எஸ்.ரா வின் புதிய நாவலான 'சஞ்சாரம்' குறித்து ஒருசில விஷயங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
முழுக்க முழுக்க எனக்கு விருப்பமான ஏரியா. நாகஸ்வரக்காரர்களின் கதை. கதை உருவான விதம், அதில் இடம்பெறும் ஊர்கள், மனிதர்கள், சம்பவங்கள் ஒவ்வொன்றையும் அவர் விவரிக்க விவரிக்க அத்தனை சுவாரஸ்யம்.
எஸ்.ரா வின் முக்கியமான நாவலாக 'சஞ்சாரம்' அமையும். கரிசல் பூமியின் பின்னணியில் அமைந்திருக்கும் நாகஸ்வரக்காரர்களின் வாழ்க்கை பற்றிய இந்த நாவலை கி.ரா பாட்டையாவுக்கு சமர்ப்பித்திருக்கிறார். ஆகா! எத்தனை பொருத்தமான சமர்ப்பணம்! காருகுறிச்சியின் 'சண்முகப்ரியா' சஞ்சாரத்தைக் கேட்டது போல் அப்படி ஓர் அனந்தம்.
S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
எஸ் ராவின் எழுத்துக்கள் பல வருடங்களுக்கு முன்பே எனக்கு பரிச்சயமாயின. இந்தியா முழுவதும் பரவிப்படர்ந்த என் ரயில்பயணங்களில் தனிமை, கி.ரா., ரஸ்கின் பாண்ட் இவர்களோடு, மிக நெருக்கமான எழுத்தாக எனக்குப் பிடித்துப் போனதற்கு காரணம் அவர் பெரும்பாலும் எழுதிய விஷயங்களான பயணம் மற்றும் புத்தக வாசிப்பு. இது தவிர அவருடைய சிறுகதைகள் என்னை அவர் வார்த்தைகளோடு கட்டிப்போட்டு வைத்திருந்தன.
அவர் எழுதிய உபபாண்டவம் தான், நான் முதன்முதலாக வாசித்த அவருடைய குறிப்பிடத்தக்க நெடும் புதினம் என்று நினைக்கிறேன். அதில் அவர் காட்டிய புனைவுலகம் என்னை பிரமிக்க வைத்தது. அதன் பிறகு அவருடைய வேறெந்த நெடும் புனைவும் அந்த பிரமிப்பை எனக்குத் தரவில்லை. அவருடைய நாவலான சஞ்சாரம் பற்றி அறிந்தவுடன், அதை படிக்க வேண்டும் என்ற தவிப்பு வெகு நாட்களாக எனக்கு இருந்து வந்தது. அதற்கு காரணம் எஸ் ராவின் புதினம் என்பது மட்டுமல்ல. நாதஸ்வர கலைஞர்களை பற்றியது என்பதும் தான். இருந்த போதும், இலையில் உள்ள பிடித்தமான பதார்த்தத்தை கடைசி வரை வைத்திருந்து, இறுதியில் இருக்கையில் சாய்ந்தது, கண்ணைமூடி ரசித்து உண்போமே, அதுபோலவே இந்தப் புதினத்தை இவ்வளவு வருடங்களாக வைத்துவிட்டு, இப்போது தான் வாசிக்க ஆரம்பித்தேன்.
வாசிக்க ஆரம்பித்தவுடனே, அவர் எழுத்து வழக்கம் போலவே மிக இயல்பாக என்னை உள்ளிழுத்துக்கொண்டது. வாயில் போட்டவுடன், உடனே உண்ணாமல் வாயின் ஒரு பக்கம் வைத்து நாவில் தடவி, ஊற வைத்து மெது மெதுவாக ரசித்து, ருசித்து, வெகு நேரம் உண்ணும் மிகச்சுவையான ஒரு நாவல் பழம் போல வரிகள் மனதில் ஊறிப் பெரும் சுவையை கொடுத்தன.
"வாசிப்பில் ஆழ்ந்து போய்விட்டால் உடலே இல்லாமல் போய்விடுகிறது என்பதை அவன் நன்றாக உணர்ந்து கொண்டிருந்தான். அந்த உணர்ச்சியை அடையும்போது ஏற்படும் ஆனந்தம் அளவில்லாதது.
தன்னிடமிருந்து வெளிப்படுவது வெறும் நாதமில்லை. அது ஒரு மணம். பூவிலிருந்து மணம் கசிவது போல மனிதர்களுக்குள்ளும் மணமிருக்கவே செய்கிறது. அதை மலரச்செய்வது வாசனையை கமழவிடுவதுதான் இசையா?"
எவ்வளவு அழகான வரிகள்! சிந்தித்துப் பார்த்தால், ஒவ்வொரு மனிதனுக்கும், அவன் ஆழ்ந்து, பெரும் மகிழ்ச்சியோடு ஆழ்ந்து போய்ச் செய்யும் எந்த விஷயமும், அவனுடைய அடையாளமாக, ஒரு தனிதன்மையான மணமாகவே ஆகிவிடுகிறது இல்லையா? அது இசையாக இருந்தாலும் சரி , இயந்திரவியலாக இருந்தாலும் சரி.
இன்னும் சற்று உள்ளார்ந்து அவர் வரிகளைப் பற்றி சிந்தித்தால், இப்படி, எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதி இதுபோல் வாசகரை லயித்துபோக வைத்துவிடும் வார்த்தைகளின் வித்தை தெரிந்தவர் என்று உணர்த்து கொள்ள முடியும்.
அதன்காரணமாகவே இப்படி தான் நேரடியாக அனுபவித்திராத ஒரு விஷயத்தைப் பற்றி அவர் எழுத முடிவெடுத்திருக்க வேண்டும். அப்படி எழுதுவதில் தவறேதும் இல்லை. அதுவும் எஸ் ரா போன்ற மிகச்சிறந்த புனைவிலக்கியவாதி சமூக விளிம்புநிலையில் இருக்கும் பாரம்பரிய நாதசுவர இசைக்கலைஞர்களைப் பற்றி எழுதுவது அந்த இசைக்கலைஞர்களுக்கு அவர்களின் குரலைப் பதிவு பண்ண ஒரு பெரும் வாய்ப்பாக அமைந்திருக்கும். அப்படி ஒரு படைப்பை உருவாக்க அவருக்கு பெரும் ஆய்வு தேவைப் பட்டிருக்கும். அப்படி ஒரு ஆய்வை செய்து எழுதிய புத்தகமாக பொதுவெளியில் அடையாளம் காணப்பட்ட இந்த புத்தகத்துக்கு சாகித்திய அகாடமி விருது அதே காரணத்துக்காக வழங்கப் பட்டிருக்கலாம்.
ஆனால், அதுதான் இதில் பிரச்சினை. பாரம்பரிய நாதஸ்வரக் கலைஞர்களைப் பற்றிய நாவல் என்றும், பெரும் ஆய்விற்கு பிறகு எழுதப்பட்ட படைப்பு என்றும் பெரிதும் விதந்தோதி அவராலேயே குறிப்பிடப்பட்ட இந்த புதினம், அவர்களை சமூக அமைப்ப்பைப் பற்றிய அடிப்படை உண்மைகள் கூட இன்றி வடிக்கப்படியிருப்பது பெரும் கொடுமை. பெரும் இசை ஆளுமைகளைப்பற்றிய வெறும் செவி வழிச் செய்திகளும், குறிப்புகளையும் வைத்தே பின்னப்பட்டுள்ள புதினம் இது. அதனால், அது பல இடங்களில் பல்லிளித்துவிடுகிறது.
உதாரணத்துக்கு, அந்த புத்தகத்தில் உள்ள ஓரிரு இடங்களை மட்டும் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.
பாரம்பரிய இசைக்கலைஞர்கள் என்றவுடன், தமிழகத்தில் இசை வேளாளர்களைப் பற்றிக் குறிப்பிடாமல் எந்தக் குறிப்பும் நிறைவு பெறாது. அனால், இதில் அந்த சமூகத்தின் சிறு அடையாளம் கூட இல்லாமல் இருப்பது ஆச்சரியம். மேலும் பாரம்பரிய நாதஸ்வரக் கலைஞர்கள் என்னும் போது, அவர்களுக்கிடையே உள்ள சின்ன மேளம், பெரிய மேளம் என்ற சமூக அமைப்பையும் அதற்குள் இருக்கும் வரைமுறை மற்றும் பாகுபாடுகள் பற்றி பேசாமல் அவர்கள் அனுபவிக்கும் சாதிய அடக்குமுறைகளைப்பற்றி பேசுவதென்பது இயலாது. ஆனால், ஆரம்ப வரிகளில் இருந்தே, அதைப்பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் எழுதியிருக்கிறார் என்பது பட்டவர்தனாமாக தெரிகிறது. இந்தப் புரிதல் இல்லாமல் ஆய்வு செய்ததாக எப்படி நேர்மையுடன் குறிப்பிட முடியும் என்று தெரியவில்லை.
அதேபோல், தேவதாசிகளுக்கும், நாதஸ்வரக் கலைஞர்களுக்கும் இடையே நிகழும் சம்பவங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர்களுக்கிடையே உள்ள தொப்புள் கோடி உறவினைப் பற்றிய பிரக்ஞை இன்றி தட்டையான எழுத்திற்குப் பின் எப்படி அவரால் ஆய்வு செய்து எழுதியதாகக் குறிப்பிட முடியும் ? தமிழகத்தில் எந்த விளிம்பு நிலை சமூகமும் அனுபவிக்கும் சாதிய அடக்குமுறை, தமிழக கிராமிய அன்றாட நிகழ்வுகள், ஆகியவற்றை வைத்து, தனது வழக்கமான வார்த்தை ஜாலங்களை வைத்து, மானே தேனே போட்டு எழுதியிருப்பது, அந்த சமூகத்திற்கு எந்த நியாயத்தையும் தராது என்பதோடு, அவருடைய அடிப்படை நேர்மையை / நேர்மையின்மையை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.
அவர், மிகப்பெரிய புனைவெழுத்துவாதி என்பதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது. ஆனால், மிகப்பெரிய ஆய்வின் அடிப்படையிலான எழுத்து என்று பம்மாத்து பண்ணுவது ஏற்கப்பட முடியாது. அவர் குறிப்பிடும் கரிசல் காடும், அதன் பாரம்பரிய இசைக்கலைஞர்களும் தமிழகத்தில் தானே இருக்கின்றனர்? கள ஆய்வைவிடுங்கள். டாக்டர் சதாசிவன், தவேஷ் சோன்ஜி போன்ற ஆய்வாளர்கள் படைத்த முக்கியபடைப்புகள் இன்று பொது வெளியில் யாரும் வாசிக்கும் வகையிலுள்ளனவே? அதைப் படித்து எழுதும் அடிப்படை உழைப்போ அதற்கான குறைந்தபட்ச நேர்மை கூட எஸ் ரா விடம் இல்லை.
அவள் அப்படித்தான் என்ற திரைப்படத்தில், மனமுடைந்த ஸ்ரீபிரியாவுக்காக சிவச்சந்திரன் பாடுவதாக “உறவுங்கள் தொடர்கதை” என்ற பாடல் இடம் பெரும். அருமையான வரிகள், மனதை வருடம் இசை, சுண்டியிழுக்கும் குரல், மனதை இதமாக்கும் முகபாவம் மற்றும் உடல்மொழி என்று சிவச்சந்திரன் காட்டும் பாவனைகளை, ஸ்ரீபிரியா நம்பி உருகுவது இயல்பானது. ஆனால், அதன் விளைவு ஸ்ரீபிரியாவுக்கு எந்த நன்மையையும் தராது. மாறாக சிவச்சந்திரனின் போலித்தனத்தால் அவர் தன்னம்பிக்கையை மேலும் உடைக்கத்தான் அது பயன்படும். இன்று தமிழ் இலக்கியப்பரப்பில், அப்படி பல எழுத்தாளர்கள் சிவச்சந்திரன்களாக உலாவி வருவதும், தமிழ் வாசகர்களை ஸ்ரீபிரியாக்களாக்கி வைத்திருப்பதும் தான் உச்சகட்ட சோகம்.
நான் வாசிக்கும் எஸ்.ராவின் இரண்டாவது நூல் இது. கதைக்குள் கதையாக எஸ்.ரா மையக்கதையை விட்டு விலகி சஞ்சாரம் செய்திருக்கிறார் என்று பலர் நூல் விமர்சனத்தில் பதிவிட்டிருந்தார்கள் . அது உண்மை என்றாலும் , என்னால் இந்த style and structure ஐ ரசிக்கமுடிந்தது . நாதஸ்வர கலைஞர்களின் சொல்லப்படாத கதை இது. அதற்காக ஆசிரியர் சேகரித்த தகவல்கள் திகைக்க வைக்கிறது . சொல்ல இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று வியந்தேன் . இதை ஒரு புதினமாக படிக்காமல் ஒரு குறு வரலாற்று நூலக (Micro History) படிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். மையக்கதையை விட கிளைக்கதைகளை மிகவும் ரசித்து வாசித்தேன் . நாதஸ்வரத்தை பற்றி இன்னும் பல தகவல்களை ஆசிரியர் சேர்த்திருக்கலாம். அது எப்படி தமிழ் நாட்டின் அடையாளம் ஆனது , அதை எப்படி செய்கிறார்கள் போன்ற தகவல்கள் இன்னும் சுவை கூட்டியிருக்கும் .
நாதஸ்வர கலைஞர்களை சாதியின் பெயரால் சிறுமை படுத்துவார்கள் என்பது அதிர்ச்சியான தகவல். அவர்களை சமூகம் உயர்ந்த (உயர்சாதி) ஸ்தானத்தில் வைத்து இருக்கிறதென்று இவ்வளவு நாள் நினைத்திருந்தேன். இக்கலைஞர்களின் பொருளாதார போராட்டம் , வறுமை , அவமானங்கள் , எதிர்கால கேள்விக்குறி நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை . எஸ்.ரா அவற்றை இந்நூல் வாயிலாக பதிவிட்டிருக்கிறார். இறந்துகொண்டிருக்கும் கலைகளின் வரிசையில் இக்கலையும் கண்டிப்பாக இருக்கிறது என்பது வருத்தமளிக்கிற தகவல்.
சஞ்சாரத்தில் நானும் எஸ்.ராவுடன் சஞ்சரித்தேன்
சாகித்ய அகாடெமிக்கு தகுதியுடைய நூல் . Strong Content.
இதை படித்த பின்பு நாதஸ்வர இசையை கேட்டால் சற்றே உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
சஞ்சாரம் - அதிக சலனங்களோ, சலசலப்புக்களோ, சினிமாத்தனமான திடீர் திருப்பங்களோ இன்றி நிதானமாக தெளிந்த நீரோடை போன்ற நடையில் நாதஸ்வர இசையின் (கடந்த ஓரிரு நூற்றாண்டுகளின்) வளர்ச்சியையும் தாக்கத்தையும் குறைந்துவரும் அதன் முக்கியத்துவத்தையும் விவரிக்கிறது.
அத்துடன் நாதஸ்வர இசைக்கலைஞர்களின் கலை மற்றும் சமூக வாழ்வியலையும் அவர்களுக்குள் தஞ்சாவூர் சார்ந்த நன்செய் நில பகுதிகளில் வாழும் கலைஞர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் கரிசல் மண்ணில் வாழும் கலைஞர்களுக்கு கிடைப்பதில்லை என்ற ஆதங்கமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இடையிடையே தமிழ் சமுதாயத்தில் நிலவி வரும் சாதி ஆதிக்கமும் ஆங்காங்கே இயல்பான நடையில் வெளிவருகிறது.
இவை அனைத்தும் கரிசல் மண்ணில் நடப்பவை போன்று சித்தரித்து, அவற்றின் ஊடாக கரிசல் மண் வாழ்க்கையும் இங்கு அதிக கூட்டல் கழித்தல் ஏதுமின்றி பிரதிபலிக்கப்பட்டுள்ளது. புதினம் தொடக்கத்திலிருந்தே நமக்கு அறிமுகமான அதன் நடையை போன்றே சலசலப்பின்றி எதார்த்தமாக முடிந்து போகிறது.
புழுதியோடு சேர்ந்து கரிசல் மண்மணம் கமழும் இந்த படைப்பில் எழுத்து நடை எளிமையாக இருந்தாலும் கரிசல் வாழ்க்கை குறித்தும், நாதஸ்வர கலைஞர்கள் வாழ்க்கை குறித்தும் 2018ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடெமி விருது பெற்ற இந்த புதினம், குறிப்பாக ரத்தினம் மற்றும் பக்கிரி என்ற இரு கதாபாத்திரங்களின் மூலம், ஏற்படுத்தும் தாக்கம் நீண்ட காலம் நம்மில் கலந்திருக்கும் என்பது உறுதி.
Finally! Took me 6 months to finish this book. A buddy read with Girish.
There are a lot of sub-stories distracting the main story. Though I love the writings of S. Ramakrishnan, I am unable to enjoy his fiction as much as his non-fictions.
The main story itself explains the sad reality of the artists. Only few achieve stardom, become famous, earn enough money in their chosen art. The rest struggle world-wide, especially the local artists like Pakkiri and Rathinam. The sad part is not just about inability to earn enough money to run the family but the disrespect for their art.
S. Ra. sub-stories are very distracting and most of the time not cohesive with the main story. Many sub-stories are good by itself. However, they are very frustrating while trying to keep the momentum of the main story. I probably won't read another fiction of S. Ra's.
I picked up Sancharam to sample the works of highly recommended S.Ramakrishnan (s.Ra). Turns out, this is not his best book despite this winning the Sahitya Academy Award.
The book based on the lives of Nadaswaram artists is loosely tied together through two characters who get caught up in a caste violence in the first chapter. The book, through their memories and anecdotes talks about the lore surrounding Nadaswaram, the lives of people in the karisal (Black soil), the hearsay lives of the Vidwans, the critics and the fans, and plain old fiction. As a mixtape is bound to be - some parts you like, some you are indifferent and some you are just not sure.
There are somethings that the book did really well: 1. How do you describe music and the experience of listening to music that strikes a chord with the listener? S.Ra plays with his words and you get goosebumps reading these lines in the first few chapters. 2. The folklore around karisal kaadugal (like the migratory birds) - I think they are not popular and hence it was new to read. 3. The rawness of the dialogues making it real. A drunkard who is blinded by caste prejudices is not going to watch his words and so on.
However the book suffered from too many distractions and repetitive. In order to fit in more stories, the author makes adjunct scenarios and narrates the story within the story which towards the end seemed like a resistance to finish the book. For the lack of a better simile, it served like an item song in a movie which only delays the inevitable.
Were all stories equally deserved to be told? I didn't think so. There were many stories that could have been skipped. Also the characterization of Pakkiri is not consistent in the many stories which also makes you wonder if the author had written himself into a character trap.
The Tamil is beautiful in places, especially when it is not narrating. Which gives me hope for his non-fiction. A difficult read considering the pace, but more importantly a prelude to his other books for me.
இந்த நாவல், முதல் அத்தியாகத்திலேயே ஒரு பெரிய சம்பவத்துடன் ஆரம்பிக்கிறது, பக்கிரி கதையின் நாயகன் ஒரு நாதஸ்வர கலைஞன், தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து வருவதனால் ஒரு கச்சேரியில் மேல்சாதியினால் அவமதிக்கப்பட்டு விடுகிறான், இதனால் அவன் கோவத்தில் ஒரு பயங்கரத்தைச் செய்து அங்கிருந்து ரத்தினம் (மற்றொரு நாதஸ்வர கலைஞருடன்) ஓடி விடுகிறான், இதைத் தொடர்ந்து நடக்கப் போகும் சம்பவம் என்னவாக இருக்கும் என்பதே நாவலின் நடையாக அமையும் என்று நினைத்தேன், ஆனால் கதை அமைப்பு அவ்வாறாக இல்லை, பக்கிரி, ரத்தினம் எவ்வாறாக நாதஸ்வரம் வாசிக்க ஆரம்பித்தார்கள், அவர்களுடைய குரு யார், அந்த வித்துவான்கள் எப்படி இசை வாசிக்க ஆரம்பித்தார்கள் என்று பல கிளைக்கதை.
இந்த கிளைக்கதைகளை (அது எவ்வளவு சுவாரசியமாக இருந்தாலும்) ஆரம்பத்தில் இதைப் படிக்க குளப்பாடுமாகவே இருந்தது, முதல் அத்தியாயத்தில் நடந்த பிரச்சனைக்குப் பிறகு இவர்களுக்கு என்னவானது என்பதை தெரிந்து கொள்ளவே ஆர்வமாக இருந்தது, ஆனால் கிளைக்கதைகள் விரிய விரியவே நாவலின் மய்ய கரு எதுவென்று புரிந்து கொள்ள முடிந்தது. சஞ்சாரம் வெறும் பக்கிரி மற்றும் ரத்தினத்தின் கதை அல்ல, நாதஸ்வரத்தின் மகிமை, அதன் வரலாறு, அதனைக் கட்டி ஆண்ட வித்துவான்கள், அவர்களை அரவணைத்து வணங்கிய மக்களும் ராஜாக்களும், அது மட்டுமல்லாமல் கரிசல் நிலமும், அதனைச் சுற்றி இருக்கும் folklores உம், நாட்டார் வழிபாடும், நகரமயமாதலும், நாட்டுப்புற கலாச்சாரம் அழிக்கப் படுவதும் என்று பல்வேறு விஷயங்களைப் பேசும் முக்கிய ஒரு படைப்பாகச் சஞ்சாரம் அமைகிறது.
பக்கிரி மற்றும் ரத்தினம் நாதஸ்வரம் பயின்ற பிறகு அவர்கள் ஒவ்வொரு இடத்திற்கு வாசிக்கச் சென்ற அனுபவம் சின்ன சின்ன அத்தியாயங்களாக வருகிறது, அதில் அவர்களுக்கு ஆரம்பத்தில் வரும் பாராட்டுகளும், காலம் செல்ல செல்ல, அவமதிக்கப் படுவதும் நம் நெஞ்சை உலுக்குகிறது, பக்கிரி ஒரு முரடன் ���ோவக்காரன் தான், இருந்தும் அவன் ஆரம்பத்தில் செய்த பயங்கரத்தின் பின்னோட்டம் என்ன, எதனால் அப்படிப்பட்ட ஒரு அசம்பாவிதத்தை அவன் செய்ய தூண்டப்பட்டான் என்பது அவனது இந்த இசைப் பயணத்தில் புரிந்து கொள்ள முடிகிறது. நாவலின் இறுதியில் பக்கிரி மற்றும் ரத்தினம் வாழ்க்கையில் வெவ்வேறு திசைக்குச் பிரிந்து நாயனம் வாசிப்பதை விட்டுவிட்டு வேறு தொழில் ஆரம்பிக்கலாம் என்றிருக்கும் பொழுது அவர்கள் சிறைக்கு தள்ளப்படுவது poetic justice ஆகவே என்னால் பார்க்க முடிகிறது.
இதனை படித்து முடித்தபிறகு நாத இசை வாசிப்பவகர்களை நீங்கள் பார்க்கும் விதம் கண்டிப்பாக மாறிவிடும். எஸ் ரா இதை எழுதுவதற்கு எவ்வளவு ஆராய்ச்சி செய்திருப்பார், எத்தனை கலைஞர்களுடன் பேசியிருப்பார் என்பதை எண்ணி பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது. 2018 சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் அண்ட் deservingly so.
2016 தேர்தலின் போது வைகோ கலைஞரின் சாதியை மையப்படுத்தி வசை பாடியதை கண்டித்து இந்து சமஸ் ஒரு கட்டுரை எழுதினார். அது தான் நாதஸ்வரம் வாசிப்பவர்களை சாதிய சமூகம் இழிவாக நடத்துகிறது என்று உணர்ந்து கொண்ட தருணம். பெங்களூரில் ஒரு காலை வேலை நாதஸ்வர இசையில் கண் விழிக்க நேர்ந்தது. தெருவில் வாசித்து யாசித்து கொண்டிருந்தனர். மங்கள இசை என்று விதந்தோதப்படும் ஒரு கலையும் அதை வாசிக்கும் கலைஞர்களும் ஒடுக்குமுறைக்கு ஆளாகுவது என்ற கேள்வி அப்போது தொடங்கி இருந்ததுண்டு.
சஞ்சாரம் இதன் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல் என்றே தெரியாமல் தான் வாசிக்க தொடங்கினேன். ஏன் என்ற கேள்விக்கு செல்லாமல் எப்படி என்று கிளை கதைகள் மூலமாக நமக்கு சொல்லியிருக்கிறார் எஸ்.ரா
பொதுவாகவே எஸ்.ராவின் எழுத்துக்களின் மேல் ஒரு அந்நியத்தன்மை உண்டு. அனுபவங்கள் வாயிலாக இல்லாமல் கேட்டதை வைத்து எழுதப்படும் கதைகள் என்பது தான் காரணம். சஞ்சாரமும் அதற்க்கு விதிவிலக்கல்ல.
கதைக்குள் கதை என்ற கோட்பாட்டில் உருவான சஞ்சாரம் மிகுந்த நேர்தியானதோர் அனுபவத்தை அளித்தது. நாதசுவர கலைஞர்கள் மீது மதிப்பை கூட்டும் வண்ணமே இப்படைப்பு அமைந்துள்ளது. ஒவ்வொரு கதையுமே மிகவும் அழகானதோர் அனுபவத்தை நமக்குள் கடத்தி மாயம் செய்கின்றன. குறிப்பாக மாலிக் கபூரின் கதை சொல்லிய விதம் என்னை சில நிமிடங்களுக்கு அந்த கதையில் வாழவே வைத்தது. மொத்தத்தில் எஸ். ரா வின் மிகவும் அழகியதொர் நேர்த்தியான படைப்பு என்றே சொல்லுவேன்.
The novel is about nathaswaram artiest, their life, their struggle, their passion towards music. This novel speaks about politics, this novel speaks about untouchability, this novel speaks about farmers (that eggplant story which remembers me about P T eggplant seed controversy ) There are many sub stories....
கோபம்தான் வருகிறது.. வாரமலர் ல வந்த கதை மாதிரி இருக்கு. நாவல் கட்டமைப்பு வலிந்து திணிக்க பட்டு இருக்கு.. சம்மந்தமே இல்லை தொடர்பும் இல்லை. இதுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் வேற. பல கதைகள் அடங்கிய சிறுகதை தொகுப்பு தான் ஆனாலும் அந்த கதைகள் ஒரு கட்டத்துல அலுப்பா இருக்கிறது எதுக்கு இந்த நினைவு வருகிறது என்ன தொடர்பு இருக்கிறது. எஸ் ரா இப்படி எழுதுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலை/ கீழை நாடுகளின் நிகழ் கால இலக்கியங்களை படிக்க வேண்டிக்கொள்கிறேன்.
யாமம், உறுபசி, துயில் − நான் படித்த எஸ்ராவின் பிற நாவல்களில் என்னைக் கவர்ந்தது துயில் மட்டுமே. இப்போது அவ்வரிசையில் சஞ்சாரம் இடம்பெறுகிறது. அவரின் மொழிநடை சற்றே ஊகிக்க முடிவதாக இருந்தாலும் இவ்விரு புதினங்களிலும் அதன் கதைகள் நம்மை உள்ளிழுக்கின்றன.
நகர்மயமாதலும், சாதியமும், நாத இசையும், அதன் வரலாறும், அதன் வித்வான்களும், கரிசல் வாழ்க்கையும், தமிழ் கலாசாரம் அழித்தெழுதப்படுதலும், மனித வாழ்வின் துயரங்களும், நம் அனைவருள்ளும் புதைந்துள்ள குரூரங்களும் இக்கதையில் சந்திக்கின்றன.
விசேஷ காரியங்களின் போது எப்போதாவது நம் மனத்தில் தோன்றியிருக்கும் சில கேள்விகளுக்கான − இக்காலத்தில் நாத இசைக்கலைஞர்கள் எப்படி உருவாகிறார்கள்? அவர்கள் எப்படி கற்பிக்கப்படுகிறார்கள்? அவர்களின் சமுக அந்தஸ்து எப்படி? நாத இசையின் நுட்பங்கள் என்ன? − சில பதில்கள் சஞ்சாரத்தில் விரிகின்றன.
ஓர் வன்முறையை ஒட்டிய பரபரப்பான ஓர் கதைச்சரடு ஆரம்பத்திலிருந்து நீண்டுகொண்டிருக்க, பிரதான பாத்திரங்களின் நினைவுகள் மூலம் அவர்களின் கடந்தகாலமும், கரிசல்காட்டு நாத வித்வான்களின் பெருமையும், நாத இசையைப் பற்றிய வரலாற்றுத் துணுக்குகளும், தமிழ் கிராம வாழ்வின் வன்முறை நிறைந்த உண்மை நிலையும், அழிவின் விளிம்பிலுள்ள பழக்கவழக்கங்களும் மறுபுறம் விரிகின்றன.
ஓர் நேர்கோட்டுக் கதையும் கடந்தகால நினைவுகளும் சரித்திரமும் நாட்டாரியல் கதைகளும் பின்னிப் பிணைந்துள்ள இக்கதை நம் கவனத்தை எளிதில் தக்க வைத்துக்கொள்கிறது. கதை முடிவில் எவர்க்கும் நாத இசை மீது ஒரு புது மதிப்பும் ஆர்வமும் எழுவது உறுதி.
சுவாரஸ்யம் குன்றாமல் கதை நகர்ந்தாலும், அங்கங்கே கிளைக்கதைகளைப் புகுத்த "அவனுக்கு இந்த நிகழ்வின் நினைவு விரியத் துவங்கியது" எனத் துவங்குவது சலிப்பூட்டுகிறது. இசையைப் பற்றி ஆழ்ந்து ஆராயாமல் கலைஞர்களின் வாழ்வோடு கதை நின்று கொள்வது சிறு வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
விரிவானதொரு பெரும்புதினமாவதற்கான சாத்தியங்கள் பலவற்றை சஞ்சாரம் தவற விட்டிருப்பினும், அதன் கருப்பொருளின் முக்கியத்துவத்திற்காகவும், கிளைக்கதைகளின் ருசிக்காகவும் தவறாமல் வாசிக்கலாம்.
நாதஸ்வரம் கேட்டுப்பழகிய எவனும் ஒருபோதும் நம்பிக்கை இழக்க மாட்டான்!. அது அவன் மனஉறுதியை அதிகப்படுத்தி விடுகிறது.சந்தோஷத்தை நிரப்புகிறது. வேதனைகளை ஏற்றுக்கொண்டு கடந்துபோக துணை செய்கிறது. குருடனின் ஊன்றுகோலைப் போலஇசை வாழ்க்கையை பற்றிக்கொள்ள துணை செய்கிறது. • Wonderful page turner. The first and the famous instrument of my life is நாதஸ்வரம். This book is very close to my heart. It remember me my late grandfather and my uncles. All I can I do is just proud about themselves, I have always love to tell people about my grandpa was a நாதஸ்வர வித்வான் unfortunately I never seen him in my life, If he lived I never do what I’m doing as job to pay my bills. Anyway life is always a mystery if you’re curious enough you will love it. Even though I’m a heir of நாதஸ்வர வித்வான் I love string instrument more than anything else’s coz music is form of art it is in our day to day life. • தாள லயம் என்பது கலைஞர்கள் வாசிக்கும் இசைக் கருவிகளைச்மட்டும் சார்ந்தில்லை அது அன்றாட வாழ்வோடு தொடர்புகொண்டது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு காலப் பிரக்ஞைஇருக்கிறது. பரபரப்பாக திரியும் போர்வீரனுக்குள் செயல்படுவதுதுரித லய கதி, நிதானமாகச் செயல்படும் சாதுவிடம் வெளிப்படுவதுவிளம்ப லய கதி, இவை இரண்டுக்கும் இடையில் செயல்படும்சாமான்ய மனிதர்களிடம் மத்திய லய கதியும் இருக்கின்றன. இதுமனிதர்களின் மனோ தாள லய கதி சார்ந்தது என்கிறார்கள். • Musical Instruments are dying because we don’t pay attention to them. Technology gives us fastness in progress advance in knowledge, that doesn’t mean we are super fast. We already lost our patience’s in this progress. Let me give you an example from the book quotes on my perspective what I have learned • "நாதஸ்வரம் அசுரவாத்தியம். இதை கட்டுபடுத்தி சாதனைசெய்றது லேசுல்லே. யானை மாதிரினு வச்சிக்கோ. யானையைலேசா அடக்கமுடியுமா, யானை பயத்துக்கு அடங்கிப்போறதாநினைக்குறாங்க. அதான் கிடையாது. அது பழக்கத்துக்கு தான்அடங்கிப்போகுது. பாகன் அது மேலே உசிரையே வச்சிருக்கானு அதுக்கு புரியுறதாலே தான் அடங்கிப்போகுது. இந்த வாத்தியமும்அப்படித்தான். இது தான் உசிருனு நினைச்சி பழகினா தான் உனக்குஅடங்கிப்போகும். அதுக்கு நீ அசுர சாதகம் செய்யணும். ஒரு ராகத்தைஎப்படி வாசிக்கணும்னு நான் கத்து குடுத்துருவேன். ஆனா அதைஉள்வாங்கிட்டு எப்படி கற்பனையோடு வெளிப்படுத்தணும்கிறதைநீ தான் செய்யணும். • நாதஸ்வரம் = மனசு Read above quote again in this way. Where ever you find the நாதஸ்வரம் or வாத்தியம் replace the word with மனசு!.
நாதஸ்வர கலைஞர்கள் இவ்வளவு நலிந்தனரோ? என ஆராய வைத்து சிந்திக்க வைக்கும் புதினமாக அமைக்கப்பட்டிருக்கிறது.. <3 இரண்டு கதாபாத்திரங்களை ஒட்டியே கதைக்களம் அமைந்திருந்தாலும் பல சிறுகதைகளை ஒன்று திரட்டி அழகான இழையால் தொடுத்து வரலாறு, நிகழ்கால அமைப்பு, அக்கால கலைஞர்களுக்கான மதிப்பு, இக்காலம் தொன்மையான இசைக்கருவிகளுக்குரிய மதிப்பு குறைவு என சகலத்தையும் அலசி இருக்கிறார் எஸ் ரா அவர்கள்..
நான் படித்த நல்ல புதினங்களில் ஒன்றாக நிலைத்து நிற்கும்..
பிழைப்பு என்று மட்டும் பாராமல் கலையின் பொருட்டு, அவமானங்களே வாழ்க்கையாக வாழும் பல பக்கிரிகளும் ரத்தினங்களும் பற்றிய கதை இது... பக்கிரிக்காகவும் ரத்தினத்திற்காகவும், நம்மால் கண்ணீர் மட்டுமே உகுக்க முடியும்... நிச்சயம் வாசிக்க பட வேண்டிய நாவல்
இறுதியில் வாசித்தாயிற்று. இந்த விருது படைப்பை. எஸ்.ரா வின் யாமம், துயில், இடக்கை போன்று இதுவும் ஒரு கதாபாத்திரத்தின் மூலம் அவர்கள் வாழ்க்கை மற்றும் சமூகத்தை நமக்கு காட்டும் ஜன்னல் ம்ம்ம்ம் அல்ல அல்ல கதவு. பக்கிரி, ரத்தினம் என்ற இரு கரிசல் காட்டு நாகஸ்வர வித்துவான்கள் மூலம் எத்துனை வரலாறு - மாலிக் கபூர், காதுடைந்த கல் யானை ஆகட்டும், அவர்களின் நிகழ் கால அவலங்கள் ஆகட்டும். பேருந்து மேல் தவிலுடன் பயணம், பசி, திருமண நிர்பந்தங்கள்.... வருடும் தென்றலாக அந்த சாகிபு கதையும் உண்டு. இவரின் கதைகள் திடுக் திருப்பங்களையோ அறிவுரைகளையோ நமக்கு அள்ளித் தருபவை அல்ல. நிதர்சன வாழ்வின் வலிகளை ஓசையின்றி நமக்கு கடத்தும் ஆழ் ஊசிகள்
Not the best of S Ra but an important work . There were many interesting and wonderful incidents/anecdotes which could have made for excellent short stories but a feeling arises that the story which ties them together isnt as strong and well paced . Nevertheless , its interesting and definitely an earnest and good work.
An interesting novel written by s ramakrishnan. The author gives an insight to the forgotten section of the society. The Folklore Musicians(Nadaswara vidwans and Thavil Vidwans). Most of time the novel deviates from the actual story with lots of flash backs, giving just a few glimpses of the hard life faced by these musicians. many times the novel felt like a compilation of short stories.
நூற்றாண்டுகளாக வாசகர்கள் மத்தியில் எப்போதுமே ஒரு கேள்வி இருந்த வண்ணம்மிருக்கும் . விளக்ககங்கள் நூறு கொடுக்கப்படிருந்தாலும் புத்தகம் படிக்க ஆரம்பிக்கும் , புத்தகம் படிக்கும் வாசகர்கள் அனைவர்க்கும் அவர்ளின் வாழ்வில் வரும் கேள்வி ஒன்று தான் . சாதாரண புத்தகத்திற்கும் , இலக்கியம் சார்ந்த புத்தகத்தையும் எப்படி பிரித்தெடுப்பது . ஒரு புத்தகம் இலக்கியிம் என்னும் நிலையை அடைய எவ்வாறு படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதேயாகும் . ஒரு சாதாரண புதினம் எப்படி இலக்கியமாக மாறுகிறது என்பதற்கான ஒரு நல்ல உதாரணம் தான் இந்த சஞ்சாரம் புத்தகம் . நாதஸ்வர கலைஞர்களின் வாழக்கையை பற்றிய புதினமாக அறிமுகமாகி அவர்களின் வாழ்வு , அதில் வாழும் மனிதர்கள் , அவர்கள் வாழ்ந்த சமுதாயத்தில் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் .கலைஞர்களின் ஆசை , கவலை , கோவம் , என உணர்வுகளாலேயே இந்த புத்தகம் படைக்கப்பட்டிருக்கிறது . எந்த ஒரு புதினம் சமூகத்தையோ அல்லது அதில் வாழ்ந்த மக்களை பிரதிபலிக்கிறதோ அதுவே இலக்கியமாகும் என்கிற என் புரிதலுக்கு ஏற்ற ஒரு அற்புதமான படைப்பு தான் இந்த புத்தகம் . சில புத்தகங்களின் முகப்பில் அவை பெற்ற விருதுகள் அலங்கரிக்கும் . புத்தகம் படித்தபின் அந்த விருதுக்கும் படித்த முடித்த படைப்பிருக்கும் என்ன சம்பந்தம் , எதனால் இந்த புத்தகத்திற்கு இந்த விருது கொடுத்தார்கள் என்று கூடத்தோன்றும் . நான் படித்த புத்தகங்களிலே, சாஹித்திய அகாடமி விருதுக்கு தகுதியான புத்தகம் தானிது என்று என்னை நினைக்க வைத்த வெகு சில புத்தகங்களில் இதுவும் ஒன்று . இது வரை நான் படித்த ராமகிருஷ்ணன் நாவல்களில் சஞ்சாரமே முதன்மையானது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து . இலக்கியத்திற்குள் கால்பதிக்க நினைக்கும் அத்தனை தமிழ்வாசகர்களுக்கும் இது ஒரு அருமையான அறிமுக புத்தகமாக இருக்கும் . கண்டிப்பாக தமிழ் வாசகர்கள் தவறவிட கூடாத புத்தகம் இது .
நாம் எல்லோருமே சிறுவயதில் இருந்து இப்ப வரைக்கும் ஏதோ வகையில் நாதஸ்வர இசையை கேட்டு கொண்டு இருக்கிறோம் (திருமணம் வாயிலாக கோவில் நிகழ்ச்சிகள், இசை கச்சேரி) ஆனால் அந்த இசை கலைஞர்கள் வாழ்க்கை எப்படிப்பட்டது அவர்களின் சமூகவியல் என்ன என்பதை இந்நாவல் விவரிக்கிறது. முக்கியமாக கரிசல் நிலத்து வித்வான்களின் நிலை என்ன, ஏன் அவர்கள் சோழநாட்டு வித்வான் அளவுக்கு பிரபலமடைய முடியவில்லை. பக்கிரி,ரத்தினம் இந்நாவலின் முக்கிய கதபாத்திரம் (நாதஸ்வர வித்வான்கள்). நான் இந்த நாவல் கதை பற்றி சொல்ல விரும்பலை. இது சொல்கிற விடயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நாதஸ்வரம் ஒரு மங்கல வாத்தியம், தேவலோக கருவி, கடவுளை சந்தோஷ படுத்த பயன்படுத்துவது. இந்த கருவிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிற நாம , ஏன் நாதஸ்வர வித்வான்களை கண்டு கொள்ளவில்லை. எனக்கு இப்பவும் நினைவு இருக்கு எங்க ஊர்ல இது வரைக்கும் யாரும் நாதஸ்வர கலைஞர்களுக்கு மரியாதை செய்து நான் பார்க்கவேயில்லை. இந்த நாவலை படித்த பின் நானும் இதை நினைச்சு வெட்கபடுகிறேன். அவர்கள் நம் தமிழ் நிலத்தின் அடையாளம், நவீன கலைகளின் முன்ணோடி அதற்கு நம்மால் இயன்றவரை அவர்களின் இசையை உள்வாங்கி பாராட்டினாலே போதும். நண்பர்களே இதை நீங்க���ும் செய்விங்கள் என்று நம்புகிறேன். இந்த நாவல் படித்த எல்லோரும் கண்டிப்பாக எந்த சுபநிகழ்ச்சிகள் சென்றாலும் நாதஸ்வர இசையை கூர்ந்து கவனிப்பிங்கள் என்பது நிச்சயம் நானும் தான். இந்த அற்புதமான நூலை வெளியிட்ட ஆசிரியர் எஸ்.ராம கிருஷ்ணன் சாருக்கும் அவருக்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. படிக்காதவர்கள் கண்டிமாக படிக்க வேண்டிய ஒரு நாவல் (இதை ஒரு கரிசல் காட்டு பையனாக கேட்டு கொள்கிறேன்)
'சஞ்சாரம்' நாவல், நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்க்கைச் சிக்கல்களை, குறிப்பாக அவர்களின் பொருளாதார, சமூக மற்றும் சாதியப் பிரச்சினைகளை ஆழமாகப் பேசும் ஒரு முக்கியமான படைப்பாகும். பக்கிரி என்ற மையக் கதாபாத்திரத்தின் சவால்கள் வழியே இக்கதை விரிகிறது.
இந்நாவல், முழுக்க நேரடி நேரமோட்டத்தில் செல்லாமல், கடந்த நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டும் flashback பாணியில் எழுதப்பட்டுள்ளது. கதையின் முக்கிய தருணங்களில், எழுத்தாளர் நம்மை கடந்த காலத்துக்கும் மீண்டும் நிகழ்காலத்துக்கும் அழைத்துச் செல்வதன் மூலம், ஒரு நுணுக்கமான கதைப்போக்கை உருவாக்குகிறார். சுவாரசியமான அம்சமாக, ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒரு ஊரின் பெயர் தலைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இது கதையின் பரப்பலை மட்டும் இல்லாமல், ஒவ்வொரு இடத்தோடும் தொடர்புடைய உணர்வுகளையும் வாசகனிடம் ஏற்படுத்துகிறது.
இசை கலைஞர்களில் சிலரே பெயரும் புகழும் பெறுகிறார்கள்; ஆனால் பெரும்பாலான கலைஞர்கள் சமூக அங்கீகாரம் இல்லாதவர்களாக தங்கள் வாழ்நாளைக் பொருளாதார நெருக்கடிகளில் கடப்பதையும், குடும்பம் மற்றும் சமூகம் அவர்களின் திறமையை பொருட்படுத்தாமல் கேளிக்கையாகக் கருதுவதை இந்த நாவல் சுட்டிக்காட்டுகிறது.
தனிச்சிறப்பு வாய்ந்த எழுத்துமுறையால், எளிமையிலும் ஆழத்தையும் கொண்ட கதையாடல் பாணியால், ‘சஞ்சாரம்’ நாவல் வாசகர் மனதில் நீங்கா பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்காகவே, 2018ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் திரு. எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய இந்த நாவலுக்கும் கிடைத்துள்ளது. இந்த நாவலைப் படிக்கையில் இசைக் கலைஞர்கள் மீது, குறிப்பாக நாதஸ்வரக் கலைஞர்கள் மீது மதிப்பு பெருகவே செய்கிறது. மேலும் நாதஸ்வர இசைகளை அதிகம் கேட்கவும் தூண்டுகிறது.
"துயரத்தின் இசை மட்டுமில்லை. மறக்கப்பட்ட சந்தோஷத்தின் இசை. நிராசையின் இசை"
சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் என்பது ஆவலை தூண்ட வாங்கிய புத்தகம், சிறு வயதில் கல்யாணத்திலும், கோவில் விஷேசங்களிலும் பார்த்துக் கேட்டுப் பழகிய ஒரு இசையின் பின்னால் இருக்கும் வரலாறு, அந்த வளர்ச்சியும் வீழ்ச்சியும் பற்றி பேச கூடிய நாவல்.
ஒரு கோவில் திருவிழாவில் அவமதிக்கப்பட்ட ஒரு நயன இசை கலைஞன் பக்கிரி யின் வழியாக நாவல் விரிகிறது. நாவலின் அட்டை படம், தலைப்பு, முன்னுரை என அனைத்தும் நாதஸ்வரம் பற்றி இருப்பினும் கதையில், கரிசல் நிலம் அதன் குணாதிசயம், விவசாயிகளின் வீழ்ச்சி, பெயர் அளவில் ஒழிந்து போன சாதியின் வெறி, கரகம் அடும் பெண்களின் தினப்போரட்டம் என்று பலதரப்பட்ட சமுதாய நிலைகளை பேசி செல்கிறது.
எங்கும் தொய்வில்லாத நடை பக்கிரியுடன் நம்மை ஒன்றி பயணிக்க செய்யும்.
📝ஒரு காலத்தில் கோவிலில் மைக்செட் இல்லாமல், அலங்கார விளக்குகள் எதுவுமில்லாமல் அரையிருட்டில் நாதஸ்வரம் மேளம் வாசிக்கும்போது கேட்கும் சங்கீத ருசி யாருக்காவது நினைவில் இருக்குமா?
📝சிவனே மிஷின் வாசிக்கிற சங்கீதத்தை தானே கேட்டுகிட்டு இருக்கார்
கேட்டா சம்பளம் மிச்சமாம். அதுல என்ன கோடி ரூபாயா மிச்சம் பண்ண முடியும். இன்னும் சர்ச்சில் பியானோ தானே வாசிச்சுட்டு இருக்காங்க. மாறலையே.
இந்த நாவலை வாசித்த பின்பு, எங்காவது நாதஸ்வரம் இசை கேட்டால், நின்று நிதானித்து ரசித்து விட்டு செல்ல தோன்றும்
"சஞ்சாரம்" 2018-க்காண சாகித்திய ஆகாடமி விருது பெற்ற நாவல். தமிழ் மரபு வாத்தியம் , மங்கள இசை வாத்தியம், நாதமும் ஸ்வரமும் ஒருசேர அமைந்த "நாதஸ்வரம்" வாத்தியத்தை கருவாக்கி கதை நகர்வுக்கு கரிசல் மண்ணை களமாக்கி கரிசல் காட்டு நளிந்த (அ) நசுக்கப்பட்ட நாதஸ்வர கலைஞர்கள் படும் பாட்டை Non-Linear பாணியில் (கிளை கதைகள்) எவ்வித தடுமாற்றமுமில்லாமல் கதை பயணிப்பதால் நம்மை சோர்வில்லாமல் அடுத்தடுத்த பக்கங்களை புரட்ட தூண்டுகிறது. நம் சமூகத்தில் காவிரி கரையில் வாழும் கலைஞர்களுக்கு கிடைக்கும் மரியாதை, பாராட்டு, பொருளாதாரம் கரிசலில் வாழும் சக மேதைகளுக்கு சாதிய பாகுப்பாடினாலும், மேட்டுக்குடியின் அடக்குமுறையாலும் கிடைப்பதில்லை என்பதையும் கலைஞர்கள் மதிக்க படவேண்டும் யாராக இருப்பினும் என்பதையும் இப்புதினத்தின் ஊடாக பதிவு செய்துள்ளார் S.Ra.
நிகழ்கால கலைஞர்களின் வாழ்வின் வலிகளை ஓசையின்றி கடத்தும் ஓர் ஆழ் ஊசி இப்படைப்பு.
இனிமேல் எங்காவது நாதஸ்வரம் இசைப்பதை கேட்க நேரிட்டால் இது கல்யாணியா, மல்லாரியா, பிலஹரியா, ரஞ்சனியா, நாட்ட குறிஞ்சியா, ராக வார்தினியா, கீராவாணிய என என் மனம் என்னையறியாமல் ராகங்களில் சஞ்சாரிக்கும்.
இசைக்கலைஞர்கள் எல்லாக் காலத்திலும் எல்லோராலும் பாராட்டப்படுவதில்லை. யாரும் பாராட்டவும் முற்படுவதுமில்லை. அதிலும் குறிப்பாக, நாட்டுப்புற இசைக்கலைஞர்களின் நிலைமை மிகவும் இழிநிலையே. நாட்டுப்புறக் கலைஞர்களுள் நாதஸ்வர இசைக்கலைஞர்கள் குறித்து எழுதப்பட்ட சஞ்சாரம் என்னும் நாவல் நாதஸ்வர இசைக்கலைஞர்கள் பற்றிய ஒரு ஆவணமாக உள்ளது. இசையை யார் வேண்டுமானாலும் கற்கலாம் என்ற நிலையிலிருந்து ஒரு குறிப்பிட்ட சாதியினைச் சார்ந்தவர்கள் தான் இசையைக் கற்க வேண்டும், அவர்களே அதனைப் பயன்படுத்த வேண்டும், அவர்களைத் தவிர வேறு யாரும் அதனைப் பயன்படுத்தக் கூடாது என்ற போக்கு இருப்பதை இன்றும் உணர முடியும்.
அவ்வாறான சூழலில் கரிசல்காட்டு இசைக்கலைஞர்களுள், நாதஸ்வரம் இசைக்கும் கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து, அவர்களின் வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளின் அடிப்படையில் வரலாற்று மூலம் தொடங்கி எவ்வாறு நாதஸ்வர கலைஞர்கள் வளர்ந்து வாழ்ந்து வந்தார்கள் என்பதும், அவர்களின் மதிப்பு சமூகத்தில் எவ்வாறு உயர்ந்திருந்தது என்பதும், இன்று எவ்வாறு இந்த இழிநிலையை அடைந்தார்கள் என்பதும் இந்நாவலில் பதிவுசெய்கிறது.
நாயனம் வாசிப்பவர்களான பக்கிரி மற்றும் ரத்தினம், மூதூர் என்ற ஊரின் திருவிழாவுக்கு வாசிக்க சென்ற இடத்தில் கலவரம் ஏற்பட்டுவிட்டது. அதில் அவர்களுக்கு அவமானம் நிகழ்த்தப்பட்டது. அவர்களை அப்படியே விடாமல் அங்கேயே கட்டிவைவைக்கப்பட்டனர். அங்கிருந்து தப்பிச்செல்லும் முன்பு பக்கிரி திருவிழா பந்தலில் தீயிட்டுவிட்டு ஓடினான். காவல் அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க அவர்கள் ஊர் ஊராக பயணிக்கிறார்கள் அப்போது அவர்கள் சந்தித்த மனிதர்கள், மக்கள், கரிசல் நிலங்களை பற்றி அசைபோடுகிறார்கள். சோலையூர் தன்னாசி எனும் ஒரு cult கதாப்பாத்திரம் குறித்து எழுதியிருக்கிறார். ஒரு இழப்பினால் இயலாமையில் உருண்டுகொண்டிருந்த கண்ணில்லாத மனிதர், பின் நாயனம் பயின்று ஒரு அர்ஜுன் ரெட்டியாக உருமாறுகிறார். அடுத்து, silent horror கதையை சொல்லும் ஆட்டு வியாபாரி மகாலிங்கத்தின் கல்லுக்கு நீர் இறைக்கும் பைத்தியக்காரத்தனம். பின்னர் திருச்சுழி ஊமை ஐயரின் இசை ரசனையும், ரசிக அதிகாரமும் நம்மை நேசிக்க வைக்கிறது. இப்படி பல்வேறு கதாபாத்திரங்கள் வந்து போகின்றன. நாயனம் வாசிப்பவர்களின் ஏழ்மை நிலை, அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, அவமானங்களை ஒவ்வொரு பக்கத்திலும் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
நாம் நம் வாழ்க்கைப் பயணத்தில் பல தரப்பட்ட மக்களைச் சந்தித்திருப்போம். ஆனால் அவர்களின் வாழ்க்கையையும், அதற்குள் ஒளிந்திருக்கும் வலியையும் நாம் அறிந்திட வாய்ப்பில்லை. அறிந்துக்கொள்ள முற்பட்டதும் இல்லை. அப்படி நாம் அறிந்து கொள்ள முற்படாத, வாழ்வில் வலியையும் வேதனையையும் சுமந்து கொண்டு இருப்பவர்கள் "நாயனக்காரர்கள்" . அன்றாடம், கோவில்களில், திருமணங்களில், இதர நிகழ்ச்சிகளில் அவர்களைக் கண்டிருந்தாலும், அவர்களின் மேல் இச்சமூகம் பெரிதாக அக்கறைக் காட்டியதாக தெரியவில்லை.
ஒரு நல்ல எழுத்தாளர், இச்சமூகம் கண்டுகொள்ளாத இடங்களைத் தன் எழுத்துகளின் மூலம் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். அந்த பணியை செவ்வென செய்திருக்கிறார் எஸ் .ரா.
பக்கிரி, தண்டபாணி, பழனி, ரத்தினம் இவர்களோடு நானும் நாயனத்தைத் தூக்கிக் கொண்டு பயணம் போன அனுபவம்.
இந்நாவலில் அனைத்து கதாபாத்திரங்களும் மறக்க முடியாதவையாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் என்னை பாதித்த இரு கதாபாத்திரங்கள் தன்னாசியும், சரஸ்வதியும்...
இந்நாவல் உங்களுக்கு பிடிக்கலாம் பிடிக்காமலும் போகலாம் ஆனால் இந்நாவலை முடித்த பிறகு , எங்காவது நாதஸ்வர இசை கேட்டால் உங்களால் நின்று கேட்காமல் இருக்க முடியாது..
Having read few non fiction works of S.Ra, was looking forward to read this novel about Nadhaswaram artists, as it had also won the Sakitya Akademi award. I must say, I was disappointed as the novel turned out to be a damp squib. The sub plots were way too much and wavering from the narrative and not all of them were interesting. A few were really good and they would have well fit even if S.Ra chose to write a (non fiction) collection of legendary tales from the Karisal kaadu region. Nevertheless, the novel is an eye opener for me into the life of Nadhaswaram artists and I would most probably appreciate them more when I see them performing henceforth.