கதைகளின் தேவை... மனிதனுக்கான ஆயுள்காலம் 'நூறு' என்பார்கள். வறுமை, நோய், பகைமை போன்றவற்றின் தாக்குதலுக்கு உள்ளாகாமலிருந்தால் இந்தக் கால வரையறை சாத்தியமாகலாம். இவற்றால் விளையும் பாதிப்புகளைப் பொருத்து வாழ்நாள் கூடும்...குறையும். எது எப்படியோ, நமக்கு வாய்த்திடும் வாழ்க்கையை, இயன்றவரை மனநிறைவு தரும் வகையில் வாழ்ந்து முடிப்பது அறிவுடைமை ஆகும். இதற்குத் துணைபுரிவது ஆராயும் அறிவு மட்டுமல்ல; வாழ்க்கை அனுபவமும்தான். அந்த அனுவபவத்தை வாரி வழங்குபவை கதைகள். அவற்றிற்குப் புதினங்கள், நாடகங்கள், சிறுகதைகள் என்று வேறு வேறு வடிவங்கள் உள்ளன. சின்னஞ்சிறு கதைகள், குட்டிக்கதைகள், ஒரு பக்கக் கதைகள் போன்றவை சிறுகதையின் உட்கூறுகள் ஆகும்.