எழுத்தாளர் எஸ்.ராவின் தளத்தில் , ஆசி கந்தராஜாவின் "கருத்தகொழும்பான்" என்ற கட்டுரை தொகுப்பு பற்றிய குறிப்பை வாசித்தபோது , அந்த புத்தகத்தை தேடியவுடன் இணையத்தில் கிடைத்தது. கிளி மாஞ்சாரோ மலை தொடர்கள் எந்த நாட்டில் உள்ளது ? முருகைக்காயில் காணப்படும் மிகுதியான தாது எது ? பனை , பாக்கு , பேரிச்சை மரங்களில் ஆண் , பெண் மரங்களின் வித்யாசம் . ஏவியன் ரிப்ரோடுக்ஷன் எனப்படும் பறவைகளின் கருத்தரித்தல் முதலிய பல தகவல்களை சுவைபட எழுதியுள்ளார். பணிநிமித்தம் எத்தியோப்பியா , தன்சானியா , கென்யா முதலிய நாடுகளுக்கு சென்றுள்ளதால் அந்நாடுகளை பற்றியும் , அங்குள்ள உணவு பழக்கம் , அதன் வரலாறு முதலியன பற்றியும் தொட்டுச்செல்கிறார். அறிவியல் பின்புலம் உள்ள அனைவருக்கும் இந்த தகவல்கள் படிப்பதற்கு சுவாரசியம் உள்ளதாக இருக்கும், மேலும் இணையத்தில் பல தகவல்கள் தேடி படிக்கவும் வழி செய்யும்.