1924. மத்திய ஆசியா. சோவியத் குடியரசு. அங்கே ஒரு குக்கிராமம். அதில் உள்ள ஒரு மலைக் கிராமத்தில் நிகழ்கிறது இந்த முதல் காதல். தூய்சன், அல்டினாய் இருவருக்கும் இடையே உருவெடுக்கும் பரிசுத்தமான நட்பின் ஆழம் நேசமாய் பரிணமிக்கிறது. அங்கே நிலவிய சமூக பின்னணியே அவர்களை நெருக்கமாய் கொண்டு வருவதற்கான தேவையாகி விடுகிறது.
அந்த கடமை வீரனின் லட்சியம் மகத்தானது. அவன் பொதுவுடமை இயக்க உட்பொருளின் குறியீடாய் இயங்குகிறான். அவன் மனது தான் பெற்ற அத்தனையையும் இளையதலைமுறையினர் அனைவரும் பெற வேண்டும் என துடிக்கிறது.
அவனே இத்தனை நாள் எழுதப் படிக்கத் தெரியாத ஒரு கிராமத்து மனிதன் தான். ஆனால் அவன் எண்ணங்களின் பாதைகளில் அயராது பயணிப்பவன்.