அடிப்படை தேவைகள் தீர்ந்த மனிதன் தன் ஈகோவை திருப்திபடுத்த எந்த எல்லைக்கும் செல்வான்.
வாழும் இடத்தில் தனக்கெனக் கிடைத்த முக்கியத்துவம் புது மனித வருகையால் குறையுமோ என்ற பயமே உள்ளுக்குள் உறைந்து இருக்கும் குரூரத்தை வெளிக் கொண்டு வரும்.
வனமாலியின் தாயால் எழுந்த உரிமைபோராட்டம் கமலிக்கும் அவளின் தாயிற்கும் தீரா இழப்புகளைக் கொடுத்தாலும் வாழ்க்கை சுழலில் மறைந்து போகாமல் இருக்க அவர்களிடம் இருக்கும் செல்வம் துணை புரிகிறது.
தொடர் குடும்பப் பிரச்சனைகளும் அதில் இருந்து யாரையும் யாரும் விட்டுக் கொடுக்காமல் தீர்வு ஏற்படுத்த முயல்வதும் தான் மையம்.
நல்ல எழுத்தோட்டம் தொடக்கம் முதல் முடிவு வரை சீராகச் செல்கிறது.
கதையில் நிமர்வு என்ற வார்த்தையைக் காட்டியது வெறும் அர்த்தமில்லா வார்த்தையாகவே படுகிறது அதற்கான காட்சியமைப்பு எதுவும் கதையில் காட்டப்படாமல் போனதால்.பணம் இருப்பதால் கமலியை சார்ந்தவர்கள் தனித்து நிற்கிறார்கள் அது இல்லாததால் சார்ந்து வாழும் பமீலாவிற்குப் பதட்டமும் ஆங்காரமும் எழுகிறது இது தான் நிதர்சனம்.