்களின் மென்மையான காதலால் நம் மனதிற்கு இதம் சேர்க்க வருகிறார்கள்.
உறவுகளுக்குள் நுழைய வகுத்துக் கொண்ட இலக்கணம் தேவையில்லை என்ற மனநிலையில் இருப்பவர்கள் எவ்வகைச் சூழலையும் கையாளுவர்.
நெருக்கடியில் தான் வருணாவின் திருமணம் நடந்தேறினாலும் அதைத் தக்கவைக்க இயல்பாக அதில் பொருந்தி போக அவள் மேற்கொள்ளும் மெத்தனங்களே புதுஉறவில் திளைக்க விடுகிறது.
வெகு சாதாரணக் கதையை அதன் போக்கிலே கொண்டு சென்ற நேர்த்தியும் எவ்வித திணிப்பும் இல்லாததே கதையின் களசூழலை உணரவைக்கிறது.