பெரியார் என்றால் நம் நினைவிற்கு வருவது சமூக நீதி, பெண்ணுரிமை, பிராமணிய அதிகார எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு. ஆனால் அறிவியல் பற்றியும் இவர் பல தகவலை கூறியுள்ளார். அறிவியல் & விஞ்ஞானம் பற்றி "இனி வரும் உலகம்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையும் எழுதி இருக்கிறார்.
மனித மூளையில் உள்ள Hippocampus பகுதி செய்யும் வேலை என்னவென்றால் கடந்த காலத்தில் நடந்த தகவல்களை சேகரித்து கற்பனையான ஒரு எதிர்காலத்தை பற்றி வகுக்கும்.
அது போல தான் Aldous Huxley's Brave New world, George Orwell's 1984 போன்ற நாவல்கள் வருங்கால உலகம் எப்படி இருக்கும் என்பதை பற்றி விவரித்து இருப்பார்கள். ஏறத்தாழ அதில் சொல்லப்பட்ட கூற்றுகள் இன்று நிதர்சனமாக நிகழ்கின்றவை.
உதாரணம் : surveillance/கண்காணிப்பு
(Big brothers reference from 1984 Novel, இன்று : America's National Security Agency)
பெரியார் 1943 நடந்த ஒரு சுயமரியாதை திருமணத்தில் 'இனி வரும் உலகம்' சொற்பொழிவை நடத்தினார். அறிஞர் அண்ணாவும் உடன் இருந்தார். பெரியாரின் பேச்சை கேட்டு வியந்தார்.
ஆண்-பெண் சேர்க்கை இல்லாமலேயே IVF (In-Vitro Fertilization) மருத்துவ முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று சொன்னார். இவர் சொன்னது 1943ல். IVF முறை கண்டுபிடிக்க பட்டது 1977. Robert Edwards என்பவருக்கு இந்த கண்டுபிடிப்பிற்காக 2010 நோபல் பரிசு கிடைத்தது.
இது போல பல விஷயங்களை பெரியார் கூறியுள்ளார் - Composite material, பெட்ரோலுக்கு பதில் மின்சார சக்தி உபயோகிப்பு கொண்ட மோட்டார் கார் (Tesla cars now), Mobile/Laptop, Online video call, CRISPR எனும் மரபணு திருத்தும் போன்றவை அடக்கம்.
பெரியாரின் தொலைநோக்கு பார்வையை கண்டு மெச்சுவதை தவிர வேறொன்றும் எனக்கு தோன்றவில்லை.