'வள்ளுவரும் தாமஸும்' என்று முதலில் பெயரிட்டு இப்போது 'தாமஸ் வந்தார்' என்கிற பெயரில் வெளிவரும் இந்த நாவலை ஒரு இருபத்தியோரு நாட்களில் 1984ல் மைசூரில் த்வன்யா லோகாவில் உட்கார்ந்து வேறு ஒரு சிந்தனையும் இல்லாது எழுதினேன். இருபது இருபத்தைந்து ஆண்டுகளாக மனத்தில் ஊறிக் கொண்டிருந்த விஷயம், எனவே சுலபமாக தங்கு தடையின்றி ஓடியது. இதைச் சரித்திரம் என்றோ, இப்படித்தான் நடந்தது என்றோ சொல்ல நான் முன்வரவில்லை. இப்படியும் நடந்திருக்கலாமோ என்கிற நினைப்பில் எழுதிய நாவல். சரித்திர உண்மைகள் என்றே கபாலி கோயில், மைலாப்பூர், திருவான்மியூர் என்கிற பெயர்கள் அப்போது இருந்தனவா, என்பதெல்லாம் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. மனிதர்கள் இருந்தார்கள்.
க.நா.சு எனப்படும் கந்தாடை நாராயணசாமி சுப்ரமணியம் தஞ்சை வலங்கைமானில் பிறந்தவர். எழுத்தாளராக வாழ்வது என்ற முடிவை இளம் வயதிலேயே தேர்ந்துகொண்டு வாசிப்பிலும் எழுத்திலும் நிறைவடைந்தார்.
க.நா.சு படைப்புகளில் சர்மாவின் உயில், வாழ்ந்தவர் கெட்டால், ஒருநாள், பொய்த் தேவு, அசுரகணம் முதலான பல நூல்கள் முக்கியமானவை. தமிழ் இலக்கியம் உலக இலக்கியத்திற்கு நிகராக நிற்க வேண்டும் என்ற கவலையில், தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்திலும், பல உலக இலக்கியங்களைத் தமிழுக்கும் மொழியாக்கம் செய்தார்.
சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை மொழிபெயர்ப்பு, விமர்சனம் முதலான பல துறைகளிலும் தரமாக இயங்கிய க.நா.சு தன் காலத்திற்கு மேலான பல பரிசோதனை முயற்சிகளைச் செய்திருக்கிறார். ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi - Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார்.
நவீன இலக்கிய முயற்சிகளுக்கான சங்கமாகச் செயல்பட்ட மணிக்கொடியின் முக்கிய அங்கத்தினர் இவர். 1986ஆம் ஆண்டு அவரது “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்றார். தமிழக அரசின் விருது, குமாரன் ஆசான் விருது போன்றவற்றால் கௌரவிக்கப்பட்டார்.
1988ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி டெல்லியில் மறைந்தார். 2006ம் ஆண்டு அவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடமையாக்கியது. தமிழ் எழுத்தாளர் மற்றும் நாடக நடிகரான பாரதி மணி க.நா.சு வின் மருமகன்.
ஜோசப் வந்தார் - கற்பனையும் , உண்மையும் கலந்த ஒரு புணைவு நெடுங்கத்தை.
எனது முந்தைய வாசிப்பான் க.நா .சு-வின் ஒரு பொழுது அக்கிரகாரம் என்று சொல்லக்கூடிய பிராமிணய பின்புலத்தோடு எழுத பட்ட ஒன்று என்றால்
ஜோசப் வந்தார் - சமூக நீதியை ஒத்த, மேல் ஜாதி என்று கூவ கூடிய பார்ப்பனிய ஏற்ற தாழ்வு மனநிலையை தனது புனைவு கதை மாந்தர்கள் மூலம் நிர்முலம் செய்கிறார்
மூன்று முக்கிய கதை உரையாடல் மொழி - பிராமணீய, கிருத்துவ, மற்றும் சாதாரண தமிழ் கருத்து மொழி கதை ஓட்டத்தை மேம்படுத்துகிறது. திருவள்ளுவர்/வாசுகி, இயேசு-ஜோசப் , பிராமணீய குடும்பம் மற்றும் அன்பு, சமூக நீதி , சமநிலை தர்க்கம் தான் கதை கரு
திருவள்ளூர் என்கிற ஜென் வழி மனிதன் மற்றும் அவன் வழி தீண்டாமையின் குரல் செயின்ட் ஜோசப்-பின் கிருத்துவ மத மாற்ற பின்னணி சூழல் மற்றும் அன்பு
என்னக்கு இன்னும் இந்த ஏற்ற தாழ்வு சமூக அளவில் இருப்பதாக தெரியவில்லை ஆனால் மக்கள் மனதில் இன்னும் இந்த கனல் இருக்கிறது - என்பது ஒரு வலி