செவ்வியல் படைப்பான இந்த நூல் ஓர் அசல் சுயவுதவிப் பெட்டகம். இது உலகெங்கும் எண்ணிக்கையற்ற ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ளாற்றலை வழங்கிக்கொண்டிருக்கிறது. அன்பு எவ்வாறு மனிதனுக்குள் இருக்கின்ற ஆற்றலை வெளிப்படுத்தி, வாழ்க்கையின் மிகக் குதூகலமான அனுபவமாக அது ஆக முடியும் என்பதை நீங்களும் இந்த நூலிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடனே இருக்கவேண்டிய புதிய வெளிச்சமூட்டும் இந்தப் புத்தகத்தில் புகழ்பெற்ற உளப் பகுப்பாய்வாளர் எரிக் ஃபிராம், நம்மிடமிருக்கும் நமது நேசிக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வழிகாட்டுகிறார். பொய்யான கருத்துநிலைகளிலும் மிகை எதிர்பார்ப்பிலும் ஊறியிருக்கும் காதல் அன்பு, பெற்றோர்-பிள்ளைகள் அன்பு, சகோதர அன்பு, காமிய அன்பு, சுயம் சார்ந்த அன்பு, கடவுள்மீது அன்பு போன்ற அன்பின் அனைத்து அம்சங்களிலும் நமது ஆற்றலை வளர்ப்பது பற்றி விவரிக்கிறார். மேலும் நம்முடைய வாழ்க்கையின் ஒட்டு மொத்தமான போக்கை நாம் எவ்வாறு மாற்ற முடியும் என்பதையும் இந்த நூலில் எடுத்துக்காட்டுகிறார். ‘அன்பு என்னும் கலை’ 1956 முதல் தொடர்ந்து பதிப்பிக்கப்படுகிறது. இதுவரை ஆங்கிலத்தில் 60 லட்சம் படிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. இதன்மூலம் இந்த நூல், தனிப்பட்ட ஆளுமையின் வளர்ச்சி உளவியலை வளர்த்தெடுக்கின்ற ஒரு முன்னோடிப் படைப்பாகக் கருதப்படுகிறது.
அன்பு எளிமையானது. செயல் மூலம் வெளிப்படுத்தத்தக்கது. அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இப்புத்தகத்தில் இந்நூல் ஆசிரியர் அன்பைப் பற்றி என்ன சொல்ல வருகிறார் என்பதே புரியவில்லை. புத்தகம் நெடுகிலும் இந்தப் பிரச்சினை இருக்கின்றது. மிக மோசமான மொழியெர்ப்பு.
அன்பு என்னும் கலை ❤️ • Erich Fromm அவர்களால் எழுதப்பட்டு 1956ல் வெளியான The Art of Loving என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பே இந்த ‘அன்பு என்னும் கலை’. மொழிபெயர்த்தவர் ராஜ் கௌதமன். • அன்பை ஒரு கலை என விளித்து, அதன் வெவ்வேறுபட்ட படிநிலைகளை விளக்கி, தாய்/தந்தை அன்பு, சகோதர அன்பு, காமிய அன்பு, சுயம் சார்ந்த அன்பு மற்றும் இறைமை மீதான அன்பு என அன்பின் பல்வேறு இலக்குகளையும் ஆராய்ந்து, அனைத்துக் கலைகளைப் போலவே அன்பு என்னும் கலையிலும் தேர்ச்சி அடைவதற்கான பாதையை உளவியல் அடிப்படையில் காட்டுகிறது இப்படைப்பு. மொழிபெயர்ப்பு சில இடங்களில் கடினமாக இருந்த போதிலும் அன்பு பற்றி அறியும் ஆவல் பக்கங்களை தழுவிச்செல்ல வைத்தது. • ஒருவரை அவர் நிலையில்/சுயத்தில் ஏற்றலே மெய் அன்பு. எவ்விதமான தாக்கமோ, ஆதிக்கமோ அல்லாமல் அவரவர் இயல்பை உணர்ந்து ஏற்பது. மற்றும் ஒருவரை மட்டும் நேசிப்பதல்ல அன்பு, நீ அடங்கலாக அது ஒட்டுமொத்த உலகுக்குமானது. உலகச் சுழல் அச்சு, அன்பென்க. • “நான் உண்மையாக ஒருவரை நேசித்தால், எல்லோரையும் நான் நேசிக்கிறேன்; இந்த உலகத்தை நேசிக்கிறேன்; வாழ்க்கையை நேசிக்கிறேன்; யாரோ ஒருவரிடம் என்னால் ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று நான் கூறமுடியுமென்றால், ‘உன்னில் ஒவ்வொருவரையும் நான் நேசிக்கிறேன், இந்த உலகத்தை நேசிக்கிறேன், என்னையும் நேசிக்கிறேன்’ என்று என்னால் கூற இயலும்; கூற வேண்டும்.” —புத்தகத்திலிருந்து.
Ive read lots of books in my life,but this one is the greatest.Im grateful to reading habit coz it showed me this one.This book was released i 1956 its almost 80 yr passed still the human psychology didn't changed a bit. About this books content:It is approaching relationship.Psycologically between couples, Siblings,parent and children even stranger.How Globalization and capitalism making a unloving society..And end of note ❤️RELATIONSHIP IS AN ART AND EVERY ART SHOULD BE PRACTICED CONSTANTLY TO LONG LASTING💖.